Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
முடிவுகளை பொறுத்தே வெற்றி!
Page 1 of 1
முடிவுகளை பொறுத்தே வெற்றி!
முடிவு எடுக்கும் திறமை என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலை களிலும் சரியானதாக அமையுமா என்பது சந்தேகமே. ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும். வெற்றிப் படிகட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவு பாதையில் செல்வதாக இருந்தாலும் சரி, எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணம். எனவே தான் முடிவு எடுத்தல் என்பது ஒரு கிரியா ஊக்கியை போல செயல்படுகிறது.
முடிவெடுத்தல் திறன் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 12 புத்தகங்களை எழுதியவரும், மேலாண்மையில் தலைசிறந்த பேராசிரியராகவும் இருக்கும் ஆலன் ரோவ் இந்த புத்தகத்தில் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதை போல வால்ட் டிஸ்னி என்ற குழுமத்தில் மைக்கேல் ஓவிட்ஸ் என்பவரை குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருந்து 14 கோடி டாலர்களை கொடுத்து விலக்கியது. இதை எதிர்த்து முதலீட்டாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
நீண்ட விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் வால்ட் டிஸ்னி நிர்வாக குழு எடுத்த முடிவுகள் நியாயமானதாகும் என்று கூறினார்கள். அந்தச் சரியான முடிவை குறித்த நேரத்தில் எடுத்ததன் விளைவாக பின்னாளில் ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை வால்ட் டிஸ்னி தவிர்க்க நேர்ந்தது. எனவே முடிவு எடுத்தல் என்பது தனி நபர் சார்ந்ததாக இல்லாமல், கொள்கை மற்றும் நிறுவனம் தொடர்புடையதாக இருந்த காரணத்தால் அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகள் மிகச் சரியாக அமைந்தன. மோசமான சூழ்நிலையில் வேறுபட்ட முடிவு எடுப்பது என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணம் சரியானதாக அமையும்.
2002 ஆம் ஆண்டு ஹ்யூலெட் பாக்கார்ட் (Hewlett – Packard) காம்பேக் (Compaq) என்ற நிறுவனத்துடன் இணைந்ததன் விளைவாக முதலீட்டாளர்களுக்கு 240 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்த இரண்டு குழுமங்களும் தங்கள் லாபத்தை தொலைத்ததுடன் எந்த ஒரு குறிக்கோளையும் அடைய இயலவில்லை.
தொலைநோக்கு பார்வை இல்லாமல், கொள்கைகளின் அடிப்படையில் இல்லாமல் முடிவுகள் எடுத்தால் இது போலத்தான் நேரும்.
சில நேரங்களில் முழுமையான தகவல்கள் இல்லாத காரணத்தால் வேறுமாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கும் எதிர்காலத்தில். அப்போது நடக்க இருக்கும் நிகழ்வுகளை சரிவர உள்வாங்கி பொறுத்தமான முடிவுகளை எடுக்க தெரியாதவர்கள் விழி இழந்தவர்கள் யானையை அடையாளம் கண்டதற்கு ஒப்பானதாகும் என்று சொல்கிறது இந்த புத்தகம்.
மேலும் முடிவெடுக்கும் செயல் முறைகள் சிலவற்றை இந்த புத்தகத்தில் விளக்கி உள்ளார்கள்.
# எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலோ, எதற்கெடுத்தாலும் எதிர்த்து வாதிடும் பழக்கங்களை கொண்டவர்களாக இருந்தாலோ அந்த நிறுவனத்தில் திறமையான நல்ல முடிவுகள் என்பது கானல் நீராக அமையும்.
# எந்தவொரு பிரச்சினையையும் சரியான முறையில் வடிவமைத்தால் அந்த செயல்முறையிலேயே வெகுவான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். ஒருவருடைய அனுமானம், இலக்கு, அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவை பிரச்சினைகளை சரியான முறையில் வடிவமைக்க பெரிதும் உதவும்.
# நல்ல முடிவு எடுக்கும் திறன் என்பது மாறுபட்ட கருத்துகளை தெரிந்து எடுக்கும் பாங்காகும். ஒரு குழுவாகவோ அல்லது மாறுபட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கோடோ அல்லது வித்தியாசமான அணுகுமுறையாலோ விதவிதமான கருத்துகளை உருவாக்க முடியும்.
# சில நேரங்களில் தனி நபர் எடுக்கக்கூடிய முடிவுகளை காட்டிலும் மற்றவர்களுடன் கலந்து மேற்கூறிய வகையில் எடுக்கக்கூடிய முடிவுகளே சிறப்பானதாக அமையும். வெவ்வேறு வகையான மாற்றுக் கருத்துகளை உருவாக்குவது சில நேரங்களில் சாதாரணமான விஷயமாக இருக்கும்.
ஆனால் அந்த மாற்று கருத்துகளை ஆராய்ந்து அவற்றுள் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் பணி மிகவும் குழப்பமானதும், கடினமானதும் ஆகும். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் பொழுது லாபநஷ்ட கணக்குகளையும், நிகழ்வுக்கான முன்னுரிமைகளையும் விட்டுக்கொடுத்து, பெற வேண்டியவைகளை பெறுவதற்கான காரணிகளையும் நிச்சயமாக கருத்தில் கொள்ளவேண்டும்.
# தற்காலங்களில் மாறுபட்ட கருத்து குவியல்களில் இருந்து சரியான முடிவுகளை தேர்ந்தெடுக்க கணினியும் மென்பொருள் சேவைகளும் அதிகளவில் உள்ளன. ஆயினும் நமக்கு என்ன தேவை என்பது சரிவர தெரியாத நேரங்களில் கணினியும், மென்பொருள் சேவையும் நல்ல முடிவுகளுக்கு உத்திரவாதம் அல்ல.
# சில நேரங்களில் முடிவெடுப்பதை காட்டிலும் அதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் அதிகமாக இருக்கும். முடிவு எடுப்பதை காட்டிலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொண்டு செல்வது முக்கியமானதாகும். தனிநபர் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் ஊசலாட்டம் போல் ஆடி எதிர்மறையான முடிவுகளை எடுக்க நேரிடும்.
# உறுதியில்லாத அல்லது நிச்சயமற்ற முடிவுகள் பிரச்சினைகளுக்கு ஆதாரமாகும். எதிர்காலத்தை முன்னிட்டு முடிவுகள் எடுக்கப்படும் பொழுது, நிகழக்கூடிய செயல்களுக்கான உண்மையான காரணிகளையும் அது தொடர்பான தகவல்களையும் முழுமையாக பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. நிச்சயமற்ற தன்மை முடிவெடுக்கும் பாங்கை சிக்கலாக்கும். ஆயினும் நிச்சயமற்ற தன்மைகளின் வெளிப்பாடுகள் ஒரு நல்ல முடிவு எடுப்பதற்கு காரணியாக அமையும்.
நிறுவனங்களில் முடிவெடுக்கும் திறன் மேம்படுவதற்கு சில உத்திகளை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தலைமையின் ஆதரவு அத்தியாவசியம். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எப்பொழுது தன்னுடன் பணிபுரியும் மற்றவர்களை மிக முக்கியமானவர்களாக குறிப்பிடுகிறார்களோ, அப்பொழுது அந்த குறிப்பிட்ட நபருக்கு பணியாளர்களிடமோ அல்லது மக்களிடமோ ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அந்த முக்கியமான நபர் அறிவிக்கும் செய்தி மற்றவர்களை சென்று சேரும் பொழுது அவர்கள் பணி எளிதாகிறது.
முக்கியமான பெரிய அளவிலான முடிவுகளை உடனடியாக எடுக்க யாராலும் இயலாது. அதனால் சிறிய முடிவுகளை, பிரச்சினை இல்லாத முடிவுகளை, பாதிப்பு அதிகம் ஏற்படாத முடிவுகளை மேற்கொண்டு அவைகளை பரிசோதனை முறையில் கற்று பின் செயல்படுத்துதல் சிறந்தது.
முடிவுகள் எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துதல் அவசியம். நிறுவன அளவில் முடிவுகள் எடுக்கும் பொழுது அவ்வாறு எடுத்த முடிவுகள் எந்த அளவுக்கு சரியானதாக அமைந்தது என்பதை பற்றிய மறுமதிப்பீடு மேற்கொள்ளுதல் வேண்டும்.
அதே போல இப்பொழுது எடுத்த இந்த முடிவை இதைவிட சிறப்பானதாக எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று சிந்திப்பதும் சிறப்பானதாகும். முடிவெடுத்தாலும் கூட கருத்துகளையும், காரணிகளையும், சூழ்நிலைகளையும் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். இவை மீண்டும் முடிவுகள் எடுக்கும்பொழுது பயன்படுத்த வசதியாக இருக்கும்.
இந்த புத்தகத்தில் சில செய்முறை விளக்கங்களும், சில நிதிநிலை மேம்பாட்டு கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தினால் முடிவெடுக்கும் திறமை மேம்படுவது முற்றிலும் சாத்தியம். இன்றைய சூழலில் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு வகையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
முடிவுகளே எடுக்காமல் ஒத்திபோடும் மனப்பாங்கை காட்டிலும், மோசமான முடிவுகளை எடுத்து அதன் விளைவுகளை அனுபவித்து அறிவு சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள பழக்கப்படுத்தி கொள்ளவேண்டும். மாறி வரும் சமுதாய, பொருளாதார, கலாச்சார, ஊடக உந்துதல்களில் முடிவுகளை எடுக்காமல் இருக்கவே முடியாது.
அதே நேரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுப்பவர்கள் அல்லல்பட நேரிடும். அவ்வாறு இல்லாமல் தனி நபராகவோ, ஒரு குழுமத்தின் தலைவராகவோ, தலைமை பண்புகளை தாங்கி முன் நின்று செயலாற்றும் முக்கியமானவராகவோ, யாராக இருந்தாலும் முடிவு எடுக்கும் திறன் மிகவும் முக்கியம். வாருங்கள் முடிவுகளை மாற்றி எடுப்போம். முடிவுகளை மேம்படுத்துவோம்;
-தி இந்து முடிவெடுத்தல் திறன் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 12 புத்தகங்களை எழுதியவரும், மேலாண்மையில் தலைசிறந்த பேராசிரியராகவும் இருக்கும் ஆலன் ரோவ் இந்த புத்தகத்தில் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ரிசர்வ் வங்கி முடிவுகளை பொறுத்தே பங்குச்சந்தை வர்த்தகம் இருக்கும்
» ஐம்புலன்களைக் கவர்ந்தால் வெற்றி!
» டிரேடிங்கில் தொடர் வெற்றி சாத்தியமா?
» முதலீட்டில் வெற்றி பெறுவதற்கான சிறந்த 10 வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum