வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய...10 ஃபைனான்ஷியல் கட்டளைகள்!

Go down

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய...10 ஃபைனான்ஷியல் கட்டளைகள்! Empty கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய...10 ஃபைனான்ஷியல் கட்டளைகள்!

Post by தருண் Tue Dec 30, 2014 3:31 pm

1. டேர்ம் இன்ஷூரன்ஸ்: ஆபத்தில் உதவும் நண்பன்!

ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பாதுகாப்புகளில் இன்று இன்ஷூரன்ஸையும் இணைத்துக்கொள்வது முக்கியம். ஒருவரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, அவரது வருடாந்திர சம்பளம் அல்லது வருமானத்துக்கு ஏற்றார் போல மற்றும் வயதுகேற்ப 10 முதல் 15 மடங்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருந்தே ஆக வேண்டும்.

2. மெடிக்ளைம்: தனியாகத் தேவை!

இன்றைய நிலையில் மெடிக்ளைம் பாலிசியின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் தவறு, அலுவலகத்தில் மெடிக்ளைம் பாலிசி இருக்கிறது என்பதற்காகத் தனியாக எடுக்காமல் விடுவதுதான். ஒருவருக்குக் குறைந்தபட்ச தொகைக்காவது தனியே மெடிக்ளைம் பாலிசி இருந்தாக வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. தனிநபர் விபத்துக் காப்பீடு!

வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ்கள் கட்டாயம் என்பதுபோல, ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். திடீரென்று ஏற்படும் அசம்பாவிதங்களால், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத நிலை உண்டானால், இந்தக் காப்பீடு மூலம் கிளைம் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய...10 ஃபைனான்ஷியல் கட்டளைகள்! Nav40a

4.வீடு: அடிப்படைத் தேவை!

ஒருவருக்கு வீடு என்பது மிகவும் முக்கியமான விஷயம். வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டி குடியேறிவிட வேண்டும் என்பதையே இலக்காக வைத்திருப்பவர்கள் பலர். ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமல், ஆசையை ஆசையாக மட்டுமே வைத்து வாழ்ந்து வருபவர்களும் ஏராளம். சம்பாதிக்கும் நாள் முதல் முழுபணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும், வீட்டுக் கடனுக்கான முன்தொகைக்காவது சேமித்து வைத்திருப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

5.முதலீட்டில் ரிஸ்க்!

முதலீட்டில் ரிஸ்க் என்பது கால அவகாசத்தைப் பொறுத்ததே. மூன்று வருடத்துக்கு மேல் காத்திருக்கும் முதலீடுகள் கண்டிப்பாக ஈக்விட்டி சார்ந்து இருப்பது நல்லது. அது ஒன்றுதான் பணவீக்கத்தைக் கட்டுபடுத்தும். ஆனால் ரிஸ்க் எடுக்கத் தகுதியுள்ளவர்கள் கூட, வங்கி சேமிப்புக் கணக்கையும், வருமானம் குறைவாகத் தரக் கூடிய முதலீட்டையும் தேர்ந்தெடுப்பது வருந்தத்தக்க விஷயம்.

6.பிறருடன் ஒப்பிட வேண்டாம்!

அண்டை வீட்டார், உறவினர்களுடன் பொருளாதார ரீதியாக ஒப்பிட்டுப் பார்ப்பது பிரச்னைக்கே வழிவகுக்கும். ஒவ்வொரு மனிதருடைய குடும்பச் சூழல் வெவ்வேறானவை. நமக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்பட்டாலே பல சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க முடியும்.

7.தவறான வாக்குறுதிகள்!

இன்றைய நிலையில் முதலீடு சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள், அவர்களின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து சிறப்பாகச் சொல்லி, அதிக வருமானத்தைப் பெற்றுத் தருவதாக தவறான வாக்குறுதிகளை வழங்குவார்கள். இதை நம்பி ஒருபோதும் எதிர்காலத் தேவைகளுக்கான முதலீடுகளை ஆரம்பித்து விடக் கூடாது. இது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

8.முதலீட்டில் கவனிக்க!

எந்த ஒரு முதலீட்டைத் தேர்வு செய்யும்போதும் அதனுடைய குணம், ரிஸ்க் மற்றும் நீண்ட கால அடிப்படையில் எவ்வளவு வருமானம் தரும், அந்த முதலீட்டுத் திட்டங்களின் கடந்த கால வளர்ச்சி, அது அரசு ஒழுங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

9.தவறான மனநிலை!

இன்று வரும் வருமானமே இன்னும் பத்து ஆண்டுக்குப் பிறகு இருந்தாலும் போதுமானது என்று பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். விலைவாசி ஏற்றம், பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால்
எதிர்காலப் பணத்தேவையும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

10.சீக்கிரமாக முதலீடு செய்யுங்கள்!

எவ்வளவு சீக்கிரம் முதலீட்டை தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தேவைக்கான தொகையை முதலீட்டின் மூலம் விரைவில் அடைய முடியும்.

ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum