Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பிரச்னைகளைத் தாண்டி இந்தியப் பங்குச் சந்தைகள் வளரும்!
Page 1 of 1

ஏஞ்சல் புரோக்கிங்’ வைபவ் அக்ரவால் சிறப்புப் பேட்டி
மு.சா.கெளதமன்
ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு நிஃப்டி 9000 புள்ளிகளைத் தொடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்குமா என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஏறிக் கொண்டே இருந்த சந்தை இப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. இந்த நிலையில், சந்தையின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ரிசர்ச் ஹெட், வைபவ் அக்ரவாலிடம் கேட்டோம். அவர் நமக்களித்த பேட்டி இதோ:
கூடிய விரைவில் சந்தை மீண்டும் உச்சத்தைத் தொடுமா?
“தற்போதைக்கு சந்தையின் போக்கு பாசிட்டிவ்வாகவே இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்வது, பாண்டுகளுக்கான யீல்டு குறைந்திருப்பது போன்றவை சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்க்கிறது. அதேபோல், நுகர்வு மற்றும் தேவை அதிகரித்திருப் பதும் இந்தியச் சந்தைகள் இன்னும் பாசிட்டிவ்வாக போகும் என்பதைக் காட்டுகிறது. தற்போதைய நிலையில், நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பார்க்கலாம். அவ்வளவு பங்குகள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்கிறது.”
தற்போது சந்தையை எது வழி நடத்திக் கொண்டிருக்கிறது ?
“தற்போது சந்தையை நுகர் வோர்தான் நிர்ணயிக்கிறார்கள். ஏழாவது ஊதியக் குழு காரண மாக அதிகப்படியாக புழங்க இருக்கும் பணம், கிராமப்புறப் பகுதிகளில் மக்களுக்கு அதிகரித் திருக்கும் வருமானம், கடந்த ஒரு வருடமாக குறைந்து கொண்டே வந்திருக்கும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் போன்ற காரணிகள் இந்தியாவின் மொத்த நுகர்வையும் அதிகரித் திருக்கிறது.
இரண்டாவதாக, அரசு செய்து வரும் வளர்ச்சிக்கான நடவடிக் கைகளால் பாதுகாப்புத் துறை, நீர் பாசனத் துறை, உள்கட்ட மைப்புத் துறை போன்றவை பெரிய அளவில் மீண்டும் ஆர்டர்களை எடுக்கத் தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
இதுமட்டுமின்றி, பெரிய அளவில் மெட்ரோ திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் துறை சார்ந்த நிறுவனங் களுக்கு ஆர்டர்கள் கிடைக்கிறது என்றால், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் நன்கு செயல்படுகிறது என்றுதானே சொல்ல வேண்டும். எனவே, நுகர்வோர்களும், அரசின் வளர்ச்சித் திட்டங் களுமே தற்போது சந்தையை நடத்தி வருகின்றன.’’
தற்போதைய நிலையில் சந்தை யின் மதிப்பீடு அதிகம் என்கிறார்களே!
“ஆம், தற்போது இந்திய நிறுவனங் களின் மதிப்பீடுகள் சற்று அதிகமாகவே இருக்கின்றன. தற்போது உலக அளவில் வட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு அல்ல. எப்போதெல்லாம் வட்டி விகிதம் குறைகிறதோ, அப்போதெல்லாம் பிஇ விகிதம் அதிகரிக்கும். ஆக, தற்போது இந்திய நிறுவனங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது இந்த காரணத்திற்காகக்கூட இருக்கலாம்.’’
அடுத்த 10 வருடத்தில் டிரெண்ட் செட்டிங் செக்டார்களாக எவையெவை இருக்கும்?
“இந்தியாவைப் பொறுத்த வரை, தரமான நிறுவனமாக செயல்படுவது, நல்ல பிராண்ட் மதிப்போடு இருப்பது, நுகர்வோர் துறையில் கால் பதித்திருப்பது, எளிதில் பலரும் நுழைய முடியாத பிசினஸில் நுழைந்து தங்கள் தடத்தை பதிப்பது என்று பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களைச் சொல்லலாம். அப்படிப்பட்ட துறைகளைச் சொல்ல வேண்டும் எனில், நுகர்வோர் சார்ந்த துறைகளை சொல்லலாம். அதிலும் குறிப்பாக, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்எம்சிஜி, என்பிஎஃப்சி என்று அழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனம் போன்ற துறைகளைச் சொல்லலாம். ”
கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 50 மற்றும் பி.எஸ்.இ 30 இண்டெக்ஸ் மதிப்புகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட பங்குகள் பெரிய அளவில் மாறி இருக்கிறது. இனி அடுத்த 10 வருடங்களில் எந்த மாதிரியான பங்குகள் இதில் இடம் பிடிக்கும்?
“கமாடிட்டி சார்ந்த பங்குகள் ஏற்கெனவே வெளியேறி இருக்கின்றன. இனியும் வெளியேறலாம். இனிவரும் காலங்களில் நுகர்வோர் துறையைச் சார்ந்திருப்பது, பிராண்ட் மூலம் விற்பனை செய்வது, அறிவுசார் சொத்து உரிமை (IPR) மூலம் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக ஆர்.ஓ.இ இருக்கும் பார்மா போன்ற துறை சார்ந்த நிறுவனங் கள் இந்தப் பட்டியலில் இடம் பெறலாம். அதிலும் குறிப்பாக, எளிதில் நுழைய முடியாது தொழில் செய்துவரும் நிறுவனங்களைச் சொல்லலாம்.”
தற்போது உலகப் பொருளாதாரம் பெரிய அளவில் நம்பிக்கை தருவதாக இல்லை. பிரெக்ஸிட், சீனாவின் சரிவு என்று பல நாடுகளிலும் பல சிக்கல்கள் தொடர்கிறது. இதனால் இந்தியச் சந்தைகள் பாதிப்படையுமா?
“இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏதோ ஒன்று வந்துகொண்டே தான் இருக்கும். அதுமட்டுமின்றி இவை எல்லாம் புதிய பிரச்னைகள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, பிரெக்ஸிட் வந்தபிறகு நம் சந்தை ஏறியதை நாம் மறக்கக் கூடாது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா நன்றாகவே இருக்கிறது. எனவே, பங்குச் சந்தையில் நல்ல வளர்ச்சியையும், வருமானத் தையும் எதிர்பார்க்கலாம்.”
தற்போது நிறைய ஐபிஓக்கள் வருகின்றன. இனியும் பல ஐபிஓக்கள் வரவிருக்கின்றன. தற்போது வரும் ஐபிஓக்களில் முதலீடு செய்யலாமா?
“சந்தை நன்றாக இருக்கிறது, நிறைய பேர் ஐபிஓ வருகிறார்கள் என்கிற ஒரு காரணத்தினால் மட்டும் வரும் ஐபிஓக்களில் முதலீடு செய்யலாம் என்று சொல்ல முடியாது. ஒரு நிறுவனம் ஐபிஓ வரும்போது அந்த நிறுவனம் எப்படிப்பட்டது, அது எந்தத் துறையைச் சார்ந்து இருக்கிறது, அதற்கு உள்ள நுகர்வோர்கள், அதன் வளர்ச்சித் திட்டங்கள் என எல்லாவற்றையும் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். முக்கியமாக, ஒரு நிறுவனம் நல்ல நிறுவனமாக இருந்தாலும், மதிப்பீட்டுக்குத் தகுந்த விலையில் வருவது அவசியம். நிறுவனத்தின் மதிப்பைவிட கூடுதல் விலைக்கு வந்தால் யார் முதலீடு செய்ய முடியும்?
ஒருவேளை அதிகமானவர்கள் முதலீடு செய்தாலும், பட்டிய லிடப்பட்ட பின் உண்மையான மதிப்பீட்டிற்கு தகுந்தாற் போல விலை குறையலாம். எனவே, ஐபிஓவில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தின் ஃபண்டமென்டல்களுடன் விலையும் சரியாக இருக்க வேண்டும்.’’
பங்குச் சந்தை நெறியாளரான செபி, முதலீட்டாளர்களை விழிப்பு உணர்வு அடையச் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை செபியும், தரகு நிறுவனங்களும் செய்ய வேண்டும்?
“இந்திய மக்களைப் பொறுத்தவரை, நிலையான வருமானம் என்பதைத் தாண்டி, கூடுதல் வருமானத்திற்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற மனநிலையை கொண்டுவர வேண்டும். அதோடு சந்தையைக் கணிப்பதை விட்டு விட்டு எஸ்.ஐ.பி முறையில் சீராக முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என்கிற செய்தியை மக்களிடம் சொல்ல வேண்டும். இதை திரும்பத் திரும்பச் சொன்னால்தான் மக்களுக்கு புரியவரும். அப்போது தான் சந்தையில் சிறு முதலீட்டாளர் களின் பங்களிப்பு அதிகரிக்கும்.’’
2025-ல் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சி காணும்?
“தற்போதையை உலகப் பொருளாதாரம், அரசுக் கொள்கைகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், ஆண்டுக்கு சராசரியாக 7 - 8% பொருளாதாரம் வளர்ச்சி காணும். பங்குச் சந்தை யானது ஆண்டுக்கு சராசரியாக 13 - 14% வருமானம் தரும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் 4 - 5% பணவீக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.”
நாணயம் வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் பங்குகள் ஏதாவது...?
“அமர ராஜா பேட்டரீஸ், வோல்டாஸ், பஜாஜ் எலெக்ட்ரிக் கல்ஸ், திவான் ஹவுஸிங், எக்விடாஸ் ஹோல்டிங்ஸ், ஜாக்ரன் பிரகாசன், ராடிக்கல் கெய்தான் போன்ற பங்குகளில் அடுத்த ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்யலாம்.”
ந.விகடன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சரிவுக்காக காத்திருக்கிறதா பங்குச் சந்தை?
» இந்தியப் பொருளாதாரம் ஜொலிக்கும் நட்சத்திரமா?- மத்திய அமைச்சர்களுக்கு ரகுராம் ராஜன் அழுத்தமான பதில்
» வளரும் இன்ஃப்ரா துறை... லாபம் தரும் இன்ஃப்ரா பங்குகள் !
» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
» மே 16 அன்று பங்குச் சந்தை என்னவாகும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum