Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பின்... செய்ய வேண்டியவை!
Page 1 of 1

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என கடந்த இதழில் விளக்கமான கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த பல ஆயிரக்கணக்கான வாசகர்கள், நாங்கள் ஏற்கெனவே பல பாலிசிகளை எடுத்துவிட்டோம். இந்த பாலிசிகளை இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு அவசியம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.
தங்க விதி!
நாம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே ஆபத்தான காலத்தில் அது நம் குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவிகரமாக இருக்கும் என்பதற்காகத்தான். ஆனால், நாம் சரியாக பிரீமியம் கட்டாவிட்டால் நாம் எடுத்த பாலிசிக்கான கவரேஜ் கிடைக்காமல் போய்விடும். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரீமியத்தைக் கட்டிவந்து ஒரே ஒருமுறை பணம் கட்டாதபோது அசம்பாவிதம் நடந்தால்கூட இழப்பீடு கிடைக்காமல் போய்விடும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் பிரீமியம் பணத்தை கட்டாமல் இருக்கக்கூடாது.
தப்பான பாலிசியா?
'சூப்பர் லாபம் தரப் போகிற இந்த பாலிசி இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சிடுது. அதன்பிறகு சேரவே முடியாது’ என பிரயோஜனம் இல்லாத பாலிசியை உங்கள் தலையில் ஏதோ ஒரு ஏஜென்ட் கட்டியிருந்தால், அந்த பாலிசியை ரத்து செய்ய வழி இருக்கிறது.
எந்த ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிக்கும் 'ஃப்ரீ லுக் பிரீயட்’ என்று 15 நாட்கள் இருக்கிறது. இந்த நாட்களுக்குள் ஒரு பாலிசி பிடிக்கவில்லை என்றால் அதை ரத்து செய்துவிடலாம். நிர்வாகச் செலவு போக மீதித் தொகையை தந்துவிடுவார்கள். இந்த 15 நாட்கள் என்பது பாலிசி பத்திரம் உங்கள் கைக்கு கிடைத்த தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
பாலிசி பத்திரம் கையில் கிடைத்தவுடன் முதலில் அதிலுள்ள உங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரி பாருங்கள். பாலிசிதாரர் பெயர், நாமினி பெயர், உங்களின் பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியாக இல்லை எனில் உடனடியாகத் திருத்தி வாங்குங்கள். இழப்பீடு கோரும்போது பாலிசி பத்திரத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அலையாய் அலைய வேண்டும்.
நாமினி முக்கியம்..!
பாலிசி பத்திரத்தில் நாமினி பெயர் குறிப்பிடப்பட்டிருக் கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது விடுபட்டி ருந்தால் அவசியம் சேர்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் ஏதாவது திடீர் அசம்பாவிதம் நடந்தால் இழப்பீட்டுத் தொகை உரிய குடும்ப உறுப்பினருக்குப் போய் சேரும்.
திருமணமாகாத இளைஞர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நாமினியாக தாய் அல்லது தந்தையார் பெயரை காட்டுவது வழக்கம். ஆனால், திருமணமான பிறகு நாம் எடுத்த பாலிசியின் நாமினியாக மனைவி அல்லது பெற்றோர், இந்த இருவரில் யாரை நியமிப்பது என்பதை அவரவர் இஷ்டப்படி முடிவு செய்து அதற்கேற்ப நாமினி பெயரை பாலிசியில் குறித்து வைப்பது அவசியம்.
குடும்பத்துக்குச் சொல்லுங்க..!
இது மிக முக்கியம். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பலரும் அதுபற்றிய விவரங்களை குடும்ப உறுப்பினர்களிடம் சொல்வது கிடையாது..! நீங்கள் எடுத்திருக்கும் பாலிசிகள் பற்றிய அத்தனை விவரங்களையும் (பாலிசி எண், கவரேஜ், பாலிசி எடுக்கப்பட்ட அலுவலகம், ஏஜென்டின் தொலைபேசி எண்) போன்றவற்றை ஒரு டைரியில் குறித்து மனைவியிடம் கொடுத்து வைப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரத்தை வீட்டில் எங்கே வைத்திருக்கிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு அல்லது மகன்/மகளுக்குத் தெரியப்படுத்துங்கள். குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் பட்சத் தில், இழப்பீடு கோருவதற்கு இந்த விஷயங்கள் எல்லாம் அவசியம் தேவைப்படும்.
தப்பான பாலிசியை சரண்டர் செய்யுங்க!
ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் நாமே விரும்பி ஒரு பாலிசி எடுத்திருக்கலாம். அல்லது யாரோ சொன்ன பொய்களை நம்பி பாலிசி எடுத்திருக்கலாம். இந்த பாலிசியை எடுத்துவிட்ட ஒரே காரணத்திற்காக அதை நாம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அந்த பாலிசியை இனியும் வைத்திருப்பது வீண்தான் என்று நாம் முடிவு செய்வோம் எனில் அதை சரண்டர் செய்து விட்டு, வேறு பொருத்தமான பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சரண்டர் செய்யும்போது நமக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதையும் மறக்கக்கூடாது. ஆயுள் காப்பீட்டு பாலிசி எதுவாக இருந்தாலும் மூன்றாண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் கட்டிய பிரீமியத்தில் பாதிகூட கிடைக்காது என்பது முக்கியமான விஷயம். அந்த நஷ்டத்தை நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயார். ஆனால், மேற்கொண்டு பாலிசியை தொடர விருப்பமில்லை என்கிறவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று இனி பார்ப்போம்.
டேர்ம் பிளான்!
சரியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் அது டேர்ம் பிளான்தான். இதில், பிரீமியம் மிகக் குறைவு. ஆனால், கவரேஜ் அதிகம். இந்த பாலிசியில் முதிர்வின்போது எதுவும் கிடைக்காது என்பதால் பலரும் இதை எடுக்க தயங்குகிறார்கள்.
இந்த பாலிசியின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே. எனவே, இந்த பாலிசியை எடுத்த யாரும் சரண்டர் செய்யத் தேவையில்லை. அப்படியே செய்தாலும், சரண்டர் மதிப்பு எதுவும் கிடைக்காது.
பிரீமியம் கட்டுவதற்கான கிரேஸ் பிரீயட் தாண்டியும் (மாத பிரீமியம் என்றால் 15 நாட்கள் மற்ற காலத்துக்கு 30 நாட்கள்) பிரீமியம் கட்டவில்லை என்றால் அந்த பாலிசி தானாகவே ரத்தாகிவிடும். எனவே, டேர்ம் பிளானில் சரியான நேரத்தில் பிரீமியத்தைக் கட்டுவது மிக முக்கியம்.
எண்டோவ்மென்ட் பாலிசி..!
இந்த பாலிசியில் பிரீமியம் அதிகமாகவும் கவரேஜ் குறைவாகவும் இருக்கும். பாலிசி முதிர்வின்போது சுமார் 5% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம். அதாவது, மாதாமாதம் இதில் கட்டி வருகிற பணத்தை தபால் அலுவலகச் சேமிப்பில் கட்டினால்கூட இந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட சற்று அதிகமாகவே கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை!
மூன்றாண்டுகளுக்கு முன் இந்த பாலிசியை சரண்டர் செய்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது. மூன்றாண்டு களுக்குப் பிறகு பாலிசிக்கு 'பெய்ட் அப் வேல்யூ’ என்கிற ஒரு மதிப்பு ஏற்படும். அப்போது பிரீமியம் கட்டுவதில் சற்று காலதாமதமானாலும் இடைப்பட்ட காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கட்ட வேண்டிய பிரீமியத்தைக் கழித்துக் கொண்டு மீதியை இழப்பீடாக வழங்க வாய்ப்பு இருக்கிறது.
யூலிப் பாலிசி!
பங்குச் சந்தை நல்ல வளர்ச்சிகண்ட நேரத்தில் அதிகமானவர்கள் விவரம் தெரியாமல் இந்த யூலிப் பாலிசியை எடுத்து, கையைச் சுட்டுக் கொண்டார்கள். பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து இந்த பாலிசியில் பணம் கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்கலாம்.
இந்த பாலிசியை எடுத்தவர்கள் மேற்கொண்டு தொடர விருப்பமில்லை எனில், சந்தை சரிந்திருக்கும்போது அதை சரண்டர் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் இழப்பு அதிகமாக இருக்கும். சந்தை மீண்டும் உச்சத்திற்கு வரும் வரை காத்திருந்து சரண்டர் செய்வதே நல்லது. சந்தை நன்கு செயல்படும் காலத்தில் ஈக்விட்டி ஆப்ஷனிலும், சந்தை சரியத் தொடங்கும் சமயத்தில் டெப்ட் ஆப்ஷனிலும் உங்கள் முதலீட்டை மாற்றிக் கொள்வது அவசியம்.
இந்த பாலிசியை பொறுத்த வரையில் பிரீமிய ஒதுக்கீடு கட்டணம், ஃபண்ட் நிர்வாகக் கட்டணம், ஏஜென்ட் கட்டணம் என ஆரம்ப ஆண்டுகளில் அதிகத் தொகை சென்றுவிடும். மூன்றாவது ஆண்டுக்குப் பிறகு இந்த கட்டணம் குறையத் தொடங்கும். ஆனால், பல ஏஜென்டுகள் மூன்று வருடம் பிரீமியம் கட்டினால் போதும் என்று சொல்லியிருப்பார்கள். அதன்படி நடந்தால் முதலுக்கே நஷ்டம் வரும்.
யூலிப் பாலிசிகளை பொறுத்தவரை நீங்கள் மூன்று ஆண்டுகளோடு பிரீமியம் கட்டுவதை நிறுத்தினால், அடுத்து வரும் ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் கவரேஜ்கான தொகை, உங்கள் முதலீட்டு யூனிட்கள் விற்கப்பட்டு ஈடு கட்டப்படும். கூடவே, பங்குச் சந்தையும் இறங்கி, யூனிட்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கும் பட்சத்தில் லாபம் என்பதே இருக்காது. தொடர்ந்து பிரீமியம் கட்டாதபோதும், சந்தையும் மிகவும் இறங்கி, இன்ஷூரன்ஸ் கவரேஜ்க்கு எடுக்க யூனிட்கள் இல்லை என்றால் பாலிசி தானாகவே காலாவதியாகிவிடும்.
பெய்ட் அப் வேல்யூ..!
உங்களால் தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால் குறைந்தது மூன்றாண்டுகள் பிரீமியம் கட்டிவிட்டு பாலிசியை 'பெய்ட் அப் வேல்யூ’-ஆக மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, அதுவரைக்கும் நீங்கள் கட்டியிருக்கும் பிரீமியத் தொகை மற்றும் பாலிசி இன்னும் நடைமுறையில் இருக்கும் ஆண்டுகளைப் பொறுத்து பாலிசிக்கான கவரேஜ்-யைக் குறைத்து அதை செயல்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இம்முறையில் இன்ஷூரன்ஸ் கம்பெனி அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் முதலீட்டு தொகையை முதலீட்டாளருக்குத் திரும்ப அளிப்பதற்குப் பதில் அதை ஒரு தொகுப்பு நிதியாக கருதி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் கவரேஜ்கான தொகையை அதிலிருந்து எடுத்துவரும். 2010-க்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கும் யூலிப் பாலிசிகளில் இந்த வசதி கிடையாது. தொடர்ந்து பிரீமியம் கட்டவில்லை என்றால் பாலிசி காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவரேஜ் குறைப்பு மற்றும் அதிகரிப்பு!
ஆரம்பத்தில் கட்டிய பிரீமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியவில்லை என்றால் பாலிசியை காலாவதியாக விடுவதற்குப் பதில், பாலிசியின் கவரேஜை குறைத்து பிரீமியத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி செய்வதால் பாலிசி காலாவதியாகாமல் தடுக்கலாம்.
தேவையான கவரேஜ்!
நீங்கள் எடுத்திருக்கும் பாலிசிகள் அளிக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்களுக்குப் போதுமானதா என்பதைப் பாருங்கள். நண்பர் ஒருவர் மொத்தம் ஐந்து இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து ஆண்டுக்கு 20,000 ரூபாய் பிரீமியம் கட்டி வந்தார். அவரின் மொத்த பாலிசி கவரேஜ் வெறும் மூன்று லட்ச ரூபாய்க்குள்தான். இப்படி கவரேஜ் குறைவாக உள்ள பாலிசிகளை தவிர்த்து, குறைவான பிரீமியம், அதிக கவரேஜ் பாலிசிகளை எடுப்பதே நல்லது. கடந்த 2010-11-ம் நிலவரப்படி இந்தியர்கள், எடுத்திருக்கும் சராசரி ஆயுள் காப்பீடு 1.83 லட்ச ரூபாயாகவே இருக்கிறது.
நம்மவர்களில் பலர் வேலைக்குச் சேர்ந்தபோது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பார்கள். அந்த பாலிசியை அப்படியே தொடரவும் செய்வார்கள். அது தவறு... சம்பளம் கூடும்போது, பதவி உயர்வு கிடைக்கும்போது, கல்யாணமான பிறகு, பிள்ளைகள் பிறந்த பிறகு, சொந்த வீடு கட்டிய பிறகு, கார் வாங்கிய பிறகு என பல கட்டங்களில் உங்களின் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகரித்து வருவது மிக முக்கியம்.
வரிச் சலுகை தொடர..!
புதிதாக பாலிசி எடுப்பவர் கள், ஆண்டு பிரீமியத்தைப் போல் குறைந்தபட்சம் இருபது மடங்கு கவரேஜ் அளிக்கும் பாலிசிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் புதிய நேரடி வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வந்தாலும் வருமான வரிச் சலுகையைத் தொடர்ந்து பெற முடியும்.
ஒருவர், ஓராண்டில் அவரின் அரை மாதச் சம்பள அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் கட்டுவது போல் வைத்துக் கொண்டால் சிக்கல் எதுவும் வராது என்பது பெரும்பாலான நிதி ஆலோசகர் களின் கருத்தாக இருக்கிறது.
திட்டமிடுங்கள்.. உங்களை யும், உங்கள் பாலிசியையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!
ந .விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
» டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum