Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
Page 1 of 1

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் ரூ.61,176 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியைக் கடனாக பெற்று இருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது.
இதில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் வழங்கப்பட்ட கடனில் வாராக் கடனாக மாறிய தொகை ரூ.847 கோடி. இந்த வாராக் கடனை 45 சதவிகித தொகைக்கு அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் அஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியிடம் (RARC) விற்பனை செய்திருக்கிறது.
வாராக் கடன்களை வசூலிக்கும் வேலையில் இறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், இப்போது சாட்டையை சுழற்றத் தொடங்கி இருக்கிறது. ரிலையன்ஸின் எச்சரிக்கைக்கு உள்ளான சில மாணவர்களிடம் பேசினோம்.
போனில் மிரட்டுகிறார்கள்..!
“இன்ஜினீயரிங் படிக்க ரூ.1 லட்சம் கடன் வாங் கினேன்; இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 லட்ச மாக உள்ளது. சமீபத்தில் ஒரு பெண்மணி எனக்கு போன் செய்து, இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை செலுத்தவில்லை எனில், கலெக்ஷன் டீமுக்கு அனுப்பி விடுவோம். அவர்கள் எப்படி வேண்டு மானாலும் பணத்தை வசூலிப்பார்கள்; கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று மிரட்டினார்” என்றார் சேலத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.
வில்லிப்புத்தூரைச் சேர்ந்த நாகூர் மைதீன், ‘‘நான் கல்விக் கடனாக ரூ.1.21 லட்சம் வாங்கினேன். நீங்கள் கடனை உடனே திருப்பிச் செலுத்தவில்லை எனில், எந்த ஒரு அரசு வேலைக்கும் உங்களால் விண்ணப்பிக்க முடியாது என பயமுறுத்தினார்” என்றார். ஆத்தூரைச் சேர்ந்த ராம்குமார், “நான் எம்சிஏ படிப்பதற்காக ரூ.1.70 லட்சம் கடன் வாங்கினேன். ஒரு வருடத்திலேயே வட்டியும், அசலும் சேர்த்து ரூ.2.48 லட்சம் போட்டுள்ளனர். நீங்கள் ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும். இல்லை எனில் எதிர்காலத்தில் நீங்கள் எந்தக் கடனையும் வாங்க முடியாது என எஸ்பிஐ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படி அனுப்பிய நோட்டீஸுக்கு ரூ.250 என் கணக்கில் சேர்த்துள்ளது’’ என்றார்.
வாராக் கடனும், வசூல் நடவடிக்கைகளும்!
கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் வேலை கிடைத்த உடனோ அல்லது படிப்பை முடித்த ஓராண்டிலேயோ கல்விக் கடன் தொகையை செலுத்தத் தொடங்க வேண்டும். இந்த கெடுவைத் தாண்டி மூன்று மாதங்கள் வரை கடன் தவணை செலுத்தப்படவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. கடந்த ஆண்டு திருவாங் கூர் ஸ்டேட் வங்கியின் கல்விக் கடனை இதே விதமாக விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தது. இதற்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இப்போது உருவாகத் தொடங்கி உள்ளது.
என்ன தீர்வு..?
இந்தப் பிரச்னை குறித்தும், தீர்வு குறித்தும் வழக்கறிஞர் என்.ரமேஷிடம் பேசினோம். அவர் விளக்கமாகச் சொன்னார்.
“பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் தமிழக மாணவர் களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் ரூ.847 கோடி. இந்த வாராக் கடனை 45% தொகைக்கு, அதாவது, ரூ.381 கோடிக்கு ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறது. இதில் ரூ.54.24 கோடியை மட்டுமே இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கி யுள்ளது. மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படி யாக வழங்க உள்ளது. ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனம் ரூ.847 கோடியை வட்டியுடன் மாணவர்களிடம் இருந்து வசூல் செய்துகொள்ளலாம். இது என்ன நியாயம்? மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பொதுத் துறை வங்கிகள், மக்களின் பணத்தை தனியார் நிறுவனங்கள் அனுபவிக்க அனுமதிப்பது எப்படி சரியாகும்?
கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்தத் தேவையில்லை என யாரும் வாதாடவில்லை. வங்கியிலிருந்து வாங்கிய கடனை திரும்பக் கட்டியாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தக் கடனை முறைப் படி வசூலிக்க நடவடிக்கை எடுப்பதே சரி.
இது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன். வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு திரும்ப செலுத்தலாம் எனச் சலுகையோடு வழங்கப்பட்ட கடன். கடன் பெற்ற பெரும்பாலானவர்கள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் கள். பொறியியல் படிப்பை படித்தவர்கள். படிப்பை முடித்த ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப் பின்றி இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கடனை திருப்பிச் செலுத்த வசதியின்றி இருப்பவரைக் கடன் செலுத்து மாறு லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனம் மிரட்டினால் அவரால் என்ன செய்ய முடியும்?.
நான்கு கேள்விகள்..!
வாராக் கடனை ‘சட்டப்படி’ வசூல் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ளது சில கேள்விகளை எழுப்புகிறது. 1. ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்துக்கு வழங்கிய 55% தள்ளுபடியை ஏன் கடன் பெற்ற மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கக் கூடாது? மீதமுள்ள 45% கடன் தொகையை திரும்ப செலுத்த அதே 15 ஆண்டு கால அவகாசத்தை மாணவர்களுக்கு தரக்கூடாது?
2. வாராக் கல்விக் கடனை வசூல் செய்ய, பாரத ஸ்டேட் வங்கியே ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது? பாரத ஸ்டேட் வங்கிக்குள்ளேயே, கடன் வசூலிக்கும் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள லாமே! ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்தால், வாராக் கடனை சட்டப்படி வசூல் செய்ய முடியுமெனில், ஏன் அதை பாரத ஸ்டேட் வங்கியே செய்யக்கூடாது?
3. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்குபவர், அந்த வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அந்தக் கடன் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்துக்கு விற்கும் முன்பு, கடன் பெற்றவரிடம் ஆட்சேபனை உள்ளதா என கேட்க வாய்ப்பு தராதது ஏன்?
4. கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கியானது நீதிமன்றத்தின் மூலமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். வங்கிக்குள்ள அந்த உரிமைதான், கடன் வசூல் நிறுவனத்துக்கும் உள்ளது. எனவே, கடனை விலைக்கு வாங்கும் நிறுவனமும், சட்ட முறைப்படி நீதிமன்றம் மூலமே கடனை வசூல் செய்ய வேண்டும் என வங்கிகள் நிபந்தனை விதிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி இப்படி நிபந்தனை விதித்திருக்கி றதா?
என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, கடன் வாங்கியவர்கள், கடன் வசூலிக்க வருபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியம்.
1. வசூல் ஏஜென்டைத் தவிர்க்க வேண்டாம். வசூல் செய்யவரும் ஏஜென்டின் அடையாள அட்டை மற்றும் வங்கி அல்லது கடன் வசூல் நிறுவனத்தின் கடிதம் ஆகியவற்றை சரி பார்க்கவும். தொலைபேசியில் பேசினால், எண்ணையும் பெயரையும் குறித்து வைக்கவும். அத்துமீறும்போது புகார் செய்ய உதவும்.
2. கடன் தொடர்பாக பேச, குறிப்பிட்ட இடத்தையும், நேரத்தையும் நீங்களே குறிப்பிட்டு சொல்லலாம்.
3. உங்களைப் பற்றிய விவரங்கள் எதையும் தர வேண்டாம்.
4. ஒவ்வொரு முறை பேசும் போதும் ஒலிப்பதிவு செய்தோ அல்லது குறித்து வைத்தோ கொள்ளுங்கள்.
5. கடன் தொகை கணக்கில் தவறிருந்தால், ஸ்டேட்மென்ட் கேட்கலாம். கடன் செலுத்த முடியாமல் இருந்தால், பொய்யாக கால அவகாசம் கேட்க வேண்டாம். பணம் செலுத்தினால் காசோலை மூலம் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்வது அவசியம்.
6. உங்களிடம் அத்துமீறி பேசினால், உடனே நீங்கள் பேசுவதை நிறுத்திவிடுங்கள். பேச விருப்பமில்லை என்றும் சட்டப்படி நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவியுங்கள்.
7.அதன் பின்னும் தொடர்ந்தால், ஏஜென்ட் மீதும் வசூல் நிறுவனத்தின் மீதும் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
8. வசூல் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கியில் புகார் செய்யலாம்.
இதுபோன்ற தவறான கடன் வசூல் முறைகளை தடுக்க அமெரிக்காவில் Consumer Credit Protection Act என்ற சட்டம் உள்ளது. இந்தியாவில் அப்படி சட்டம் இதுவரை இல்லை’’ என்று முடித்தார் வழக்கறிஞர் ரமேஷ்.
இது தொடர்பாக எஸ்பிஐ வங்கியுடனும் ரிலையன்ஸ் அஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டபோது சரியான பதில் தரவில்லை. அவர்கள் இது குறித்து விளக்கமளித்தால், அதை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.
கல்விக் கடனோ, தொழில் கடனோ அதை எந்த வங்கியில் வாங்கி இருந்தாலும் திரும்பக் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கடனை திரும்பக் கட்ட முடியாத போது, வங்கியானது கடன் தந்தவரிடம் நேரடியாகப் பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியான அணுகுமுறை!

ந.விகடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசு கவனிக்குமா?
தமிழகத்திலிருந்து மட்டும் கிட்டதட்ட 10 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடனாக பெற்றிருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக் கடனாக மாறியிருக்கிறது. இதை தமிழக அரசே செலுத்தித் தள்ளுபடி செய்யலாமே என்று வேண்டுகோள் விடுக்கத் தொடங்கி இருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். தமிழக அரசு இதை கவனிக்குமா?
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?
» கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?
» கல்விக் கடன் உதவி செய்யும் அமைப்பு
» இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
» கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum