Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்!
Page 1 of 1
ரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்!
ரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்!
கோவர்தனன்பாபு, Ciicindia.com, நிதி ஆலோசகர்.
மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் என்பது கொஞ்சம் குறைவுதான். என்றாலும் அந்த ரிஸ்க்கையும் குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கான மூன்று மந்திரங்கள் உள்ளன.
அந்த மூன்று மந்திரங்கள் என்னென்ன தெரியுமா?
*எஸ்ஐபி
*எஸ்டபிள்யூபி
*எஸ்டிபி
இந்த மூன்று மந்திரங்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
எஸ்ஐபி (Systematic Investment Plan)
எஸ்ஐபி என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். அதாவது, முறையாக தொடர்ந்து சீரான இடைவெளியில் முதலீடு செய்யும் முறை. ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வது. பொதுவாக, பங்குச் சந்தை சார்ந்த எல்லா வகை மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் இந்த எஸ்ஐபி வசதி இருக்கிறது.
உதாரணமாக, மாதாமாதம் 10-ம் தேதி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டில் ஒருவர் ரூ.1,000 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஒருமுறை, காசோலை கொடுத்து இசிஎஸ்-க்கு பதிவு செய்துவிட்டால், அதில் குறிப்பிட்டுள்ள காலத்துக்கு வங்கிக் கணக்கிலிருந்து டெபிட் செய்து, மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் யூனிட்டுகளாக வரவு வைத்துவிடுவார்கள். எஸ்ஐபி முதலீட்டினை நீங்கள் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை எனில், அந்தத் தகவலை முதலீடு செய்துவரும் ஃபண்ட் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினால், அடுத்த மாதத்திலிருந்து நிறுத்திவிடுவார்கள்.
இப்படி முதலீடு செய்யும் தொகையை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். நாம் செய்த முதலீட்டினை மொத்தமாகவோ, பகுதியாகவோ அல்லது லாபத்தை மட்டுமோ எடுத்துக்கொள்ளலாம். விற்கப் படும், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் மதிப்புக்கான தொகையை, வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள்.
மாத வருமானம் பெறு பவர்களுக்கு இந்த எஸ்ஐபி திட்டம் மிகவும் ஏற்றது. பங்குச் சந்தை முதலீட்டில் உள்ள ரிஸ்க்கைக் குறைப்பதற்கு இந்த எஸ்ஐபி முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒருவர் தன்னுடைய முதலீட்டுத் திறனுக்கேற்பவும் எதிர்காலத் தேவைக்கேற்பவும் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம். ஒருவரது மாத குடும்பச் செலவு, டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பி ரீமியம் மற்றும் கடனுக்கான இஎம்ஐ போக மீதமுள்ள தொகையை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம்.
அதேபோல, ஒருவர் எத்தனை திட்டங்களில் வேண்டுமானாலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய லாம். என்றாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.
ஒருவர் எப்போது வேண்டு மானாலும் எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கலாம் என்றாலும் இளம் வயதிலேயே நீண்ட கால நோக்கில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யத் தொடங்கிவிடுவது நல்லது.
எஸ்டபிள்யூபி (Systematic Withdrawal Plan)
எஸ்டபிள்யூபி என்பது சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான். அதாவது, முறையாக தொடர்ந்து சீரான இடைவெளியில் பணம் திரும்பப் பெறும் திட்டம்; ஒரு பெரிய தொகையை ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் திரும்பப் பெறுவதாகும். பொதுவாக, எல்லா வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் எஸ்டபிள்யூபி வசதி இருக்கும்.
உதாரணமாக, டாடா பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.1,00,000 முதலீடு செய்துவிட்டு, மாதா மாதம் 10-ம் தேதி, அந்த ஃபண்டிலிருந்து ரூ.1,000 திரும்பப் பெறுவது எஸ்டபிள்யூபி ஆகும். இப்படிப் பணத்தைப் பெற ஒருமுறை எழுதி தந்துவிட்டால், அதில் குறிப்பிட்டுள்ள காலத்துக்கு அல்லது நம் கணக்கில் பணம் இருக்கும் வரை, மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் டெபிட் செய்து, வங்கி கணக்கில் கிரெடிட் செய்வார்கள். பணத்தைத் திரும்ப பெற்றது போதும் என்று நீங்கள் நினைத்தால், தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு நீங்கள் எழுதித் தந்தால் போதும், உடனே நிறுத்திவிடுவார்கள். மீண்டும் எப்போது உங்களுக்கு பணம் வேண்டுமோ அப்போது கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து லிக்விட் ஃபண்ட், இன்கம் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஈக்விட்டி ஃபண்டுகளில் நல்ல செயல்திறன் உள்ள திட்டங்களில் சிலவற்றை தேர்வு செய்து முதலீடு செய்யவும்.
பெரிய தொகை கையில் உள்ளவர்கள், முதலீடு செய்து அதன் மூலம் மாதாமாதம் பணம் வேண்டுவோருக்கு இந்த வசதி மிகவும் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த வசதி மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
அதிக வருமானம் பெற இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை எஸ்டபிள்யூபி திட்டத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம். என்றாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.
எப்போது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் முக்கியமான விஷயம். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள் எனில், லார்ஜ் கேப் பிரைஸ் ஏர்னிங் (பி.இ) ரேஷியோவைப் பார்த்து முதலீடு செய்யவும். குறைவான பி.இ. ரேஷியோ இருக்கும்போது, ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எஸ்டிபி (Systematic Transfer Plan)
எஸ்டிபி என்பது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான். அதாவது, முறையாக தொடர்ந்து பணம் டிரான்ஸ்ஃபர் செய்யும் திட்டம். பெரிய தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வேறு ஒரு திட்டத்துக்கு மாற்றுவது. பொதுவாக, எல்லா வகை மியூச்சுவல் பண்ட் திட்டங் களிலும் எஸ்டிபி வசதி இருக்கிறது.
உதாரணமாக, இப்போது ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் திட்டத்தில் ரூ.1,00,000 முதலீடு செய்துவிட்டு, மாதாமாதம் 10-ம் தேதி, அந்தத் திட்டத்திலிருந்து ரூ.1,000 ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா திட்டத்துக்கு பணம் மாற்றுவது. ஒருமுறை எழுதிக் கொடுத்து விட்டால், அதில் குறிப்பிட்டுள்ள காலத்துக்கு அல்லது ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் கணக்கில் பணம் இருக்கும் வரை மாற்று வார்கள். வேண்டாம் என்கிற போது எழுதிக் கொடுத்து விட்டால் மாற்றுவதை நிறுத்தி விடுவார்கள்.
ஒரு வருட ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, லிக்விட் ஃபண்ட், இன்கம் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஈக்விட்டி ஃபண்டுகளில் நல்ல செயல்திறன் உள்ள திட்டத்தைத் தேர்வு செய்து மொத்தமாக முதலீடு செய்து, சிறு தொகையை மாதாமாதம் மற்ற நல்ல செயல்திறன் உள்ள திட்டத்துக்கு மாற்றலாம்.
பெரிய தொகை கையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும். முதலீட்டு மூலமான வருமானம் தற்போதைக்கு தேவை இல்லாதவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
ரிஸ்க்கைக் குறைக்க விரும்பு கிறவர்கள் இந்த வசதியை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் சமயத்தில் முதலீட்டை பாதுகாக்கும் விதமாக ரிஸ்க் குறைவான திட்டங்களில் (டெப்ட் ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள்) மொத்த முதலீட்டை மேற்கொண்டு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ரிஸ்க் அதிகமுள்ள (ஈக்விட்டி ஃபண்டுகள்) ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்ற விரும்பு கிறவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தங்களிடம் உள்ள நீண்ட கால முதலீட்டு தொகையை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவர் எத்தனை திட்டங்களில் வேண்டுமானாலும் எஸ்டிபி மூலம் முதலீடு செய்யலாம் என்றாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.
எல்லா நேரங்களிலும். குறைவான பி.இ. ரேஷியோ இருக்கும்போது, பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து விட்டு, லிக்விட் ஃபண்டுகளுக்கு மாற்றலாம். அதிக பி.இ. ரேஷியோ இருக்கும்போது, லிக்விட் ஃபண்டு களில் முதலீடு செய்து ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றலாம்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வெற்றிக்கு வழிகாட்டும் முதலீட்டு மந்திரங்கள்
» பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை!
» பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?
» எஸ்.ஐ.பி(SIP)., எஸ்.டி.பி.(STP), எஸ்.டபிள்யூ.பி(SWP): முத்தான மூன்று வழிகள் !
» எஃப்எம்பி ஃபண்டுகள்... எஃப்டி-யைவிட அதிக வருமானம்!
» பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை!
» பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?
» எஸ்.ஐ.பி(SIP)., எஸ்.டி.பி.(STP), எஸ்.டபிள்யூ.பி(SWP): முத்தான மூன்று வழிகள் !
» எஃப்எம்பி ஃபண்டுகள்... எஃப்டி-யைவிட அதிக வருமானம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum