Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கார் கடன்... யார் வாங்கலாம்?
Page 1 of 1
கார் கடன்... யார் வாங்கலாம்?
பயணிகள் கார் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, குறைவான விலை, சுலபமான தவணைக் கடன் போன்ற காரணங்களினால் கார் வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடன் மூலம் கார் வாங்குவது சரியா, கடன் மூலம் கார் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், இதன் மூலம் வரும் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
கார் வாங்கும்முன், அதை வாங்கி வைத்துக்கொள்கிற அளவுக்கு ஒருவருக்கு வருமானம் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். ஒருவரது வருமானம் கணிசமாக இருந்து, குறிப்பிட்ட அளவு பணம் உபரியாக மாதம்தோறும் மிஞ்சும்பட்சத்தில் கடன் வாங்கி கார் வாங்குவதில் தவறில்லை. ஆனால், வாழ்க்கையில் அவசியம் நிறைவேறியிருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத நிலையில், கடன் மூலம் கார் வாங்க வேண்டிய அவசியமில்லை.
அடிப்படை தேவைகள்!
கார் வாங்கும்முன், நீங்கள் சொந்தமாக வீடு வாங்கிவிட்டீர்களா, இதற்கான கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்தும் திறன் உங்களுக்கு இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். காரணம், வீடு என்பது அனைவருக்கும் அவசியம் தேவை. தவிர, அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால், கார் என்பது தேயும் சொத்து. அதன் மதிப்பு குறையவே செய்யும். எனவே, சொந்த வீடு வாங்காதவர்கள், முதலில் அதை வாங்கிவிட்டு, பிற்பாடு கார் வாங்க முயற்சிக்கலாம்.
ஓய்வுக்காலம்!
நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிப்பது அவசியம். கணவன் - மனைவியின் ஓய்வுக் காலத் தேவையை நிறைவேற்றாமல், கார் வாங்க நினைப்பது சரியல்ல.
பிள்ளைகளின் படிப்பு!
நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் மிகப் பெரிய சொத்து, அவர்களுக்கு அளிக்கும் கல்விதான். பிள்ளைகளின் உயர்கல்விக்குத் தேவையான பணத்தை போதுமான அளவுக்கு சேர்த்தபின்போ அல்லது அதற்கான மாதச் சேமிப்பை ஒதுக்கியபின்போ கார் வாங்கினால் மகிழ்ச்சி. கடனில் கார் வாங்கிவிட்டு, பிள்ளைகளின் படிப்புக்கும் கல்விக் கடன் வாங்கி னால், இரண்டு கடனுக்கும் வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால் நம் வருமானத்தில் பெரும்பகுதி வட்டி கட்டவே சரியாக இருக்கும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
இன்றைய நிலையில் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் ஆயுள் பாதுகாப்புக்கு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும் மிக அவசியம். இதற்கான ஏற்பாடு களையும் ஒருவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியபின்பு, உங்களுக்கு வேறு ஏதாவது கடன் இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி வாங்கும் கடன் அனைத்தும் (கார் கடன் உள்பட) உங்கள் மொத்த வருமானத்தில் 40-50 சதவிகிதத்துக்குக் குறைவாக இருப்பது நல்லது.
எதிர்கால சம்பள உயர்வு!
தற்போது சம்பளம் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் சம்பளம் உயர்ந்து, வருமானம் அதிகரிக்கும். அதனால் கார் கடனுக்கான தவணையை சமாளித்துக் கட்டி விடலாம் என்கிற எதிர்பார்ப்பில் சிலர் கார் வாங்குகிறார்கள். எதிர்காலத்தில் சம்பள உயர்வு வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பதால், முன்கூட்டியே கார் கடன் வாங்குவது தவறு.
கூடுதல் செலவு!
கடன் வாங்கி கார் வாங்கும்போது, வீட்டில் கார் நிறுத்துவதற்கான இடம் இல்லை என்றால் பார்க்கிங்குக்கு வாடகை வேறு தரவேண்டும். காரை சாலையோரத்தில் நிறுத்தும்போது, பலவகையிலும் சேதம் ஆவதற்கு வாய்ப்புண்டு. இதனாலும் செலவு ஏற்படும்.
இன்ஷூரன்ஸ் க்ளைம்!
காருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இன்ஷூரன்ஸில் க்ளைம் செய்யும் போது குறைவான தொகைதான் கிடைக்கும். மேலும், பாதுகாப்பு இல்லாமல் காரை பார்க் செய்யும்போது ஏற்படும் அசாம்பவிதங்களுக்கு 50 சதவிகித தொகைக்குதான் க்ளைம் கிடைக்கும்.
இதெல்லாம் பொதுவான செலவுகள்தான். கார் வாங்கியபின் வரும் குறிப்பான செலவுகள் பற்றி கூறினார் ஜெயின் கார் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆல்ரின் டேவிட்.
பராமரிப்புச் செலவு!
கார் வாங்கியவுடனே அதில் சில கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, ஸ்ட்ரீயோ, பவர்டோர் போன்ற இந்த வசதிகளுக்கு ரூ.10-12 ஆயிரம் செலவாகும்.
10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை காரை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். இலவச சர்வீஸ்களில் இதற்கான செலவு ரூ.2-3 ஆயிரம் செலவில் முடிந்து விடும். அதற்குப்பிறகு செய்யும் சர்வீஸ்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.8-10 ஆயிரம் செலவாகும். இதுவே 50-75 ஆயிரம் கிலோ மீட்டருக்குப் பிறகு ரூ.15 ஆயிரம் வரை செலவாகவும் வாய்ப்புள்ளது. எனவே, மாத பட்ஜெட்டில் கார் சர்வீஸுக்காக ரூ.1,500 தனியாக ஒதுக்கவேண்டியிருக்கும்.
வசதி Vs செலவு!
கார் வாங்கும்போது முதலில் அலுவலகத்துக்கு மட்டும் என்று நினைத்து வாங்குவோம்.
பிறகு, குடும்பத்துடன் வெளியே செல்லும் போது காரை எடுத்துக்கொண்டு போவோம். இதனால் கூடுதல் செலவுதான் ஏற்படும். இதனால் ஒரு மாதத்துக்கு 300-400 கிலோ மீட்டர் செல்ல நினைத்து, மாதக் கடைசியில் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காரை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
டீசல், பெட்ரோல் செலவு!
கார் வாங்கும்போது லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் கிடைக்கும் எனக் கூறுவார்கள். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் 12-13 கிலோ மீட்டர்தான் கிடைக்கும். அதிக கிலோ மீட்டர் கார் ஒட்டும்போது எரிபொருளுக்கான செலவு அதிகமாகும். பிறகு இது அத்தியாவசிய செலவாக மாறிவிடும்.
இந்த செலவுகளை எல்லாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் வருமானம் இருந்தால் மட்டுமே, நீங்கள் கார் வாங்கலாம். இல்லாவிட்டால், கார் வாங்கும் ஆசையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதே சரி!
யாருக்கு எந்த கார்?
கார் வாங்கும்போது உங்களின் பயன்பாடு என்ன என்பதைப் பொறுத்து காரை தேர்வு செய்வது நல்லது. அதாவது, அடிக்கடி வெளியூர் அல்லது அதிகத் தூரம் பயணம் செய்பவர்கள் டீசல் காரை தேர்வு செய்வது நல்லது. ஆனால், பெட்ரோல் காரைவிட டீசல் காரின் விலை 1 - 2 லட்சம் ரூபாய் கூடுதலாக இருக்கும். பெட்ரோலின் விலை அதிகம். டீசல் விலை குறைவு. எனவே, டீசல் காரை தேர்ந்தெடுப்போம் என நினைக்கக்கூடாது. டீசல் காரில் பராமரிப்புச் செலவு அதிகமாக இருக்கும்.
இரா.ரூபாவதி
--விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பழைய கார் வாங்குவது லாபமா? எதை வாங்கலாம்?
» கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?
» ‘வில்ஃபுல் டிஃபால்டர்’(Wilful Defaulter),யார்? எதற்கு? எப்போது?
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum