வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கூட்டுறவு வங்கிகள்... யாருக்கு பயன்?

Go down

கூட்டுறவு வங்கிகள்... யாருக்கு பயன்? Empty கூட்டுறவு வங்கிகள்... யாருக்கு பயன்?

Post by தருண் Mon Nov 11, 2013 3:13 pm

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பலவிதமான வங்கிகள் வந்தபிறகும் கூட்டுறவு வங்கிகள் தனக்கென இருக்கும் இடத்தை விடாமல் பிடித்துக்கொண்டுள்ளன.

இந்தக் கூட்டுறவு வங்கிகளில் என்னென்ன சேவை கிடைக்கும்?, இதன் வட்டி விகிதம் எப்படி? என்பதுகுறித்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.பி.சிவன் அருளிடம் கேட்டோம்.

''கூட்டுறவு வங்கி என்பதே முழுக்க முழுக்க விவசாயி களுக்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த வங்கியில் மூன்று அடுக்கு முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறும். அதாவது, நபார்டு வங்கி கொடுக்கும் பணம், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தரும் பணம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தரும் பணம் என்ற முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறும். விவசாயிகள் நேரடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிக்கொள்ளலாம்.

பயிர்க் கடன், நகைக் கடன், தனிநபர் கடன், வீட்டு அடமானக் கடன், கல்விக் கடன் என அனைத்து வகையான கடன்களும் கிடைக்கும். ஒவ்வொரு கடனுக்கும் அதிகபட்ச தொகை என ஒரு அளவை வைத்துள்ளோம். (அட்டவணையைப் பார்க்க).

கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளைப் போலவே, பலவிதமான சேவைகளும் உள்ளன. அதாவது, இன்டர்நெட் பேங்கிங், மின்கட்டணம் செலுத்தும் வசதி, அனைத்து வகையான பில்களையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி, பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அலெர்ட் என பல வசதிகள் உள்ளன.

அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் நபார்டு வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நபார்டு வங்கி, மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். கடந்த 108 வருடங்களாக இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் மட்டும் 16,500 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்துள்ளோம். இதன்மூலம் 43 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

விவசாயக் கடன் திட்டங்கள்!

விவசாயிகளுக்கு நகைக் கடன் என்பது 7 சதவிகித வட்டியில் கிடைக்கிறது. இதற்கு நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றைக் காண்பித்து கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்தக் கடனை ஒரு வருடத்தில் திரும்பச் செலுத்திவிட வேண்டும். இந்தக் காலஅளவில் கடனை அடைப்பவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வட்டித் தொகையை அரசு திரும்பக் கொடுத்துவிடும்.

நிலம் இல்லாத விவசாயிகள் (அதாவது, குத்தகை நிலத்தில் பயிர் செய்பவர்கள்), குறைந்த அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் பயன்பெறும் வகையில் விவசாயக் குழுக்கள் அமைத்து, அதன்மூலமாகவும் கடன் வழங்கு கிறோம்.

இதற்கு ஒரு குழுவில் 10 விவசாயிகள் இருக்க வேண்டும். இவர்கள் இணைந்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தொகையை அனைவரும் பகிர்ந்தும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு விவசாயி தனியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால், அந்தக் கடனுக்கு குழுதான் பொறுப்பு. ஒரு கடனை அடைத்த பிறகுதான் புதிய கடன் வாங்க முடியும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் கடனை திரும்பச் செலுத்திவிட வேண்டும். சரியாக கடனை திரும்பச் செலுத்துபவர்களுக்கு வட்டி தொகையை அரசு திரும்பக் கொடுத்துவிடும்.
பயிர்க் கடன்களுக்கு நாங்கள் சில விதிமுறைகள் வைத்துள்ளோம். அதாவது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், அந்தப் பகுதியில் விளையும் பயிர்களுக்கான செலவு தொகையைக் கணக்கிட்டு வைத்திருப்போம். அந்தத் தொகையை மட்டும்தான் கொடுப்போம். கூடுதல் தொகை வாங்க முடியாது.

பொதுமக்களுக்கான திட்டங்கள்!

பொதுமக்களுக்கும் அனைத்துவிதமான கடன்களும் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் 14 சதவிகித வட்டியில் கிடைக்கிறது. இவர்களுக்கு வட்டியில் எந்தவிதமான சலுகை யும் கிடையாது. அதேபோல, 5 ஆயிரம் ரூபாய்க்குக்கூட நகைக் கடன் பெற முடியும்.
பொதுமக்கள் எங்களிடம் சேமிப்புக் கணக்கும் துவங்கிக்கொள்ளலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. இதில் தனியார் வங்கிகளைப்போலவே அனைத்துவிதமான சேவைகளும் வழங்குகிறோம்.

எங்களிடம் வீட்டை அடமானமாக வைத்து கடன் பெறவும் முடியும். ஆனால், புதிதாக வீடு வாங்குவதற்கு, கட்டடம் கட்டுவதற்கெல்லாம் நாங்கள் கடன் தருவதில்லை. அதேபோல, கல்விக் கடன் என்பது குறிப்பிட்ட அளவில் தான் வழங்குகிறோம். வெளிநாடு சென்று படிக்கும் படிப்புகளுக்கு நாங்கள் கடன் தருவதில்லை. எங்களிடம் டெபாசிட் திட்டங் களும் உள்ளன. இதற்கு அதிகபட்சம் 10% வரை வட்டி தருகிறோம்'' என்றார்.
மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடன் தவிர்த்து மற்ற அனைத்துக் கடன்களுக்கும் வட்டி விகிதம் அதிகமாக உள்ளதே என சிவன் அருளிடம் கேட்டோம்.

''எங்களுடைய முன்னுரிமை துறை என்பது விவசாயம்தான். அவர்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிற வங்கிகளுக்கு வீட்டுக் கடன் தருவது முன்னுரிமை துறையாக இருக்கும். அதனால்தான் அவர்கள் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கிறார்கள்'' என்றார்.

கூட்டுறவு வங்கிகள்... யாருக்கு பயன்? Nav19c

கூட்டுறவு வங்கிகளில் பல வசதிகள் இருந்தாலும் சில அடிப்படையான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இங்கு செல்வதில்லை. அதாவது, சென்னையில் மொத்தமே 47 கிளைகள்தான் உள்ளன. மிகச் சில கிளைகளில் மட்டுமே ஏ.டி.எம். வசதி இருக்கிறது. இன்றைய வேகமான காலத்தில் அவசரத்துக்கு பணம் எடுக்கும் வசதி இல்லாதது ஒரு பெரிய குறைதான் என்றாலும், இந்த வங்கி தரும் டெபிட் கார்டை பயன்படுத்தி அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்பது ஆறுதலான விஷயம்.

பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் இந்தக் காலத்தில் விரைவான சேவைகளை வழங்க கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

நாணய விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum