Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இன்ஷூரன்ஸ் துறையில் அதிரடி மாற்றங்கள்!
Page 1 of 1
இன்ஷூரன்ஸ் துறையில் அதிரடி மாற்றங்கள்!
நிபுணர் குழுவின் பரிந்துரை நிறைவேறுமா?
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ, 2014 டிசம்பரில், நிபுணர் குழு ஒன்றை அமைத்து, மருத்துவக் காப்பீட்டுத் துறைக்குத் தற்போது எந்தமாதிரியான சட்டங்கள் உள்ளன, அந்தச் சட்டங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவகையில் பயன் அளிக்கிறது என்பதை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் முடிவில் எந்த விஷயங்களையெல்லாம் சட்டத்தில் சேர்க்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எந்தமாதிரியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்தது. ஐஆர்டிஏ அமைத்த நிபுணர் குழு சொன்ன கருத்துக்கள் இனி..
பொதுவான பாலிசிகள்!
ஆயுள் காப்பீட்டு நிறுவனங் களும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்கின்றன. ஆனால், அந்த பாலிசிகள் பொதுக் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசி யிலிருந்து முழுவதும் வித்தியாசப் பட்டுள்ளது. இந்த வித்தியா சங்களை தவிர்த்து, பொதுவான பயன்கள் இருப்பது போன்ற பாலிசிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், 1, 2 வருட காப்பீட்டுத் திட்டங்களையும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பல வருட திட்டங்களையும் வழங்குகின்றன. பாலிசியின் கால அளவும் ஒரேமாதிரியாக இருப்பது முக்கியம் என்கிறது நிபுணர் குழு.
அனைத்து நோய்களுக்கும் கவரேஜ் பாலிசிகள்!
தற்போது பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங் கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்கின்றன. ஆனால், அந்த பாலிசிகளில் சில நோய்களுக்கு கவரேஜ் கிடைப்பதில்லை. பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசிகளில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு கவரேஜ் இல்லாமல் உள்ளது. சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நோய்களுக்கு தனியாக பாலிசி விற்பனை செய்கின்றன. இதைத் தவிர்த்தும் சில நோய்களுக்கு கவரேஜ் கிடைப்பதில்லை.
எந்தெந்த நோய்களுக்கு கவரேஜ் கிடைப்பதில்லை என்பதை ஆராய்ந்து அவற்றுக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசிகளைக் கொண்டு வர வேண்டும். அந்த பாலிசிகளை ஒரு முன்னோட்ட பாலிசிகளாக அறிமுகம் செய்து, அதில் 5 வருடங்களுக்கு கவரேஜ் தரலாம். அதன்பின் தேவையைப் பொறுத்து பாலிசிதாரரே பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் பாலிசியை வடிவமைக்க வேண்டும். இதன் மூலமாக அனைத்து நோய் களுக்கும் கவரேஜ் கிடைக்கும். இதன் விளைவாகப் பொது மக்களும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் எடுப்பது அதிகரிக்கும்.
நுழைவு வயது அடிப்படையில் பிரீமியம்!
இன்றைய இளைஞர்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதைத் தேவை இல்லாத செலவாகவே நினைக் கிறார்கள். மேலும், பாலிசி எடுப்பவர்களும் வயதான பிறகே எடுக்கிறார்கள். அதாவது, மருத்துவத் தேவை ஏற்படும் சமயத்தில் பாலிசிகளை எடுக் கிறார்கள். மேலும், முன்கூட்டியே பாலிசி எடுப்பதன் நன்மையை இளைஞர்கள் அறியவில்லை. எனவே, இளைய தலைமுறைக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
மேலும், இன்ஷூரன்ஸ் பூல் (pool) தொகையில் இளைஞர் களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையில் பாலிசியை வாங்கும்போது இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வருமானமும் அதிகமாகும்.
உதாரணமாக, சுமார் 30 வயதான ஒருவர் 10 வருடத்துக்கு முன் பாலிசி எடுத்திருந்தால், அவர் 1 லட்சம் கவரேஜுக்கு ரூ.1,500 பிரிமீயம் கட்டியிருப்பார். அதே பாலிசியை இந்த ஆண்டு எடுத்திருந்தால், பிரீமியம் ரூ.2000-ஆக உயர்ந்திருக்கும். இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, நுழைவு வயது மிகவும் முக்கியமானது என்பதை இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
சேமிப்புடன் கூடிய பாலிசிகள்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் உள்ளது போலவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் சேமிப்பு பகுதியை உருவாக்க வேண்டும். இந்த வகையான பாலிசியை அறிமுகப் படுத்தும்போது பாலிசி எடுப்பது அதிகரிக்கும். பொதுமக்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பதற்கான காரணம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்தான் க்ளெய்ம் கிடைக்கும். இல்லை யெனில், பிரீமியம் செலுத்தும் பணம் வீண் என நினைக் கிறார்கள். எனவே, சேமிப்புடன் பாலிசியை அறிமுகப்படுத்தினால் பாலிசி எடுப்பது அதிகமாகும். தவிர, சேமிப்பு பகுதிக்கும் வரிச் சலுகை கொடுப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
மேலும், சேமிப்பு மற்றும் இண்டெம்னிட்டி / பெனிஃபிட் ஹெல்த் பாலிசி சேர்த்து வழங்கு வது இன்று தேவையாக உள்ளது. ஆனால், அந்த பாலிசிகள் பங்குச் சந்தை சார்ந்து முதலீடு செய்யும் யூலிப் (ULIP) பாலிசிகளாக இருக்கக்கூடாது என்றும் பரிந்து ரைக்கப்படுகிறது
ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது!
பாலிசிதாரர் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கடமையாகும். இதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சரியாகச் செய்தால், எதிர்காலத் தில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தொகை குறைந்து, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்.
பணவீக்க அடிப்படையில் பிரீமியம்!
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் பாலிசி களின் பிரீமியத்தை அதிகரிக் கிறது. இது ஒவ்வொரு வயதுக்கும் வித்தியாசப்படும். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் நுகர்வோர் பணவீக்க விகிதத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். பிரீமியம் பணவீக்க விகிதத்தைவிட அதிக பட்சமாக 3% வரை அதிகரித்துக் கொள்ளப் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இது நிறுவனத்துக்கு நிறுவனம் பிரீமியம் வித்தியாசம் இல்லாமல் இருக்க உதவும்.
விளம்பர வார்த்தையில் மாற்றம்!
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகள் குறித்து விளம்பரம் செய்யும்போது சில வாசகங் களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதாவது, இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கு வதற்குமுன் உங்களின் தேவையை நன்கு அறிந்துகொள்ளுங்கள் என்பது அதில் முக்கியமானது. (Insurance is a subject matter of solicitation) இந்த வாசகம் உள்ள விளம்பரங்களை மட்டும்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் வெளியிட முடியும். இதை இந்த நிபுணர் குழு, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்குமுன், அந்தக் காப்பீட்டின் தகவலை நன்கு அறிந்து, அதன் பாலிசி தேவையா, இல்லையா (Before buying, know the conditions and exclusions, to make a well-informed decision) என்பதை முடிவு செய்து வாங்குவது மிகவும் முக்கியம் என்கிற வாசகம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
நிபுணர் குழு சிபாரிசு செய்துள்ள இந்தப் பரிந்துரை களை நடைமுறைப்படுத்தினால் காப்பீட்டுத் துறை நிச்சயம் வளரும்!
எஸ்.ஸ்ரீதரன்,
தலைமை நிதி ஆலோசகர்,|
www.fundsindia.com
--ந.விகடன் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ, 2014 டிசம்பரில், நிபுணர் குழு ஒன்றை அமைத்து, மருத்துவக் காப்பீட்டுத் துறைக்குத் தற்போது எந்தமாதிரியான சட்டங்கள் உள்ளன, அந்தச் சட்டங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவகையில் பயன் அளிக்கிறது என்பதை ஆய்வு செய்தது.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!
» கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான 5 மாற்றங்கள்!
» ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் வியக்க வைக்கும் சில மாற்றங்கள்!!!
» ரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum