Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
காப்பீடு பற்றி ஒரு கணக்கு!
Page 1 of 1
காப்பீடு பற்றி ஒரு கணக்கு!
மனித வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்து இன்னொன்று இருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தேடித்தரும் இன்ஷூரன்ஸ்! ஆனால், அது ஏதோ தேவையற்ற செலவு என்று பலரும் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். உங்கள் உயிர், உடமைகளின் பாதுகாப்புக்கு வழி செய்யும் இன்ஷூரன்ஸ் விஷயத்தில், உங்களுக்கு எந்த அளவு விழிப்பு உணர்வு இருக்கிறது... நீங்களே சோதித்துப் பாருங்களேன்!’’ என்கிறார் நேஷனல் இன்ஷூரன்ஸின் டிவிஷனல் மேனேஜர் வேணுகோபாலன்.
1. உங்கள் சம்பளத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் எத்தனை சதவிகிதம்?
அ. 5%க்கு கீழ்
ஆ. 5 10%
இ. 10%க்கும் மேல்.
2. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். காரணம்...?
அ. புதிதாக ஏஜென்ட்டான ஒரு நண்பரின் வற்புறுத்தலுக்காக.
ஆ. வருமான வரிச் சலுகைக்காக.
இ. எதிர்காலப் பாதுகாப்புக்காக.
3. மருத்துவக் காப்பீடு அவசியமா..?
அ. எப்போது எதுநடக்கும் என்று தெரியாத உலகம் இது. எனவே, நிச்சயம் தேவை.
ஆ. வருமான வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் எடுக்கலாம்.
இ. பிரீமியத் தொகை கூடுதல் போல் தெரிவதால், மிகக்குறைந்த தொகைக்கு பாலிசி எடுத்து வைக்கலாம்.
4. வாகன விபத்து ஒன்றில் சிக்கிவிட்டீர்கள். உடனே நீங்கள் செய்வது..?
அ. உறவினர்களுக்குத் தகவல் சொல்லி வரவழைப்பேன்.
ஆ. இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் சொல்வேன்.
இ. போலீஸுக்குப் போய் எஃப்.ஐ.ஆர் போடுவேன்.
5. வீட்டு இன்ஷூரன்ஸ், வீட்டுப் பொருட் களுக்கான இன்ஷூரன்ஸ் செய்திருக்கிறீர்களா?
அ. புதிய பொருட்களுக்கு மட்டும் எடுப்பேன்.
ஆ. ரொம்ப முக்கியமான பொருட்களை மட்டும் இன்ஷூர் செய்திருக்கிறேன்.
இ. அனைத்து பொருட்களுக்கும் இன்ஷூர் செய்துவிடுவேன்.
6. ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசியை வைத்து கடன் வாங்கும் வசதி இருக்கிறது...
அ. அதில் வட்டி சதவிகிதம் குறைவு என்பதால் அவசியமான நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவேன்.
ஆ. கடனை வாங்கிவிட்டு, விரைவிலேயே திரும்பச் செலுத்த முயற்சிசெய்வேன்.
இ. ‘நமக்குப் பின் குடும்பத்துக்கு பாதுகாப்பு தரும் பாலிசியில் கை வைப்பதா..?’ என்று யோசிப்பேன்.
7. நீங்கள் செய்திருக்கும் பல்வகை இன்ஷூரன்ஸ் பற்றிக் குடும்பத்தாருக்குத் தெரிவிக்க என்ன செய்திருக்கிறீர்கள்?
அ. டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
ஆ. பாலிசி பத்திரங்களை ஒரு ஃபைலில் போட்டு வைத்திருக்கிறேன்.
இ. குடும்பத்தாருக்குத் தகவல் சொல்லி இருக்கிறேன்.
8. ஆயுள்காப்பீடு பிரீமியம் கட்டும் கெடு அடிக்கடி தாண்டிப் போகும்போது...
அ. சலுகைத் தேதிக்குள் கட்ட முயற்சிப்பேன்.
ஆ. சிரமமாக இருந்தால் சரண்டர் செய்துகட்டிய தொகையை வாங்கி விடுவேன்.
இ. கட்டாமல் விட்டுவிட்டு, பாலிசி முடியும்போது பணத்தை வாங்குவேன்.
9. இடம்மாறி வெளியூருக்குச் செல்லும் போது வீட்டுப் பொருட் களுக்கு காப்பீடு செய்வீர்களா?
அ. வீட்டுப் பொருட்களை இடம் மாற்றுவதற்கு, நல்ல தரமான நிறுவனத்தை அமர்த்திக்கொள்வதால் காப்பீடு செய்வதில்லை.
ஆ. எல்லாப் பொருட்களுக்கும் காப்பீடு செய்துகொள்வேன்.
இ. விலையுயர்ந்த மற்றும் கண்ணாடிப் பொருட்களுக்கு மட்டும் காப்பீடு செய்வேன்.
10. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேருக்கு ஆயுள் காப்பீடு ச்பாலிசி இருக்கிறது?
அ. சம்பாதிக்கும் என்னை நம்பித்தான் குடும்பமே இருக்கிறது என்பதால், எனக்கு மட்டும்தான்.
ஆ. எல்லோருக்குமே பாலிசி எடுத்திருக்கிறேன்.
இ. எதிர்காலத் தூண்களான குழந்தைகள் நலனுக்காக எடுத்திருக்கிறேன்.
11. விபத்துக் காப்பீட்டுப் பாலிசி எவ்வளவு ரூபாய்க்கு எடுத்திருக்கிறீர்கள்..?
அ. நான் பயணிக்கும் விதத்தைப் பொறுத்து.
ஆ. ஆபத்து இல்லை. அதனால், குறைந்த தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்வேன்.
இ. என் வருமானத்தின் அடிப்படையில் முடிவுசெய்வேன்.
12. நீங்கள் வைத்திருப்பது எந்த வகையான வாகன இன்ஷூரன்ஸ்..?
அ. மூன்றாம் நபருக்கான பாதுகாப்பு மட்டும் இருக்கிறது.
ஆ. மூன்றாம் நபருக்கான பாதுகாப்பு மற்றும் வண்டிக்கான விபத்து பாதுகாப்பு இணைந்த பாலிசி.
இ. இவை இரண்டோடு b, திருட்டு போன்றவற்றுக்கான பாலிசியும் சேர்த்து எடுத்திருக்கிறேன்.
உங்கள் பதில்களுக்கு என்ன மதிப்பெண்கள் என்பதை இங்கே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தெளிவான சிந்தனையும் முறையான அணுகுமுறையும் இருப்பவராக இருந்தால், நிச்சயமாக 30 முதல் 36 வரை மதிப்பெண் வாங்கி இருப்பீர்கள். உங்களுக்கு, அனைத்து வகை பாதுகாப்பு பற்றியும் நல்ல ஞானம் இருக்கிறது.
நல்ல திட்டங்களையும் நல்ல நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்து, அளவான பிரீமியத்தில் பெரிய பாதுகாப்பை உங்களால் செய்துகொள்ளமுடியும். கூடவே மற்றவர்களுக்கும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள்.
21 முதல் 30 வரை யிலான மதிப்பெண் பெற்றிருக்கிறீர்களா..? கொஞ்சம் உஷாராக இருங்கள். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் விளிம்பில் நின்றுகொண்டு முடிவுகளை எடுக்கும் சூழலில் இருக்கிறீர்கள். ஒன்றுக்கு இரண்டுபேரைக் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுங்கள். நமக்குத்தான் தெரியுமே என்றோ அல்லது நம்மை மீறி என்ன நடந்துவிடப்போகிறது என்றோ அலட்சியமாக நடந்துகொள்ளாமல் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.
எந்த இனத்துக்கு என்ன பாதுகாப்பு தேவைப்படும் என்று அதற்குரிய வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நல்லது. என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் நம்மை மீறியதுதானே விதியின் விளையாட்டு. அதனால், கொஞ்சம் கவனம் தேவை.
20-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறவரே, நீங்கள் மிகவும் வேகமாகச் செயல்படவேண்டிய நேரம் இது. பாதுகாப்பு பற்றிய அடிப்படை ஆர்வமும் அறிவும் இருக்கிறதே தவிர, அதில் கவனம் செலுத்து வதாகத் தெரியவில்லை. அதைத்தாண்டி, உங்களைச் சுற்றிஇருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது. இதற்கென பல புத்தகங்கள் இருக்கின்றன. வெப் சைட்கள் இருக்கின்றன. நிபுணர்கள் இருக்கிறார்கள். அதோடு, வீட்டுக்குள் வரும் விளம்பரங்களே உங்கள் அறியாமைக் கண்ணைத் திறக்கக்கூடும்.
பார்த்துப் பார்த்து சேர்த்த சொத்தை, உறவுகளை, உங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உரிய முக்கியத் துவத்தைக் கொடுங்கள். கவனமாக இருங்கள்!
-விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கூகுள் ட்ரைவ் பற்றி அறியாதவைகள் சில...!
» ஸ்பைவேர் பற்றி தெரியுமா உங்களுக்கு? (spyware)
» டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
» மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி நாம் அறிய வேண்டியவை!!
» காசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? அ முதல் ஃ வரை உங்களுக்காக...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum