Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டாடாவின் குறைந்த விலை "பிரைமா' டிரக்குகள் அறிமுகம்
Page 1 of 1

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் "பிரைமா' ரக டிரக்குகளில் குறைந்த விலை மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றைக் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு செயல் இயக்குநர் ரவீந்திர பிஷாரடி செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பிரைமா ரக டிரக்குகளை 2009-ஆம் ஆண்டு டாடா நிறுவனம் அறிமுகம் செய்து தொடர்ந்து விற்பனை செய்துவருகிறது. அந்த மாடல்களை விட ஏறத்தாழ இருபது சதவீதம் குறைந்த விலை கொண்ட "பிரைமா எல்எக்ஸ்' எனும் வரிசையில் பத்து புதிய மல்ட்டி-ஆக்ஸில் டிரக்குகளை இப்போது அறிமுகம் செய்கிறோம். இவற்றில் ஆறு மாடல்கள், அதிக கனமுள்ள பொருள்களை தொலைதூரத்துக்கு ஏற்றிச் செல்லும், பெரும் கனரக வகையைச் சேர்ந்தவை. கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தும் விதமாக, 4 மாடல்களை அறிமுகம் செய்கிறோம். மொத்தமாக பிரைமா ரகத்தில் இப்போது 40 மாடல்கள் உள்ளன. ஜார்க்கண்ட மாநிலம் ஜம்ஷேத்பூரில் உள்ள ஆலையில் இவை தயாரிக்கப்படுகின்றன.
முந்தைய பிரைமா மாடல் டிரக்குகளை ரூ. 23 லட்சம் முதல் ரூ. 65 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்துவருகிறோம். புதிய எல்எக்ஸ் வகை மாடல்களின் விலை ரூ. 18.5 லட்சம் முதல் ரூ. 32.5 லட்சமாகும். இப்போது சந்தையில் உள்ள சாதாரண மாடல்களைவிட இது சுமார் ஐந்து சதவீதம் கூடுதலாகும். பல்வேறு புதிய வசதிகளை ஒப்பிடும்போது, குறைந்த விலையில் அதிக மதிப்பு என்பது விளங்கும்.
வர்த்தக வாகன விற்பனை சரிந்துள்ளது. ஆனால், கட்டுமானம் உள்ளிட்ட தேவைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறோம். இப்போதைய வர்த்தக வாகன சந்தையில் டாடா 65 சதவீத பங்கு வகிக்கிறது. குறைந்த விலையில் மல்ட்டி-ஆக்ஸில் ரக டிரக்குகளை அறிமுகம் செய்வதன் மூலம், மேலும் அதிக பங்கை அடைய முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

--தினமணி
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» எடை குறைந்த நகைகளுக்கு அதிகரிக்கும் மவுசு
» இ-உயில்: குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு!(ezeewill)
» ஏபி ஆரோக்யதான்காப்பீடு அறிமுகம்
» மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?
» ஸ்மார்ட்வாட்ச்: மோட்டரோலா அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum