Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... பளிச் 5 வழிகள்!
Page 1 of 1
பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... பளிச் 5 வழிகள்!
கையில் பணம் இருந்தாலும்கூட, அதைப் பயன்படுத்த முடியாத நிலை வரும் என்பதை நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது அது நடந்தேவிட்டது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளிலும், நம்மால் பணம் எடுத்து செலவிட முடியாத சூழ்நிலைகளிலும் நமக்கு கைகொடுப்பது மொபைல் பேங்கிங்தான். நம்மிடம் இருக்கும் மொபைல் மூலமாகவே பணப் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு இவை எளிதாக இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும், இவற்றைப் பயன்படுத்தும்போது கவனமும் தேவை. இல்லையெனில் சைபர் குற்றவாளிகளால் நம் பணம் கொள்ளை போக வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழாமல் இருக்க, மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு டிப்ஸ்கள் இதோ...
பாஸ்வேர்டு பத்திரம்!
மொபைல் பேங்குக்கு பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதோடு, அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் போனில் இருக்கும் மொபைல் பேங்கிங் ஆப்பில், வேலை முடிந்ததும் லாக் ஆஃப் செய்து விடுங்கள். ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு கொடுத்தே உள்ளே நுழையுங்கள். இல்லையெனில் உங்கள் மொபைல் தவறானவர்களின் கைக்கு செல்லும்போது, அவர்கள் எளிதில் உங்கள் கணக்கு குறித்த விவரங்களை திருடிவிடுவார்கள். உங்கள் மொபைலுக்கும் பேட்டர்ன், பாஸ்வேர்டு ஆகியவற்றை அமைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு, பின் நம்பர் ஆகியவற்றை மொபைலில் கட்டாயம் பதிந்து வைக்காதீர்கள்.
பப்ளிக் வைஃபை வேண்டாம்!
மொபைல் பேங்கிங் பயன்படுத்தும்போது இணைய இணைப்பு தேவைப்படும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நமது சொந்த இணைய சேவை மூலமாகவோ அல்லது பாதுகாப்பான இணையம் மூலமாகவோ, அதனை இயக்குவது நல்லது. அதை விடுத்து இலவசமாக கிடைக்கும் அல்லது பொது இடங்களில் இருக்கும் வைஃபையை பயன்படுத்தாதீர்கள். இதனைப் பயன்படுத்தினால் எளிதாக வைரஸ் தாக்கவும், மூன்றாம் நபர் உங்களின் கணக்கு விவரங்களைத் திருடவும் வாய்ப்புண்டு.
தேவையற்ற லிங்க்கைத் தொடாதீர்கள்!
எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக வரும் தெரியாத அல்லது ஏமாற்றத்தக்க வகையில் இருக்கும் இணைப்புகளைத் திறக்காதீர்கள். phishing மூலம் உங்கள் மொபைல் மற்றும் கணினிகளில் எளிதில் ஹேக்கர்கள் ஊடுருவிவிடுவார்கள். வங்கி இணையதளங்களை திறக்கும்போது, அட்ரஸ் பாரில் http என இல்லாமல், https என இருக்கிறதா என்றும், அது உண்மையான வங்கியின் இணையதளம்தானா என்றும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
தெரியாத ஆப்ஸ்கள் உஷார்!
மொபைலில் தேவையான ஆப்ஸ்களை மட்டுமே வைத்திருப்பது எப்போதுமே நல்லது. அதேபோல, தேவையற்ற ஆப்ஸ்கள் எதுவும் இன்ஸ்டால் ஆகியிருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். சில இணையதளங்களை திறக்கும்போது, உங்களுக்கு தெரியாமலே சில ஆப்ஸ்கள் டவுன்லோடு ஆக வாய்ப்புண்டு. அவை மொபைலை உளவு பார்க்கவும் பயன்படுத்தப் படலாம். மொபைல் பேங்குக்கு உங்கள் வங்கியின் அதிகாரபூர்வமான ஆப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற இணையதளங்கள், ஆப்ஸ்களில் உங்களது கணக்கு விவரங்களைத் தரவும் வேண்டாம்.
ஆன்டி வைரஸ் இருக்க வேண்டும்!
கணினியில் இருப்பதைப் போலவே, உங்கள் மொபைலிலும் ஒரு ஆன்டி வைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற இணையதளங்களுக்கு நாம் செல்லும் போது நமது மொபைலை மால்வேர்களில் இருந்து இவை காக்கும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கேன்வாஸ் எக்ஸ்பிரஸ்-மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல்(MICROMAX - canvasss)
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்... பாதுகாப்பான முதலீடு, பக்கா வருமானம்!
» மொபைல் இன்ஷூரன்ஸ்...கிளைம் கிடைக்குமா?
» மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்... பாதுகாப்பான முதலீடு, பக்கா வருமானம்!
» மொபைல் இன்ஷூரன்ஸ்...கிளைம் கிடைக்குமா?
» மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum