Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ரெபோ விகிதம் 0.25% குறைப்பு: குறைகிறது வீட்டுக் கடன் வட்டி
Page 1 of 1
ரெபோ விகிதம் 0.25% குறைப்பு: குறைகிறது வீட்டுக் கடன் வட்டி
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, ரெபோ விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.50% ஆக குறைக்கப்பட்டிருகிறது. பணவீக்கம் குறைந்து வருவதை அடுத்து வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், மாற்றம் செய்யப்படாத சிஆர்ஆர் ( வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம்) தொடர்ந்து 4 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி குறைப்பின் எதிரொலியாக, வங்கிகளில் வாங்கப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு நிலவுகிறது.
முன்னதாக, முன்னதாக கடந்த ஜனவரி 15-ம் தேதியன்று, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது மேலும் 0.25% குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பின்போது இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால், கடந்த ஜனவரி மாதமும் சரி, தற்போதும் சரி வழக்கமான ஆய்வுக் கூட்டங்களுக்கு அப்பாற்பட்டே இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் கருத்து:
ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீடு, வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ. தொகை குறையும் என நிதித்துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையில் புதிய உச்சம்:
பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக துவக்கத்தின்போது புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 29,900 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 91 புள்ளிகள் மேல் உயர்ந்து 9,000 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு...எவ்வளவு லாபம்?
» வீட்டுக் கடன்: வட்டி மூன்று வகை
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பில்லை: வல்லுநர்கள் கருத்து
» வீட்டுக் கடன்: வட்டி மூன்று வகை
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!
» வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பில்லை: வல்லுநர்கள் கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum