Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இதையும் கவனியுங்க! ஹெல்த் இன்ஷூரன்ஸ் இன்ஃபோ
Page 1 of 1

எவ்வளவு கவரேஜ்?
உங்கள் வருட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், 5 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். வருட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், எவ்வளவு வருமானமோ அதற்கு இணையான தொகைக்கு பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோ கிளைம் போனஸ்!
குறிப்பிட்ட ஆண்டில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் எந்தவித கிளைமும் செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு அதே பிரீமியத் தொகைக்கு கூடுதல் கவரேஜ் கிடைக்கும். இந்த நோ கிளைம் போனஸ் 5 முதல் 50 சதவிகிதம் வரைக்கும் கிடைக்க வாய்ப்புண்டு.
பாலிசி நடப்பில் இருந்து, பிரீமியத் தொகை சரியான நேரத்தில் செலுத்தியிருக்க வேண்டும்; இதற்கு முன்பு பாலிசித் தொகையில் கிளைம் செய்திருக்கக் கூடாது என்கிற நிபந்தனையின் அடிப்படையில்தான் நோ கிளைம் போனஸ் இருக்கும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி!
ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், அந்த பாலிசியை மற்றொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்வதுதான் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி. ஜெனரல் இன்ஷூரன்ஸ் அல்லது மருத்துவ பாலிசி மட்டுமே தரும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட பாலிசியை மட்டும்தான் இப்படி மாற்றிக்கொள்ள முடியும். பாலிசியை புதுப்பிக்கும்போது, இப்படி மாற்றிக்கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் எதுவும் குறையாது.
நடப்பில் இருக்கும் பாலிசி காலாவதி ஆவதற்கு 45 நாட்களுக்கு முன்பு நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பித்து பதினைந்து நாட்களுக்குள் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களது பாலிசியை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
வரிச் சலுகை!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரி விலக்கு உண்டு.
வரிச் சலுகை கிடைக்க பிரீமியத் தொகையை பணமாக கட்டியிருக்கக் கூடாது. காசோலை, டி.டி. மூலம்தான் கட்டியிருக்க வேண்டும்.
தனிப்பட்ட நபர் அல்லது குடும்பத்துக்கு நிதி ஆண்டில் அதிகபட்சம் 15,000 ரூபாய் பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். இதில் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை குறிக்கும்.
தனிப்பட்ட நபர் ஒருவர், தனது பெற்றோரான அப்பா மற்றும் அம்மாவிற்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத் தொகைக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம். இதுவே, பெற்றோர், மூத்த குடிமக்கள் எனில் பிரீமியத்தில் 20,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம்.
கேஷ்லெஸ் வசதி!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரையில் கேஷ்லெஸ் வசதி இருப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது. கேஸ்லெஸ் எனில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேரும்போது நாம் பணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. கேஷ்லெஸ் வசதி இல்லை என்றால் நாம் பணம் கட்டி செலவு செய்துவிட்டு பின்னர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தேர்டு பார்ட்டி அட்மினிஸ்ட்ரேஷன் மூலம் கிளைம் செய்து வாங்கிக்கொள்ள வேண்டும். இதில் இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, சிகிச்சைக்கான லட்சக்கணக்கான ரூபாயை உடனடியாக புரட்ட வேண்டி இருக்கும்; அடுத்து, பணத்தை செலவு செய்துவிட்டு கிளைம் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற பயம் கைக்கு பணம் வரும் வரைக்கும் இருக்கும்!
இன்ஷூரன்ஸ் புகாருக்கு ஆம்புட்ஸ்மேன்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இன்ஷூரன்ஸ் தொடர்பான சம்பந்தப்பட்ட குறைகளை முறையிட சென்னையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்தை அணுகலாம்.
சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களது புகாரை வாங்க மறுத்தாலோ, நீங்கள் புகார் தெரிவித்து ஒரு மாதக் காலம் வரை
பதில் கூறாமல் இருந்தாலோ அல்லது பாலிசிதாரர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பதிலில் திருப்தி அடையவில்லை என்றாலோ இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்திடம் புகார் தெரிவிக்கலாம். இன்ஷூரன்ஸ் நிறுவனம் பதிலளித்த ஒரு வருடத்திற்குப் பிறகு புகார் தெரிவிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட புகார், வழக்காக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தாலோ, நுகர்வோர் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்தாலோ புகார் தெரிவிக்க முடியாது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன், ஆபீஸ் ஆஃப் த இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்,
ஃபாத்திமா அக்தார் கோர்ட், 4வது மாடி, 453 (பழைய எண் 312),
அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.
தொலைபேசி எண் : 044 2433 3668 / 5284 பேக்ஸ் : 044 2433 3664
- ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா புதிய அம்சங்களுடன் மறு அறிமுகம்
» ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
» புகைபிடித்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum