Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்
Page 1 of 1
வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்
வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள் பற்றி இந்த திரியில் காண்போம் .
SALES TAX:
SAVINGS ACCOUNT:
SAFETY LOCKER :
REVERSE MORTGAGE :
SALES TAX:
பொருளின் விற்பனை மீது வசூலிக்கப்படும் வரி சேல்ஸ் டக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த வரியை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் போது வசூலித்து மத்திய , மாநில அரசுகளுக்கு கட்ட வேண்டும் .
SAVINGS ACCOUNT:
வங்கியில் தனிநபர்கள் பணம் போட்டு எடுக்கும் கணக்கு இது . பல விதமான சேமிப்பு கணக்குகள் உள்ளன .வாடிக்கையாளரின் வங்கி பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு காசோலை , எ டி எம் கார்ட் வழங்கப்படும். தனிநபர் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால் பான் கார்ட் நிச்சயம் அளிக்க வேண்டும் .இந்த சேவிங் அக்கவுன்டக்கு ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கும் .
SAFETY LOCKER :
வங்கிகளில் கணக்கு வைத்தியிருப்பவர்கள் அவர்களின் சொத்து பத்திரம் முக்கியமான ஆவணங்கள் , தங்கம் , வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வங்கியில் பாதுகாப்பாக வைக்கும் முறைதான் செப்டி லாக்கர் .
இவர்களுக்கு தனியான கடவுச்சொல் மற்றும் பின் எண்கள் வழங்கப்படும் . இதற்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கபடும்
இவர்களுக்கு தனியான கடவுச்சொல் மற்றும் பின் எண்கள் வழங்கப்படும் . இதற்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கபடும்
REVERSE MORTGAGE :
இது வழக்கமான வீட்டுகடனுக்கு எதிரானது. இதன் மூலம் ஆதரவு இல்லதா மூத்த குடிமக்கள் தங்கள் வீட்டை அடமானமாக வைத்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை , குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் பெற்றுகொள்ளலாம் அல்லது மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது .
அடமானத்திற்கு ஈடாக வைக்கப்படும் வீட்டில் கணவன்/மனைவி வசிக்கலாம் .இருவரது மறைவுக்கு பிறகு கடனுக்கு வழங்கப்பட்ட தொகை வட்டியுடன் கணக்கிடப்படும். இந்த தொகைக்கான பணத்தை வங்கி வீட்டை விற்று எடுத்துகொள்ளும். மீதி தொகை வாரிகளுக்கு வழங்கபடும்.வாரிசு விரும்பினால் கடன் வட்டி பணத்தை கட்டிவிட்டு வீட்டை மீட்டு கொள்ளலாம் .இந்த தொகைக்கு வருமான வரி கிடையாது.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்
REVENUE DEFICIT
REVENUE
RETURN PROTECTION
REVERSIONARY ANNUITIES
ஒரு நிறுவனத்தின் வருவாய் குறைவதை " ரெவன்யூ டெபிசிட் " என்று அழைப்பார்கள். ஒரு நிறுவனத்திற்கு கிடைத்துள்ள வருவாயும் , செலவுகளும் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் செலவுகளில் இருந்து மாறுபடும் போது " ரெவன்யூ டெபிசிட் " ஏற்படும் .
REVENUE
குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு தன்னுடைய வியாபார ரீதியாக (தள்ளுபடி போக ) கிடைக்கும் தொகை ரெவன்யூ என்று அழைக்கப்படும்.
இது தமிழில் விற்பனை வருவாய் அன்று அழைக்கப்படும்.இதிலிருந்து எல்லா செலவுகளையும் கழித்தால் கிடைப்பதுதான் நிகர வருமானம்.
அரசாங்கத்தை பொறுத்த வரையில் வருவாய் என்பது வரி விதிப்பு , கட்டணங்கள் , அபாரதம் , உரிமம் ,பத்திரங்கள் மூலம் வருவாய் கிடைக்கும்

கிரடிட் கார்ட் உரிமையாளர்கள் கிரடிட் கார்ட் மூலம் வாங்கும் பொருட்கள் திருப்தி இல்லை என்றால் அதை ஒப்படைத்துவிட்டு பணத்தை திரும்ப பெறுவது ரிடர்ன் ப்ரோடேச்ஷன் என்று அழைக்கப்படும்.
பொருளை கிரடிட் கார்ட் கம்பனிக்கு திரும்ப கொடுத்தால்தான் கிடைக்கும். இப்படி பணத்தை திரும்ப பெற பொருள் வாங்கியதற்கான அசல் ரசீது மற்றும் கிரடிட் கார்ட் விபரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அளிக்க வேண்டும் .இது போன்ற சலுகைகளுக்கான அதிகபட்ச தொகை கிரடிட் கார்ட் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

REVERSIONARY ANNUITIES என்பது கிட்டத்தட்ட நிரந்திர ஆயுள் காப்பீட்டு திட்டம் போன்றது . இதில் பாலிசிதாரர் இறந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) முழு தொகை வழங்கப்படுவதற்கு பதிலாக ஆயுள் முழுக்க ஒய்வூதிய பலன் கிடைக்கும்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்
RESIDUAL INTEREST
RETAIL BANKING
RETAIL INVESTOR
RETENTION BONUS
RETIREMENT PLANNER
--நாணயம் விகடன்
கிரடிட் கார்ட் மூலம் கடன் வாங்கும் போது , கடன் பெற்ற தேதியில் இருந்து அதைத் திரும்ப கட்டுவதற்கான தேதி வரையிலான காலத்தில் கட்டப்படும் வட்டியே ரெசிடுயல் இன்ட்ரஸ்ட் என்று அழைப்படும். இதை டிரெய்லிங் இன்ட்ரஸ்ட் என்றும் அழைப்பார்கள். இந்த வட்டியானது ஒவ்வொரு மாதமும் திரும்ப கட்டிய பணம் போக மீதமுள்ள பணத்திற்கு மட்டுமே விதிக்கப்படும்
RETAIL BANKING
வங்கிகள் தனிநபர்களுக்கான சேமிப்பு கணக்கு , வீடு மற்றும் வாகன கடன் , அடமான கடன் , டெபிட் மற்றும் கிரடிட் கார்ட், தனி நபர் கடன் போன்ற வசதிகளை அளிப்பதுதான் " ரீடெய்ல் பேங்கிங் என்று அழைக்கபடுகின்றது.
RETAIL INVESTOR
தங்களது தனிப்பட்ட கணக்கு மூலம் பங்கு பத்திரங்களை வாங்கி , விற்பவர்கள்தான் ரீடெய்ல் இன்வேஸ்டர் என்று அழைப்படுவர்கள்
RETENTION BONUS
ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் ஊழியர்களை ஊக்கபடுத்தவும் , சிறந்த ஊழியர்களை தக்கவைத்துகொள்ளவும் சம்பளத்தை தவிர ஊக்க தொகை வழங்கும். இந்த ஊக்க தொகையே ரிடென்ஷன் போனஸ் என்று அழைக்கப்படும்.
RETIREMENT PLANNER
தனி நபர்கள் தங்கள் ஓய்வூதிய காலத்திற்கான திட்டத்தை தயார் செய்யும் நிபுணர்களே ரிட்டையர்மென்ட் ப்ளானர் என்று அழைக்கபடுகின்றனர் .
--நாணயம் விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: வர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்
SURCHARGE
STRONG SELL
TAXABLE INCOME
TAX FREE
TERM LOAN
சே.புகழரசி
-ந.விகடன்
ஒரு பொருள் அல்லது ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரிக்கு கூடுதலாக வசூலிக்கபடும் கட்டணம் சர் சார்ஜ் என்று அழைக்கபடுகின்றது. பெரும்பாலும் இது ஒரு தற்காலிக கட்டணமாக இருக்கும் .பொருளாதார மந்த நிலையின் போது இந்த கூடுதல் வரி வசூலிக்கபடுவது வழக்கமாக இருக்கிறது.
STRONG SELL
பங்கு வர்த்தகத்தில் ஒரு பங்கு, இன்டெக்ஸ்விடவோ அல்லது அதே துறையை சேர்ந்த மற்ற பங்குளைவிட குறைந்த வருமானம் தரும் என்று அனலிஸ்ட்களால் விற்பதற்கு பரிந்துரை செய்யபடுவதை ஸ்ட்ராங் செல் என்று அழைக்கபடுகின்றது
TAXABLE INCOME
தனிநபர்கள் மற்றும் நிறுவனகளுக்கான வருமான வரியை கணக்கிட எடுத்துகொள்ளும் தொகைதான் டாக்ஸ்பிள் இன்கம். ஒருவர் தன் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட செலவுகள் போக மீதமுள்ள வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
TAX FREE
ஒரு சில பொருட்களுக்கு அல்லது சில நிதி திட்டங்களுக்கான (அரசு பாண்டுகள்) வருமானத்திற்கு அரசு வரி விலக்கு அளிப்பதாகும் .உதாரணத்திற்கு டாக்ஸ் ப்ரீ பாண்டுகளைக் குறிப்பிடலாம். இதில் முதலீட்டின் மீதான வருமானத்திற்கு வரி கிடையாது. பொருளாதார நிலையை மேம்படுத்தவும் , உள்கட்டமைப்புத் திட்டகளுக்கு முதலீட்டை அதிகரிக்கவும் அரசு இம்மாதிரியான வருமானத்திற்கு வரியில்லத் திட்டங்களை அறிமுகபடுத்துகின்றது.
TERM LOAN
வங்கியிலிருந்து வாங்கிய கடனை முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தில் திரும்ப செலுத்துவது டெர்ம் லோன் .பொதுவாக இந்த டெர்ம் லோன் 1 முதல் 10 ஆண்டுகள் வரையில் திரும்ப செலுத்துவதாக இருக்கும். பல வங்கிகள் , சிறு தொழில் செய்பவர்களுக்கு இந்தக் கடனை அளிக்கின்றன. இந்த டெர்ம் லோன் மூலம் தொழிலுக்கு தேவையான மெஷின்கள் வாங்குவது மற்றும் தொழிற்சாலை கட்டுமானம் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
சே.புகழரசி
-ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்கு சந்தையில் உள்ள மர்மங்களை தாண்டி லாபம் ஈட்டுவது எப்படி..
» வெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்...
» எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?
» வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி??
» கேட்டகிரி ஆவரேஜ், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ்...கூடுதல் வருமானத்துக்கான எளிய வழி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum