வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பழைய கரன்சிக்கு பக்கா மவுசு!

Go down

பழைய கரன்சிக்கு பக்கா மவுசு! Empty பழைய கரன்சிக்கு பக்கா மவுசு!

Post by தருண் Mon Jun 16, 2014 9:06 am

பழங்கால ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் ஆகியவற்றை சேகரிப்பதில் பலரும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்தப் பழக்கம் இன்று அவர்களுக்கு நல்ல வருமானம் தருகிறது. கரன்சி நோட்டு சேகரிப்பில் விற்பனையாளரான சாமித்துரையை சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள அவரது கடையில் சந்தித்தோம். பிஸியாக இருந்தவரிடம் கரன்சி நோட்டு சேர்ப்பது பற்றி கேட்டோம்.

தொழிலாக மாறிய தருணம்!

''எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே நாணயங்கள் சேகரிப்பு, ரூபாய்தாள்கள் சேகரிப்பு, அஞ்சல் தலை சேகரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவேன். சில வருடங்கள் கழித்து, நான் சேர்த்த நாணயங்கள் மற்றும் கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமானது. அதை எடுத்து அடுக்கிவைப்பது, சுத்தப்படுத்துவதே எனக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது.

ஒருகட்டத்தில் நான் சேகரித்த நாணயங்களை விற்கவேண்டிய சூழ்நிலை உருவானது. இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், அதனால் நல்ல லாபம் கிடைத்தது. இதையே ஒரு தொழிலாக ஏன் செய்யக்கூடாது என்று நினைத்து, விற்பனைக்கென தனியாகச் சேகரிக்க ஆரம்பித்தேன்.

இன்றும் சேகரிக்கிறேன்!

நாணயங்கள், அஞ்சல்தலைகளை விட எனக்கு ரூபாய் நோட்டுகள் மீதே அதிக ஆர்வம் இருந்தது. நம் நாட்டின் பழைய ரூபாய்தாள்களே பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திரத்துக்குமுன் பயன்படுத்தப்பட்ட காதி நோட்டுகள், உலகின் மிகப் பெரிய கரன்சி நோட்டு, மிகச் சிறிய கரன்சி நோட்டு என என்னிடம் ஏராளமான ரூபாய்தாள்கள் இருக்கின்றன. நம் நாட்டில் முதல் முதலில் வெளியிடப்பட்ட 1,000 ரூபாய், 100 ரூபாய், 10 ரூபாய் போன்ற பழம் பெருமை வாய்ந்த ரூபாய்தாள்களைச் சேகரித்து விற்பனை செய்கிறேன். வெளிநாட்டு கரன்சிகளையும் என் கடையில் விற்பனை செய்கிறேன்.

ஆராய்ந்த பிறகே வாங்குவேன்!

நான் இப்படி வாங்கும் ரூபாய்தாள்கள் உண்மையானதா, அச்சிடப்பட்ட ஆண்டு, தரம் ஆகியவற்றை மதிப்பிட்டே வாங்குவேன். மெட்ராஸ் காயின் அசோசியேஷனால் வெளியிடப்பட்டிருக்கும் ‘Indian paper money guide book 2014’ என்கிற புத்தகத்தின் உதவியுடன் நன்கு ஆராய்ந்த பிறகே பழைய கரன்சிகளை வாங்குவேன். இந்தப் புத்தகத்தில் ரூபாய்தாள்களின் படங்களுடன் அது சார்ந்த விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பழைய கரன்சிக்கு பக்கா மவுசு! Nav32c

ரூபாயைப் பொறுத்து விலை!

ரூபாய்தாள்களின் விலையானது அந்த ரூபாய்தாள்களின் வாழ்நாள், பயன்பாடு போன்ற அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படு கிறது. இன்றைய நிலையில் பழைய கரன்சிகளுக்கு மவுசு அதிகம் என்பதால், விற்பனையாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதிக விலைக்கு விற்கிறார்கள். மக்களும் அவர்களிடம் இருக்கும் பழைமையான ரூபாய்தாளைக் காட்டி, அதிக விலை கேட்கிறார்கள். இதனால் பழைமையான நோட்டுகள் புழக்கத்துக்கு வராமல் போய்விடுகின்றன'' என்றார்.

பழங்கால ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுபவர் புதுவையைச் சேர்ந்த பழங்கால நாணயவியல் மற்றும் ரூபாய் நோட்டு சேகரிப்பாளர் கோபிராமன். தொண்டை மண்டல நாணயவியல் கழகம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி அதில் புதுச்சேரியைச் சேர்ந்த நாணயவியல், ரூபாய் நோட்டுகள் மற்றும் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களை ஒன்றுதிரட்டி பழங்காலப் பொக்கிஷங்களைப் பல ஆண்டுகளாகச் சேகரித்து வருகிறார். இவருடன் பேசினோம்.

கவனம் முக்கியம்!

''1910-ம் ஆண்டு ஜெர்மனி வெளியிட்ட ரூபாய் நோட்டு, ரஷிய நாட்டின் பெரிய சைஸ் நோட்டு, தாய்லாந்தின் சதுர வடிவ நோட்டு, தமிழ் எழுத்துக்கள் பொறித்த வெளிநாட்டு நோட்டு, இதுபோல் தனித்துவம் மிக்க ரூபாய் நோட்டுகளை இதுவரை சேகரித்து வந்துள்ளேன். நாணயம் சேகரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிப்பார்கள். சிலர் ரூபாய் நோட்டுகளில் உள்ள உலகத் தலைவர்களின் படங்களைத் தேடிப்பிடித்துச் சேகரிப்பார்கள். நோட்டிலுள்ள எண்கள், அச்சுகள், வடிவம் எல்லாமே இதில் அடங்கும். அந்தந்த சேகரிப்பாளரின் எண்ணத்தைப் பொறுத்து மாறும்.

பழைய கரன்சிக்கு பக்கா மவுசு! Nav32d

தற்போது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு இந்திய நோட்டுகள் நல்ல மதிப்பில் விற்பனையாகின்றன. சுமார் 20,000 - 50,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிலர் மோசடியான நோட்டுகளை அதிக விலைக்கு நம்மிடம் விற்க வாய்ப்புண்டு என்பதால், கவனமாக இருக்க வேண்டும்'' என்றார் கோபிராமன்.

பழங்கால ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், உடனே பத்திரப்படுத்துங்கள்!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum