Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க சில்லறை வழங்கும் இயந்திரங்கள்
Page 1 of 1
சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க சில்லறை வழங்கும் இயந்திரங்கள்
சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சென்னை நகரில் உள்ள பல்வேறு வங்கிகளில் 65 நாணயம் வழங்கும் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை (பிப்.21) திறக்கப்பட்டன.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது:
நாணயங்களின் தேவை அதிகளவில் உள்ளதால் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் 120 நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது, சென்னை நகரில் 8 வங்கிகள் 65 நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளன.
இந்த இயந்திரத்தில் ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட நோட்டுகளை செலுத்தினால், நோட்டின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதோடு அதன் சமமதிப்பு கொண்ட ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய நாணயங்களை வழங்கும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
இதே மாதிரியான இயந்திரங்களை அடுத்ததாக கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நிறுவ திட்டமிட்டுள்ளோம். இதற்காக கரூர் வைஸ்யா வங்கியிடம் பேசியுள்ளோம்.
பொதுமக்களுக்கு நாணயங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதமாக தமிழகம் முழுவதும் செயல்படும் 90 வங்கி நிறுவனங்களும் நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நாணயம் வழங்கும் இந்த இயந்திரங்கள் அதிகளவில் நிறுவப்படும் என்றார் சதக்கத்துல்லா.
இதனைத் தொடர்ந்து இந்தியன் வங்கியின் அடையாறு கிளை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை சாலை கிளை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள நாணயம் வழங்கும் இயந்திரத்தை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா திறந்து வைத்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-24, இந்தியன் வங்கி - 15, பாரத ஸ்டேட் வங்கி-10, கனரா வங்கி-5, பாங்க் ஆஃப் இந்தியா-5, ஆக்ஸிஸ் வங்கி-4, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி-1 மற்றும் டின்எஸ்சி வங்கி-1 என மொத்தம் 65 வங்கி கிளைகளில் நாணயம் வழங்கும் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை (பிப்.21) ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.நரேந்திரா, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எம்.பாசின், ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் வர்ஷா புரந்தரே, ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் நீதி ராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-தினமணி
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்க நகைக் கடன்: மதிப்பீட்டாளர்களை விரட்டும் இயந்திரங்கள்!
» டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
» டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum