Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வங்கிகள் விநியோகிக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்கலாமா?
Page 1 of 1

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் கிராம மக்களுக்கும் எளிதில் கிடைக்கிற மாதிரி வங்கிகள் பாலிசிகளின் (Bancassurance) விற்பனையை அதிகரிக்க வேண்டும் என ஐஆர்டிஏ கூறி உள்ளது. அதாவது, ஒவ்வொரு வங்கியும் ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு என குறைந்தது மூன்று இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இது வருகிற 2016, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் எனவும் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பல வங்கிகள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்துவருகிறது. ஆனால், பாலிசிகளின் தன்மை, கவரேஜ் போன்ற விஷயங்கள் எல்லாம் விளக்கிச் சொல்லப் படாமலேயே வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பனை செய்யப்படும் விதம் பற்றி சொன்னார் இன்ஷூரன்ஸ் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஜெ.பிரபாகரன்.
“வங்கிகள் அதிக பாலிசிகளை எளிதாக விற்பனை செய்ய முடியும். ஏனெனில் வாடிக்கை யாளரைத் தேடி போகவேண்டிய அவசியமில்லை.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருக்கும் அனைத்து பாலிசிகளையும் வங்கிகள் விற்பனை செய்யாது. சில பாலிசிகளை மட்டுமே விற்பனை செய்யும். அந்த பாலிசிகளுக்கான கமிஷன் தொகையானது அதிகமாகவே இருக்கும்.
வங்கிகளில் புதிதாகக் கணக்கு துவங்குபவர்களுக்குக் குறைவான பிரீமியத்தில் விபத்து காப்பீடு எனக் கூறி பாலிசியை வங்கிகள் விற்பனை செய்கிறது. அதாவது, ரூ.1 லட்சம் கவரேஜ் தொகைக்கு ரூ.100 பிரீமியம் என பாலிசியை விற்பனை செய்கின்றன. இது குறைவான பிரீமியம் என்று சொல்ல முடியாது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலும் இதே அளவு பிரீமியம்தான் வசூலிக்கப்படுகிறது.
சில தனியார் வங்கிகள், ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வழங்குகிறோம் என்று சொல்லி, சில இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்கிறது. அதாவது, சிங்கிள் பிரீமியம் என்று கூறி, பாலிசியை விற்பனை செய்கிறது. ஆனால், அந்த பாலிசிக்கு ஒவ்வொரு வருடமும் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், பாலிசியின் கால அளவைக் குறைத்து சொல்லி, பாலிசியை விற்பனை செய்வதும் நடக்கிறது.
வங்கிகள் மூலமாக பாலிசியை விற்பனை செய்வதற்குமுன் அந்த பாலிசியின் தன்மை, அந்த பாலிசி யாருக்குப் பொருந்தும், கவரேஜ் தொகை, பாலிசியின் கால அளவு என்பது குறித்த பயிற்சிகளை வங்கி ஊழியர் களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். ஆனால், இதை வங்கி ஊழியர்கள் நடைமுறைப்படுத்துவது கிடையாது.
மேலும், ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் வங்கியில் விற்பனை செய்யப் படும் பாலிசிகளின் தன்மைகளை வாடிக்கையாளருக்கு விளக்கு வதற்காகத் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆனால், அவரை இரண்டு அல்லது மூன்று வங்கிகளைப் பார்த்துக் கொள்ளும்படி கூறுவதும் நடக்கிறது. இதனால் அவரால் வாடிக்கையாளரின் தேவையைச் சரியாகப் பூர்த்தி செய்யமுடிவதில்லை.
வங்கியில் எடுக்கப்படும் பாலிசியில் மிஸ்செல்லிங் நடந்திருந்தால், அது குறித்த புகாரை வங்கியில் உள்ள அதிகாரிகளிடம் மட்டும்தான் புகார் அளிக்க முடியும். இதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஆனால், பாலிசியில் க்ளெய்ம் செய்வதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம்தான் பொறுப்பு, வங்கி பொறுப்பாகாது.
வங்கியில் விற்பனை செய்யப்படும் பாலிசிகளைப் பெரும்பாலும் புதுப்பிப்பது இல்லை. ஏனெனில் முதல் முறை பாலிசியை விற்பனை செய்யும்போது அதிக கமிஷன் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த கமிஷன் தொகையின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், புதிய வாடிக்கையாளர்களையே வங்கிகள் இலக்காக வைத்திருக்கின்றன.
மேலும், வங்கிகள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட காலத்துக்கு மட்டும்தான் பாலிசியை விற்பனை செய்யும். அதன்பிறகு பாலிசிகளை விற்பனை செய்யாது’’ என்று முடித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வங்கிகள் என்ன பதில் சொல் கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம்.
“வங்கிகளில் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பனை செய்வது லாபத்தை அதிகரிப்பதற் காகதான். அதாவது, வங்கி சேவை மூலமாக மட்டும் வங்கிகள் லாபம் அடைய முடியாது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளும் வழங்க வேண்டும் என்பதற்காகவே இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றை விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர் களும் இதையே எதிர்பார்க் கிறார்கள். நாங்கள் எங்கள் வங்கி மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசி விற்க வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை.
மேலும், வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர் களும் இன்ஷூரன்ஸ் பாலிசி களை விற்பனை செய்துவிட முடியாது. அதற்குத் தனியாக, ஐஆர்டிஏ அமைப்பு நடத்தும் சிஐஎஃப் (Certified Insurance Facilitator) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் பாலிசிகளை விற்பனை செய்ய முடியும்.
பாலிசியை விற்பனை செய்பவர்களுக்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும், யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்துக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு வங்கி ஊழியர் வாடிக்கையாளர் களிடம் இப்படி ஒரு பாலிசி உள்ளது என்று பரிந்துரை செய்வார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை மேலாளரிடம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுக்கொள்ள ஏற்பாடு செய்வோம். வங்கி விற்பனை செய்யும் பாலிசிக்கேற்ப கமிஷன் கிடைக்கும்.
வங்கிகளில் விற்பனை செய்யப்படும் பாலிசிகளைப் புதுப்பிப்பது, பிரீமியம் செலுத்தும் முறைகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பது அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடமை. வங்கியில் பாலிசியை விற்பனை செய்யும் ஊழியரும் அந்த வேலையைச் செய்வார். பாலிசியை விற்பனை செய்த ஊழியர் வேறு கிளைக்கு மாற்றல் ஆகிச் சென்றால், இந்தப் பணி தடைபட வாய்ப்புள்ளது’’ என்று பதில் அளித்தார்.
இன்ஷூரன்ஸ் என்பது எதிர்கால பாதுகாப்புக்குத்தான். இதை முடிந்தவரை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அல்லது புரோக்கர் மூலம் எடுப்பதே நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, புரோக்கர்களோ இல்லாத பட்சத்தில் வங்கி மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை நாம் வாங்கலாம்.
வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
1. நாம் எடுப்பது எந்த வகையான பாலிசி, அது நம் தேவையைப் பூர்த்தி செய்யுமா, அதன் மூலம் கிடைக்கும் கவரேஜ் தொகை போதுமா என்று பார்க்க வேண்டும்.
2. பாலிசி பத்திரத்தை வாங்குவது முக்கியம். சில வங்கிகள் குறிப்பிட்ட சில பாலிசிகளுக்கு மட்டும்தான் பாலிசி பத்திரம் வழங்குகிறது.
3. பாலிசியை எடுக்கும்போது சொல்லப்படும் தகவல்கள் உண்மையா என்பதை விசாரித்தறிவது முக்கியம்.
4. வங்கி விற்பனை செய்யும் பாலிசிகள் அதன் துணை நிறுவனமான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசியா அல்லது வேறு நிறுவனத்தின் பாலிசியா என்பதைக் கவனிக்க வேண்டும். துணை நிறுவனத்தின் பாலிசி என்றால் அந்த வங்கி தொடர்ந்து பாலிசியை விற்க வாய்ப்புள்ளது. வேறு நிறுவனம் எனில் பாலிசி விற்பனை இடையில் நின்று போக வாய்ப்புள்ளது.
5. பாலிசியின் பிரீமியம் தொகையானது இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் வங்கியில் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இதில் வித்தியாசம் இருந்தால் பாலிசியைத் தவிர்த்துவிடலாம்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» இப்போது தங்கம் வாங்கலாமா?
» அட்சய திரிதியையில் தங்கம் வாங்கலாமா?
» ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?
» அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா?
» திடீர் விலை வீழ்ச்சி பங்குகளை வாங்கலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum