Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
2015-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?
Page 1 of 1
2015-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?
இந்திய பங்குச் சந்தை, 2014, டிசம்பர் 24-ம் தேதி வரைக்கும் சென்செக்ஸ் 29.40%, நிஃப்டி 30.40% வருமானம் அளித்திருக்கிறது. இந்த அளவு வருமானத்தை 2014-ல் வேறு எந்த முதலீடும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் 2015-ல் இந்திய பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதை மும்பையை சேர்ந்த முன்னணி பங்குச் சந்தை நிபுணர்
ஏ.கே. பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘ கடந்த சில மாதங்களாக காளையின் பிடியில் இருந்த இந்திய பங்குச் சந்தை, இப்போது சின்ன கரெக்ஷனில் இருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் 7600 வரை இறங்க வாய்ப்புள்ளது. அதற்கும் கீழ் இறங்கினால் 7200 வரைகூட இறங்குவதற்கு வாய்ப்புண்டு. அடுத்த இரு ஆண்டுகளில் இதுதான் பெரிய கரெக்ஷனாக இருக்கும். சிறு முதலீட்டாளர்கள், இதனை நல்ல முதலீட்டு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். 2015-ம் ஆண்டு இறுதிக்குள் நிஃப்டி புள்ளிகள் 10500-க்கு அதிகரிக்கும். அதனைத் தாண்டினால் 11200-க்கு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது” என்ற ஏ.கே.பிரபாகர், 2015-ல் முதலீடு செய்ய வேண்டிய நிறுவனப் பங்குகள் குறித்து விளக்கமாகச் சொன்னார்.
‘‘2015-ம் ஆண்டில் இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும். அப்போது வங்கிகளின் செயல்பாடு மேம்படும். அந்தவகையில் பல முன்னணி வங்கிப் பங்குகளின் விலை 30 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும்.
பொதுத்துறை வங்கிகளில் கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தனியார் துறை வங்கிகளில் யெஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்றவற்றை முதலீட்டுக்காக கவனிக்கலாம். 2015-ல் நிஃப்டி-ஐவிட பேங்க் நிஃப்டியின் ஏற்றம் அதிகமாக இருக்கும்.
அடுத்து சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் துறை மூலதனப் பொருட்கள் (கேப்பிட்டல் கூட்ஸ்) துறை. இதில் எல் அண்ட் டி, ஹேவல்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபம் அளிக்கக் கூடியவையாக இருக்கும்.
இவற்றுக்கு அடுத்தபடியாக, மின் உற்பத்தி துறையைச் சேர்ந்த என்டிபிசி, டாரன்ட் பவர் நிறுவனங்களின் செயல்பாடு 2015-ம் ஆண்டில் சிறப்பாக இருக்கும். இது பங்கின் விலையிலும் எதிரொலிக்கும்” என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.
‘‘கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சி கண்டிருப்பது உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபகரமாக மாறி இருக்கிறது. குறிப்பாக, குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ், கொரமண்டல் இன்டர்நேஷனல், ராலிஸ் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். இவற்றின் பங்கின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
2015-ல் கவனிக்க வேண்டிய 11 பங்குகளின் பட்டியலை அட்டவணையாக (பக்கம் 12) தந்துள்ளேன். பார்த்துக்கொள்ளவும்'' என்றார்.
வரும் 2015-ல் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என ஜியோஜித் பிஎன்பி பரிபா நிறுவனத்தின் தலைவர் (ரிசர்ச்) அலெக்ஸ் மேத்யூஸ் விளக்கிச் சொன்னார்.
‘‘2014-ம் ஆண்டில் மிட் கேப் பங்குகள் கணிசமான விலையேற்றத்தைக் கண்டிருக்கின்றன. டிசம்பர் 24 வரையிலான ஓராண்டு காலத்தில் பிஎஸ்இ மிட் கேப் இண்டெக்ஸ் சுமார் 55% அதிகரித்துள்ளது. இந்த இண்டெக்ஸ் 2014, டிசம்பர் மாதத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு, புதிய 52 வார உச்சத்தை (10599.80) எட்டி இருக்கிறது. இடையில் மிட் கேப் பங்கு களின் விலையில் கரெக்ஷன் ஏற்பட்டிருக்கிறது. இதன்பிறகு இந்தப் பங்குகளின் மதிப்பீடு கவர்ச்சிகரமானதாக மாறி இருக்கிறது.
பல்வேறு சர்வதேச காரணங்கள் நம் சந்தையைப் பாதிக்கும் அம்சமாக இருக்கின்றன. இவை குறுகிய காலத்தில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பாதித்தாலும், நீண்ட காலத்தில் நம் பங்குச் சந்தை வலிமையானதாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பல்வேறு தரக்குறியீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 6 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் என கணித்துள்ளன.
நாட்டில் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைவாக இருப்பது, ஜிடிபி வளர்ச்சி 5 முதல் 6 சதவிகிதத்துக்குமேல் இருப்பது, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருப்பது போன்றவைத் தொடர்ந்தால், இந்திய பங்குச் சந்தை அனைத்து தடைகளையும் தாண்டி சிறப்பான வருமானத்தை அளிக்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் கரெக்ஷன்களை முதலீட்டாளர்கள் முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற அலெக்ஸ் மேத்யூஸ் இப்படி சொல்வதற்கான காரணங்களையும் விளக்கினார்.
‘‘எங்களைப் பொறுத்தவரையில், இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை மீது பாசிட்டிவ் எண்ணம் கொண்டிருக்கிறோம். ஐரோப்பிய மண்டலப் பிரச்னை, ரஷ்யாவில் வட்டி விகித அதிகரிப்பு, இந்திய பங்குச் சந்தை யிலிருந்து எஃப்ஐஐகள் முதலீட்டை வெளியில் எடுப்பது, டாலர் மதிப்பு வலிமையாகி இருப்பது போன்றவற்றால் குறுகிய காலத்தில் இந்தியச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். அப்போது சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அதன் அடுத்தக் கூட்டத்தில் வட்டியை உயர்த்தினால், இந்திய பங்குச் சந்தையில் கரெக்ஷனை எதிர்பார்க்கலாம். அந்தவகையில், இப்போதுள்ள குறுகிய கால கரெக்ஷன் இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்தியச் சந்தை காளையின் பிடியில் இருக்கும்” என்றவர், இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கும் விஷயங்கள் குறித்து விளக்கிச் சொன்னார்.
‘‘சரக்கு மற்றும் சேவை வரிகள், இன்ஷூரன்ஸ் மசோதாக்கள் நாடாளு மன்றத்தின் ஒப்புதலை பெற்று அமலுக்கு வந்தால், பல பெரிய முதலீட்டாளர்கள் குறிப்பாக, எஃப்ஐஐகள் நம் சந்தையில் முதலீட்டை அதிகரிக்க ஆர்வமாக இருக் கிறார்கள்.
இன்ஷூரன்ஸ் துறை சார்ந்த பங்குகள், மதுபானம் அல்லாத பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு அதிகரித் திருப்பதால், இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு ஏற்கெனவே குறையத் தொடங்கி இருக்கிறது. இது குறுகிய காலத்துக்குத் தொடர வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், இதற்கு மாறாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது. கூடவே, ரூபாயின் மதிப்பு நிலையாக இருந்தால், அது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாக அமையும்’’ என்றவர், இந்தசமயத்தில் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
‘’நம் நாட்டைப் பொறுத்தவரையில் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில், அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஹர்ஷத் மேத்தா செய்த குளறுபடியால் சந்தை சரிந்தபோதும், 2008 சர்வதேச பொருளாதாரச் சிக்கலின்போதும் கையைச் சுட்டுக் கொண்ட முதலீட்டாளர்கள், இப்போதும் பங்கு முதலீட்டிலிருந்து விலகியே இருக்கிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 75 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்திருக்கிறது.
அதேநேரத்தில், 2008-ல் தொட்ட புதிய உச்சமான 14239 புள்ளிகளுக்கு உயரவில்லை. இதிலிருந்து பல சிறு முதலீட்டாளர்கள், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வதிலிருந்து விலகியே இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சிறு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், முன்னணித் துறைகளான தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), பார்மா போன்றவற்றின் முக்கியப் பங்குகளை 2015-ம் ஆண்டில் கவனிக்கலாம். கூடவே, தனியார் வங்கிகள், ராணுவம், வாகனத் துறை பங்குகளும் நல்ல வருமானம் கொடுக்கக்கூடும்.
கரெக்ஷன் என்பது பங்குச் சந்தைக்கு ஆரோக்கியமான விஷயம். ஏதாவது மோசமான தகவல்கள் வரும்போது, சந்தை இறங்கினால், அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி சிறுமுதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயங்கக் கூடாது” என்றார்.
இனியென்ன, 2014-ல் முதலீடு செய்யாதவர்கள், 2015-லாவது சிறுக சிறுக பங்குச் சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாமே!
டிஸ்க்ளெய்மர்: இங்கே சந்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அனலிஸ்ட்டுகளின் சொந்தக் கருத்துகளே, அது நாணயம் விகடன் இதழைச் சாராது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும்முன் உங்களின் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசிக்க கேட்டுக்கொள்கிறோம்.
-ந.விகடன் இந்த நிலையில் வரும் 2015-ல் இந்திய பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதை மும்பையை சேர்ந்த முன்னணி பங்குச் சந்தை நிபுணர்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரமா, சாபமா?
» சரிவுக்காக காத்திருக்கிறதா பங்குச் சந்தை?
» மே 16 அன்று பங்குச் சந்தை என்னவாகும்?
» பங்குச் சந்தை என்றால் என்ன?
» நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! பணக்காரர் ஆக்கும் பங்குச் சந்தை ரகசியம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum