Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வீட்டுக் கடன் வரிச் சலுகை... அதிகம் தெரியாத விவரங்கள்!
Page 1 of 1
வீட்டுக் கடன் வரிச் சலுகை... அதிகம் தெரியாத விவரங்கள்!
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொந்த வீடு வாங்குவது ஒரு வாழ்நாள் கனவு. சமுதாயத்தில் பாதுகாப்பாக உணர வைக்கிற முக்கிய காரணியாகவும் சொந்த வீடு அமைகிறது. எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்பதற்காக, வீட்டுக் கடன் சம்பந்தமாக பல்வேறு வரிச் சலுகைகளை மத்திய அரசு அளிக்கிறது.
வீட்டுக் கடன் குறித்த வரிச் சலுகையை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அ) அசல் மீதான வரிச் சலுகை (பிரிவு 80C) ஆ) வட்டி மீதான வரிச் சலுகை (பிரிவு 24(B) மற்றும் 80EE).
அசல் மீதான வரிச் சலுகைகள்!
1. அசல் தொகை மட்டுமில்லாமல், முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் ஆகியவை பிரிவு 80C-ன் கீழ் கழிவு பெற தகுதி உடையவையாகும்.
2. பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகை பெறுபவர் அந்த வீடு கட்டி முடித்து / பயன்பாட்டுக்கு வந்த நிதி ஆண்டில் இருந்து 5 வருடங்கள் வரை வேறொருவருக்கு மாற்றுதல் (Transfer) செய்யக் கூடாது. அவ்வாறு மாற்றம் செய்யும்பட்சத்தில், ஏற்கெனவே பெற்ற வரிச் சலுகைகள் மாற்றம் செய்த நிதியாண்டின் வருமானமாகக் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும் (பிரிவு 80C(5)).
3. வீடு கட்டி முடிப்பதற்கு முந்தைய வருடங்களில் திரும்பச் செலுத்தப்படும் அசல் தொகைக்கு எவ்வித வரிச் சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. மாறாக, வீடு கட்டி முடிக்கப்படாத வருடங்களில் செலுத்திய வட்டிக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
4. பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெற அசல் தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அதாவது, நிலுவையில் உள்ள அசல் தொகைக்குக் கழிவு அளிக்கப்பட மாட்டாது. மாறாக, பிரிவு 24(b)) கீழ் வட்டிக்கானக் கழிவைப் பெற வட்டித் தொகையைக் கணக்கில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.
5. பிரிவு 80C-ன் கீழ் கழிவு பெற வரையறுக்கப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்திடம் பெறும் வீட்டுக் கடனும் வரிக் கழிவுக்கு தகுதியுடையது.
6. உறவினர் மற்றும் நண்பர்களிடம் பெறும் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரிக் கழிவு பெற இயலாது. அதே நேரத்தில், உறவினர் மற்றும் நண்பர்களிடம் பெறப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகை பிரிவு 24(b)-ன் கீழ் கழிவு பெற முடியும்.
7. வீட்டைப் புனரமைக்க அல்லது விரிவாக்கம் செய்ய வாங்கப்பட்ட கடனுக்கான அசல் தொகைக்கு எவ்விதச் சலுகையும் கிடையாது. மாறாக, திரும்பச் செலுத்தும் வட்டித் தொகைக்கு பிரிவு 24(b)-ன் கீழ் வரிச்சலுகை பெறலாம். இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டி மீதான வரிச் சலுகைகள்!
1. பெறப்பட்ட கடன், புதிதாக வீடு கட்டவோ அல்லது கட்டிய வீட்டை வாங்கவோ பயன்படுத்தப்பட்டு, அந்த வீடு சொந்தக் குடியிருப்பாக இருப்பின் ஒரு நிதி ஆண்டில் ரூ.2,00,000 வரை வரிச் சலுகை பெறலாம். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
2. வீடு புனரமைப்பு அல்லது விரிவாக்கப் பணிக்காக கடன் வாங்கி இருந்தால், ஒவ்வொரு நிதி ஆண்டும் திரும்பச் செலுத்தும் வட்டியில் ரூ.30,000 வரை கழிவு பெறலாம்.
2. கடன் பெற்ற நிதியாண்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். (நிதியாண்டு 2016-17 முதல் இந்த வரம்பு 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது). அவ்வாறு கட்டி முடிக்காவிட்டால் பிரிவு 24(b)-ன் கீழ் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.2,00,000-லிருந்து குறைக்கப்பட்டு ரூ.30,000 வரை மட்டுமே கழிவு பெற இயலும்.
3. வீடு கட்டி முடிப்பதற்குமுன் செலுத்திய வட்டி, வீடு கட்டி முடிந்த நிதியாண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சமமாகப் பிரித்து வரிச் சலுகை பெறலாம். மொத்த வரிச் சலுகையும் 2 லட்சத்துக்குள் அடங்கும்.
4. பிரிவு 80EE-ன் கீழ் கூடுதல் கழிவு பிரிவு 24(b)-ன் கீழ் சொந்தக் குடியிருப்புக்கு உட்பட்ட வீட்டுக்கான வட்டி ரூ.2,00,000 மட்டுமே கழிவு பெற முடியும். ஆனால், நாம் செலுத்தும் வட்டித் தொகை அதைவிட அதிகமாக இருப்பின் மீதமுள்ள தொகைக்கு கழிவு பெற முடியாமல் வீணாகிறது. இதை எதிர்கொள்ளும் விதமாக, 2016-ம் ஆண்டு நிதியறிக்கையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.50,000 வரை கூடுதலாக கழிவு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. (ஏற்கெனவே இந்தச் சலுகை நிதியாண்டு 2013-14ல் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது). என்னென்ன நிபந்தனைகள் என்பதைப் பார்ப்போம்.
1. வாங்கிய வீட்டின் விலை ரூ.50 லட்சத்துக்கு உள்ளாக இருக்க வேண்டும்.
2. வீட்டின் மீதான கடன் ரூ.35 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்தச் சலுகை முதன்முறை வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.
4. வீட்டுக் கடன் 1.4.2016 முதல் 31.3.2017 வரையான காலகட்டத்தில் வாங்கி இருக்க வேண்டும்.
வரிச் சலுகை: பொதுவான தகவல்கள்!
1. கூட்டாக வாங்கப்படும் சொத்தின் மூலம் (co-ownership) பிரிவு 80C மற்றும் பிரிவு 24(b)-ன் கீழ் ஒவ்வொரு உரிமையாளரும் தனித்தனியாக வரிச் சலுகை பெறலாம்.
2. ஒரே வீட்டின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்றிருப்பினும் 80C மற்றும் 24(b)-ன் கீழ் வரிச் சலுகை பெறலாம். ஆனால், மொத்தக் கழிவுத் தொகை அந்தப் பிரிவின் உச்சவரம்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட வீடு மற்றும் அதன் மீதான கடன் உள்ளவர்கள் பிரிவு 80C மற்றும் பிரிவு 24(b)-ன் வரம்புக்கு உட்பட்டு வரிச் சலுகை பெறலாம்.
4. வீட்டு வாடகைப்படி (ஹெச்ஆர்ஏ) பெறுபவர்கள் பிரிவு 80C மற்றும் 24(b)-ன் கீழ் வரிச் சலுகை பெறலாம்.
5. வங்கிக் கடன் பெறாமல், வீடு விற்பவருக்குத் தவணை முறையில் பணம் செலுத்தினால் கட்டும் வட்டிக்கு பிரிவு 24(b)-ன் கீழ் கழிவு பெறலாம். அசல் தொகைக்கு எவ்விதக் கழிவும் பெற இயலாது.
6. வரிச் சலுகை பெற வீடு கட்டி முடித்ததற்கான சான்றிதழ் (Completion certificate) பெற்றிருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மேற்கண்ட இந்தச் சலுகைகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» என்னென்ன வரிச் சலுகை? -வீட்டுக் கடன்
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» வீட்டுக் கடன்... வரிச்சலுகைக்கான வரமா?
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» வீட்டுக் கடன்... வரிச்சலுகைக்கான வரமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum