Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தரமான தங்கத்தை வாங்குங்க..!
Page 1 of 1
தரமான தங்கத்தை வாங்குங்க..!
கவனம்
அட்சயதிருதியை அன்று நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். அந்தக் கூட்டத்தில் நீங்களும் முண்டியடித்துக்கொண்டு நகை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று எடுத்துச் சொல்கிறார் ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதன்.
''இந்த வருடம் அட்சயதிருதியை அன்று நிறையபேர் தங்கம் வாங்க கடைகளுக்கு வருவார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்களும் முண்டியடித்து தங்க நகை வாங்கும்போது சில பிரச்னைகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதில் முக்கியமானது, டிசைன்.
டிசைன்..!
நகைக் கடையில் நிறைய கூட்டம் இருக்கும்போது நீங்கள் கேட்கும் டிசைன்களை நகைக் கடைக்காரர்கள் உங்களுக்கு எடுத்துக் காட்டுவார்களா என்பது சந்தேகமே. எனவே, நமக்கு பார்க்கக் கிடைக்கும் ஒருசில டிசைனில் ஏதோ ஒன்றை வாங்குவோம். டிசைனுக்கு ஏற்ப சேதாரத்தின் அளவும் மாறுபடும். அதிக டிசைன்கள் உள்ள நகைக்கு சேதாரம் அதிகம் தரவேண்டி இருக்கும். வார்ப்பு நகைகளுக்கு (Casting Jewels) மட்டுமே சேதாரம் குறைவாக இருக்கும்.
சேதாரம்..!
அட்சயதிருதியை அன்று செய்கூலி, சேதாரம் பற்றி நிறைய கேள்வி கேட்டு தெளிவு பெறமுடியாது. நல்ல நாளன்று மக்கள் நிச்சயம் தங்கம் வாங்குவார்கள் என்பதால் சில நகைக் கடையினர் சேதாரத்தைக் கூட்டி விற்பனை செய்வார்கள். அதாவது, ஒரு நகையின் சேதாரம் உண்மையில் 8 சதவிகிதம் எனில், இதுபோன்ற சமயங்களில் 18 சதவிகிதமாக இருக்கும். சாதாரண நாட்களில் பேரம் பேசி இந்த சேதாரத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். ஆனால், கூட்டம் அதிகமான நாட்களில் அது முடியாது. அட்சயதிருதியை அன்று கட்டாயம் தங்கம் வாங்க நினைப்பவர்கள் முன்கூட்டியே கடைக்குச் சென்று நகையின் தரம், சேதாரம் ஆகியவற்றை கவனித்து முன்பதிவு செய்துவிடுவது நல்லது. அதிக சேதாரம் தரும் அளவுக்கு அந்த நகை அதிக வேலைபாடுகளுடன் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.
ஹால்மார்க்..!
பி.ஐ.எஸ். (Bureau Of Indian Standard) ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகையில் அதன் தரத்தின் அளவு சரியாக குறிப்பிடப் பட்டிருக்கும். ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அளிக்கிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். 22 கேரட், 20 கேரட், 18 கேரட் என பலவாறாக தங்கத்துக்கு பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை அளிக்கப்படும். அதாவது, இந்த முத்திரைகொண்ட நகை எத்தனை கேரட் என்பதைக் குறிப்பிட்டு அளிக்கப் படுபவை. அந்தவகையில், ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகள் எல்லாம் 22 கேரட் என்று ஏமாந்து அதிக விலை தந்துவிட வேண்டாம். தரம் குறைந்த நகைகளுக்கும் பி.ஐ.எஸ். முத்திரை இடப்பட்டிருக்கும். ஹால்மார்க் நகைகளின் விலை சற்று அதிகமாக இருக்கும். காரணம், ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஆகும் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்தே கடைக்காரர்கள் வசூல் செய்கிறார்கள்.
விலை..!
ஒரு நகையின் விலை என்பது தங்கத்தின் எடைக்கு அன்றைய சந்தை விலை, செய்கூலி, சேதாரம், இறக்குமதி வரி 6%, வாட் வரி 1%, ஹால்மார்க் முத்திரைக் கட்டணம் என அனைத்தும் சேர்ந்ததே. ஆனால், பெரும்பாலான நகைக் கடைகளில் சில நகைகளில் மட்டும்தான் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர்களிடம் இருக்கும் அனைத்து நகைகளும் ஹால்மார்க் நகைகள் என்று சொல்லி விற்பார்கள். தவிர, சில கடைகள் முறையான பில் தருவதில்லை. ஏனெனில், தரம் குறைந்த நகைகளை கலந்து விற்கும்போது பில் தருவதை நகைக் கடைகள் தவிர்த்துவிடுகின்றன.
கே.டி.எம். நகைகள்..!
சில நகைக் கடைகளில் கே.டி.எம். ஹால்மார்க் நகைகள் என்று கூறி நகைகள் விற்பனை செய்யப் படுகின்றன. கே.டி.எம். என்பது தரம் கிடையாது. அது தங்க நகையை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை உலோகம்.
வழக்கமாக தங்க நகைகளை இணைப்பதற்கு தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்றும் கலந்த பொடியைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பொடியைப் பயன்படுத்தி நகையை இணைக்கும்போது வெல்டிங் செய்யப்பட்டதுபோல் கறுப்பாக இருக்கும். இவற்றின் எடையும் சேர்த்துதான் தங்கத்தின் எடையாக இருக்கும். தவிர, மீண்டும் நகையை உருக்கும்போது, இவை தங்கத்துடன் சேர்வதால் தங்கத்தின் துல்லியம் குறையும். 22 கேரட் என்பது சுமார் 20 கேரட் ஆக குறைந்துவிடும். இதற்கு மாற்றாகத்தான் கேட்மியம் உலோகம் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி தங்க ஆபரணங்களை இணைக்கும்போது கேட்மியம் உலோகம் ஆவியாகிவிடும். இதனால் தங்கத்தின் தரம் குறையாது. எனவே, இந்த ஆபரணங்களுக்கு சேதாரமும் குறைவு. நகைகளை இணைக்க கேட்மியம் பயன்படுத்துவதை சில மருத்துவக் காரணங்களால் மத்திய அரசு தடை செய்திருப்பதால் கேட்மியம் மூலம் பற்றவைக்கப்படும் நகைகளுக்கு பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை தருவதில்லை என்பதை மறக்கவேண்டாம்.
ஒரு கிராம் வேண்டாமே!
''தங்கம் விலை குறைந்திருப்பதால் கடன் வாங்கியாவது நகை வாங்கவேண்டும் என பலரும் துடிக்கிறார்கள். இன்னும் சிலர், அட்சயதிருதியை அன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட நினைக்கிறார்கள். இப்படி ஒரு கிராம், இரண்டு கிராம் தங்கம் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு கிராமுக்கும் குறைவான நகைகளில் ஹால்மார்க் முத்திரை என்பது பெரும்பாலும் இருக்காது. அதனுடைய தரமும் 80 சதவிகிதத்திலிருந்து 85 சதவிகிதம் வரைதான் இருக்கும். தரம் குறைந்த நகைக்கு அதிகப் பணம் கொடுத்து வாங்குவதால் நஷ்டம்தான் வரும். எனவே, முடிந்தவரை ஒரு கிராமிற்கு குறைவான எடையில் தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது'' என்று முடித்தார் சுவாமிநாதன்.
அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றாலும், இதை எல்லாம் மனதில்கொண்டு நடந்தால் நிச்சயம் லாபம்தான்!

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum