Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வரிச் சலுகைக்காக லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறீர்களா?
Page 1 of 1
வரிச் சலுகைக்காக லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறீர்களா?
ஒரு காலத்தில் அதிகமானவர்களுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தையாக இருந்தது ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) பாலிசி. பினாயில் விற்க யாராவது நம் கதவைத் தட்டினால், எப்படித் துரத்துகிறோமோ... அப்படி ஆயுள் காப்பீடு ஏஜென்ட்களை துரத்திய காலம் ஒன்றுண்டு. காரணம், ஒருவரது இறப்புக்குப் பின் இழப்பீடு கிடைக்கும் என்பதை யாரும் ரசிக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பிரிவு 80சி-ன் கீழ் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி சலுகை ஆகும். இந்தச் சலுகை கொண்டு வந்த மாற்றம் அபாரம். நமக்கு இல்லை என்றாலும், நம் குடும்பத்துக்கு நிச்சயம் தேவை என்று கருதும் சூழ்நிலை உருவாக, வருமான வரிச் சலுகை என்கிற அவசியம் தேவையாக இருந்தது.
யார் பெயரில் எடுத்தால் வரிச் சலுகை?
வருமான வரியை மிச்சப்படுத்த, ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
இந்த வகைக் காப்பீடுகள், வருமான வரி கட்டுபவர், மனைவி, குழந்தைகள், (இவர்கள் திருமணம் முடித்திருந்தாலும், வேலைக்கு செல்பவராக இருந்தாலும் , எவ்வளவு குழந்தைகள் ஆனாலும்) என யார் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்தாலும் வரிச் சலுகை கிடைக்கும். பெற்றோர்களுக்கு எடுக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வரிச் சலுகை கோர முடியாது.
நிபந்தனை தெரியுமா?
பிரிவு 80சி-ன் கீழ், இந்தக் காப்பீட்டுக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில் ரூ.1.5 லட்சம் வரை மொத்த வருமானத்திலிருந்து வரி விலக்கு தரப்படும்.
இது எல்லோரும் அறிந்ததே. ஆனால், அறியாத விஷயம், மொத்த கவரேஜ் தொகையில் பிரீமியத் தொகை ஒரு நிதி ஆண்டில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், இந்த 10 சதவிகிதத்துக்கு மேல் செல்லும் பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை கிடையாது.
உதாரணமாக, ஆயுள் காப்பீடு பாலிசி கவரேஜ் தொகை ரூ.5 லட்சம் என்றால், ஆண்டு பிரீமியத்தில் அதிகபட்சம் ரூ.50,000-தான் (ரூ.5 லட்சத்தில் 10%) 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.
நீங்கள் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை லைஃப் இன்ஷுரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம் என்றாலும், கவரேஜ் தொகையில் பிரீமியம் அதிகபட்சம் 10% மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 1.4.2012-க்குப் பிறகு எடுத்த பாலிசிகளுக்கு இந்த 10% பொருந்தும். (பிரிவு 80சி(3)(ஏ).) 31.3.2012-க்குமுன் எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு இது 20 சதவிகிதமாக இருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்களுக்கு!
பிரிவு 80 யூ அல்லது பிரிவு 80 டிடிபியின் கீழ் வரி விலக்கு பெற நினைப்பவர்கள் (உடல் ஊனமுற்றவர் மற்றும் தீவிர நோய் பாதிப்பு), ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மேலே கூறப்பட்ட கணக்கில் 15% வரை அனுமதிக்கப்படும்.
இடையில் பாலிசியை நிறுத்தினால்!
வருமான வரிச் சலுகைக்காக இப்படி எடுக்கப்பட்ட பாலிசி, இரண்டு வருடம் தொடர்ச்சியாக பிரீமியம் கட்டப்படாமல் நிறுத்தப்பட்டால் அல்லது சிங்கிள் பிரீமியம் காப்பீடு இரண்டு வருடங்களுக்குள் குளோஸ் செய்யப்பட்டால், அதற்கு முந்தைய வருடங்களில் பெறப்பட்ட வரிச் சலுகை செய்யப்பட்ட தொகை, (பிரிவு 80சி (5)) நடப்பு வருடத்தின் வருமானமாகக் காட்டப்படும்.
ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பதன் மூலம் இனி நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு; வரிச் சலுகையும் கிடைக்கும் என்பதால், இதுவரை ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்காதவர்கள், இனியாவது அவசியம் எடுக்கலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
» லைஃப் இன்ஷூரன்ஸ்..! எத்தனை பாலிசி எடுக்கலாம்?
» டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
» லைஃப் இன்ஷூரன்ஸ்..! எத்தனை பாலிசி எடுக்கலாம்?
» டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum