Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
Page 1 of 1

இயற்கை சீற்றம் என்பது எதிர்பாராத ஒன்று. அதனைத் தடுத்து நிறுத்துவது நம் கையில் கிடையாது. வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். சில இடங்களில் வீடுகளில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வீடு, சுற்றுச் சுவர்கள் தரைமட்டமானது. இதனால், லட்சக் கணக்கில் சேதம் உண்டானது. கடந்த வருடம், பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சென்னை மக்கள், இந்த ஆண்டு பெரும் புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள். அடிக்கடி நடக்கும் இது போன்ற இயற்கைச் சீரழிவுகளிலிருந்து நம் வீட்டையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) எடுப்பதுதான்.
பொதுவாக, நாம் இரு சக்கர வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். நமக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ஆசையாகக் கட்டிய நம் வீடுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதே இல்லை. நம் வீட்டுக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்று நினைத்து நிம்மதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், வெள்ளமோ, புயலோ வந்தால்தான் நமக்குத் தெரிகிறது, நாம் எவ்வளவு பெரிய அபாயத்தைச் சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று.
வீட்டு உரிமையாளர் பாலிசி!
ஒவ்வொரும் கட்டாயம் எடுத்திருக்க வேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முக்கியமானது வீட்டு உரிமையாளர் பாலிசி. வீட்டு உரிமையாளர் பாலிசியில் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டடத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் கவரேஜ் கிடைக்கும். இதில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்துக்கும் கவரேஜ் கிடைக்கும்.
மழை, புயல் போன்றவற்றால் வீடு இடிந்து விழுந்தால், பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும். இந்த பாலிசிக்கு, நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்.
இந்த வீட்டு உரிமையாளர் பாலிசி குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் டி.ஏ.கேசவனிடம் பேசினோம்.
“நிறுவனங்கள் தீ விபத்து, திருட்டு என தனித்தனியாக பாலிசிகளை எடுக்க முடியும். நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. காப்பீட்டுத் தொகை அதிகம். நிறுவனங்கள் தனித்தனியாக பாலிசிகளை வைத்துக்கொள்ள முடியும். ஆனால், வீட்டுக்கு தனித்தனியாக பாலிசிகளை எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு ஒருங்கிணைந்த பாலிசியாக வழங்கப்படுகிறது. பொதுவான வீட்டு உரிமையாளர் பாலிசியில் தீ விபத்துக்கான கவரேஜ் இருக்கும். வீட்டு உரிமையாளர் தீ விபத்துக்கான பாலிசியில் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பாலிசிகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவே வாடகை வீட்டில் வசிப்போர், வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள பாலிசி எடுக்க முடியும்.
தங்க நகைகள் வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ அல்லது வெளியே அணிந்து செல்லும்போது தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அதற்காகவும் காப்பீடு வழங்கப்படுகிறது. மின்சாரம், இடி, மின்னல் என இயற்கையாக ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் என எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனம் பாதிக்கப் பட்டாலும் அதற்கு இழப்பீடு கோரும் விதமாக பாலிசி வழங்கப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களினால் பாதிப்படைந்த வீட்டைச் சரி செய்ய மூன்று மாதம் ஆகும் எனில், அதுவரை, வேறு ஒரு வீட்டில் பாலிசிதாரர் வாடகைக்கு இருந்தால், அதற்கான வாடகை செலவையும் கிளெய்ம் செய்ய முடியும்.
எதற்கெல்லாம் கிளெய்ம் கிடைக்காது!
வீட்டு உரிமையாளர் பாலிசியில், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் கிளெய்ம் கிடைக்காது. ரூபாய் நோட்டுக்கள், சொத்துப் பத்திரங்கள், நிறுவனப் பங்குகளுக்கான சான்றிதழ்கள், பாண்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள், தங்க நகைகளில் சேர்க்காத வைரம் மற்றும் வைடூரியம், கல்விச் சான்றி தழ்கள், கடன் பத்திரங்கள் போன்றவை சேதம் அடைந்தால், திருடு போனால் வீட்டு உரிமையாளர் பாலிசியில் கிளெய்ம் கிடைக்காது.
எதற்கு கிளெய்ம் கோருகிறீர்களோ, அதற்கு இன்ஷூரன்ஸ் செய்து இருக்க வேண்டும். சிலர் வீட்டில் எல்லாப் பொருட்களையும் இன்ஷூரன்ஸ் செய்துள்ளேன் என்பார்கள். ஆனால், கிளெய்ம் சமயத்தில் டிவியை இணைக்க மறந்துவிட்டேன், காம்பவுன்ட் சுவரை சேர்க்க மறந்துவிட்டேன் என்று சொல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் டிவி, காம்பவுன்ட் சுவர் பாதிக்கப்பட்டால் கிளெய்ம் தரமாட்டார்கள்.
வீட்டில் தண்ணீர் தேங்கி இருந்தால் அல்லது தீ விபத்து போன்ற சம்பவங்களை போட்டோவாக எடுத்து வைத்திருப்பது நல்லது. இது கிளெய்ம் கோரும்போது உதவும். ஏனெனில் சில இடங்களில் தண்ணீர் வடிந்த பிறகு, தண்ணீர் தேங்கி இருந்ததற்கான அடையாளம் இருக்காது. ஆகையால், ஸ்பாட் போட்டோ எடுப்பது நல்லது. இதனை உங்கள் போனில் கூட எடுத்துக்கொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ் பிரீமியம்!
தங்க நகைகள் நீங்கலாக டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் இவையனைத்தும் உள்ள ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை பிரீமியம் இருக்கும். இது 30,000 ரூபாய் மதிப்புடைய டிவியை உள்ளடக்கிய தோராயமான வீட்டு உரிமையாளர் பாலிசி பிரீமியமாகும்.இதுவே டிவியின் மதிப்பு ரூ.3 லட்சம் எனில், பிரீமியம் அதிகமாக இருக்கும். தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைக்கு ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வரை பிரீமியம்” என்றார் அவர்.
நீங்களும் உங்கள் வீட்டை இன்றே பாலிசி செய்யத் திட்டமிடுவீர்!
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» டேர்ம் இன்ஷூரன்ஸ் - உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் ஸ்மார்ட் வழி!
» இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் அவசியமா?
» ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
» இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்?
» இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum