வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில அடிப்படை தகவல்கள்!

Go down

கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில அடிப்படை தகவல்கள்! Empty கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில அடிப்படை தகவல்கள்!

Post by தருண் Sun Mar 02, 2014 10:11 am

கார் பயணம் எவ்வளவு சொகுசு இருக்கிறதோ, அந்தளவுக்கு சிலருக்கு பெரும் கஷ்டத்தையும் கொடுத்துவிடும். மன நிம்மதியான பயணங்களுக்கும், ஆபத்தை எதிர்கொள்வதற்கும் சிறந்த வழி காருக்கு காப்பீடு செய்வது மட்டும்தான்.சிலர் கார் இன்ஸ்யூரன்ஸ் போடாமல் விட்டதால் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதை கண்கூடாக காண நேரிடுகிறது.

எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் சிலரது வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். இதனை தவிர்த்துக் கொள்வதற்கு கார் இன்ஸ்யூரன்ஸ் போடுவது அவசியம். உங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கும் இது அவசியம். கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கியத்துவம்

விபத்தில் சிக்கும்போது ஏற்படும் இழப்புகளுக்கும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு கோர
முடியும். காப்பீடுதாரர், காரில் இருக்கும் சக பயணிகள் மற்றும் காருக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு பெறலாம்.

கட்டாயமா?

இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி கார் இன்ஸ்யூரன்ஸ் போடுவது கட்டாயமான ஒன்று.

வகைகள்

கார் இன்ஸ்யூரன்ஸில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. ஒன்று Third party insurance எனப்படும் மூன்றாம் நபர் காப்பீடு, மற்றொன்று Comprehensive insurance எனப்படும் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம். முதலாவதில், உங்களால் விபத்து ஏற்படுத்தப்பட்டு பாதசாரிகள் அல்லது எதிரில் வாகனங்கள், வாகன ஓட்டிகளுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையிலானது. இரண்டாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தையும் உள்ளடக்கிய comprehensive insurance எனப்படும் ஒருங்கிணைந்த காப்பீடு திட்டம். இதில், அனைத்து வகையான இழப்பீடுகளையும் பெறலாம். எதிரில் வருபவர்களுக்கு ஏற்படும் இழப்பு மட்டுமின்றி, காப்பீடுதாரர், சக பயணிகள் மற்றும் காருக்கு ஏற்படும் இழப்புக்கும் இழப்பீடு பெற முடியும்.

எது பெட்டர்?

ஒருங்கிணைந்த கார் இன்ஸ்யூரன்ஸ் போடுவதே நல்லது. பிரிமியம் தொகை சற்று அதிகமாக இருந்தாலும், அனைத்து வகையான இழப்புகளுக்கும் இழப்பீடு பெற முடியும். இக்கட்டான நேரங்களில் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

விபரங்கள்


இன்ஸ்யூரன்ஸ் போடும்போது, டிரைவிங் அனுபவம், காரை பயன்படுத்துபவர், காரில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கார் இருக்கும் இடம் ஆகிய விபரங்களை அளிப்பது அவசியம்.

கட்டணங்களில் வித்தியாசம்

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இன்ஸ்யூரன்ஸ் கட்டணங்கள் மாறுபடும். அவை பல்வேறு புள்ளி விபரங்களின் அடிப்படையிலும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையிலான இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களை வகுக்கப்படுவதாலேயே கட்டணங்களில் வித்தியாசம் இருக்கின்றன.

கட்டண நிர்ணயம்

பிராண்டு மற்றும் மாடல், தயாரிப்பு ஆண்டு, பதிவு செய்யப்பட்ட இடம், காரின் விலை, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கார் இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்காலிக சான்று

இன்ஸ்யூரன்ஸ் போட்டதற்கான ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், கவர் நோட் எனப்படும் தற்காலிக சான்று வழங்கப்படும். இது 60 நாட்களுக்கு செல்லத்தக்கத்தாக இருக்கும்.

ஆன்லைனில் வசதி

ஆன்லைனிலேயே பாலிசியை புதுப்பிக்கும் வசதிகளும் இப்போது இருக்கின்றன. நேர விரயம், அலைச்சலை தவிர்க்க முடியும்.

ஏரியா விட்டு ஏரியா?

நீங்கள் எந்த இடத்தில் கார் இன்ஸ்யூரன்ஸ் போட்டிருந்தாலும், நாட்டின் எந்த மூலையில் விபத்து நிகழ்ந்தாலும், கார் இன்ஸ்யூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற இயலும்.

இழப்பீடு நடைமுறை

இரண்டு வகையான இழப்பீடு வழங்கும் நடைமுறையை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. Cashless claim மற்றொன்று non cashless claim ஆகும். இதில், பெரும்பாலான நிறுவனங்கள் Cashless claim service நடைமுறையை பின்பற்றுகின்றன. இந்த நடைமுறையில், கார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சர்வீஸ் மையம் அல்லது மருத்துவமனையில் பணத்தை செலுத்தும் நடைமுறையை கையாள்கின்றன. சில நேரத்தில் Non cashless claim முறையில் நீங்களே நேரடியாக சர்வீஸ் செய்துகொண்டு பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து திரும்ப பெறும் முறை இருக்கிறது. இந்த முறையில், சர்வீஸ் கட்டணத்துக்கு போதிய பணம் கையில் இல்லையென்றாலும், முன்கூட்டியே இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தால் மீதமுள்ள தொகையை அவர்கள் செலுத்தும் வசதி உள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

டூப்ளிகேட் பாலிசி

இன்ஸ்யூரன்ஸ் பாலிசி சேதமடைந்தாலும், காணாமல் போனாலும், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டூப்ளிகேட் சர்டிஃபிகேட் வாங்கிக் கொள்ளலாம்.

குடிபோதை டிரைவிங்?

தேய்மானம், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரச்னைகளுக்கு இழப்பீடு கோர முடியாது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலும், போரினால் சேதமடைந்தாலும் இழப்பீடு கிடைக்காது.

தேர்வு


மார்க்கெட்டில் பல முன்னணி வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் கார் இன்ஸ்யூரன்ஸை வழங்குகின்றன. அதில், சிறந்த, நம்பகமான இன்ஸ்யூரன்ஸை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்து போடுவது சிறந்தது.

--தட்ஸ்தமிழ்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum