வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


என்.ஆர்.ஐ. : இடம் வாங்குமுன் இதை கவனிங்க!

Go down

என்.ஆர்.ஐ. : இடம் வாங்குமுன் இதை கவனிங்க! Empty என்.ஆர்.ஐ. : இடம் வாங்குமுன் இதை கவனிங்க!

Post by தருண் Tue Jan 07, 2014 3:35 pm

நம் நாட்டில் ரியல் எஸ்டேட் இப்போது ஜோராக நடக்க, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வரிசையாக வீடுகளையும், மனைகளையும் வாங்கி விற்கிறார்கள். இப்படி இடம் வாங்கி விற்கும்போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறது ரிசர்வ் வங்கி. இந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில், சொத்து வாங்கியவர் சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும். எனவே, இது தொடர்பாக உள்ள விதிமுறை பற்றி சொல்கிறேன்.

என்.ஆர்.ஐ. என்பது யார்?

முதலில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றால் யார் என்று பார்த்துவிடலாம். எளிமையாகச் சொல்வதென்றால், இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியக் குடிமக்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர். இந்திய வம்சாவழியினர் (PIO) என்பவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் குடிமகனாக இல்லாத, எப்போதாவது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அல்லது அவருடைய தந்தை அல்லது பாட்டனார் ஒருவரை இந்தியக் குடிமகனாக கொண்டவர். என்.ஆர்.ஐ. மற்றும் பி.ஐ.ஓ. இருவருக்கும் சொத்து வாங்குவதில் பொதுவான விதிமுறைகள் உள்ளன.

எந்தெந்த சொத்துக்களை வாங்க முடியும்?

நடைமுறையிலுள்ள அந்நியச் செலாவணி விதிமுறைகளின் கீழ் என்.ஆர்.ஐ/பி.ஐ.ஓ. நம் நாட்டில் விவசாய நிலம்/தோட்டச் சொத்து/ பண்ணை வீடு ஆகியவற்றை விலைக்கு வாங்க முடியாது. பரம்பரை சொத்தாகவோ, பாகப் பிரிவினை மூலமோ மேற்படி சொத்துக்களை பெறலாம். வீடு அல்லது வணிகச் சொத்துகளை வாங்க எந்தத் தடையுமில்லை. வீடு அல்லது வணிகச் சொத்தினை வாங்கியதற்கான எந்த ஆவணத்தையும் ரிசர்வ் வங்கியிடம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தவிர, எத்தனை வீட்டை அல்லது வணிகச் சொத்தை வாங்கலாம் என்கிற வரையறையும் இல்லை. சொத்தை வாங்குவதற்கு அவரது வங்கிக் கணக்கு வழியோ அல்லது NRE/FCNR/NRO கணக்கு வழியாகவோ பணம் செலுத்தலாம். இந்தியாவிற்கு வெளியில் பணம் செலுத்த முடியாது.

சொத்தை யாருக்கு விற்க முடியும்?

பொது அனுமதியில் உள்ளபடி, ஒரு என்.ஆர்.ஐ. இந்தியாவிலுள்ள தன்னுடைய சொத்தினை ஒரு இந்தியருக்கோ அல்லது பி.ஐ.ஓ.வுக்கோ விற்க முடியும். ஆனால், ஒரு பி.ஐ.ஓ. சொத்தை விற்பதற்கு ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெற வேண்டும். என்.ஆர்.ஐ./பி.ஐ.ஓ. தன் சொத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தினை அவர் வாழும் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், ஒரே சமயத்தில் இரண்டு சொத்துக்கு மேல் விற்றுப் பணம் எடுத்துச் செல்ல முடியாது. இப்படி எடுத்துச் செல்லும் பணம், அந்தச் சொத்தினைப் பெறுவதற்குச் செலுத்தப்பட்ட பணத்தினைவிட அதிகமாக இருக்கக்கூடாது.

வாடகைக்கு விட முடியுமா?

என்.ஆர்.ஐ./ பி.ஐ.ஓ. தன்னுடைய சொத்தை வாடகைக்கு விடலாம். பெறப்படும் வாடகை நிகழ்கால வருமானம் என்பதால் அதனை என்.ஆர்.ஐ./பி.ஐ.ஓ. கணக்குகளில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பலாம். அங்கீகரிக்கப் பட்ட ஒரு முகவரிடம் அல்லது வீட்டுவசதி நிறுவனத்திடம் அடகும் வைக்கலாம். ஆனால், அந்த வணிகச் சொத்தினை வெளிநாட்டிலுள்ள ஒருவருக்கு அடகு வைக்க முடியாது. அதற்கு ரிசர்வ் வங்கியிடம் முன் ஒப்புதல் பெறவேண்டும்.

சொத்தின் மீது கடன் வாங்க முடியுமா?

என்.ஆர்.ஐ./பி.ஐ.ஓ. வீடு வாங்குவதற்காக அல்லது பழுது பார்க்க/மேம்படுத்த/புதுப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் அல்லது தேசிய வீட்டு வசதி வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவி நிறுவனத்திடம் வீட்டு வசதிக் கடனை சில விதிமுறை களுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இந்திய ரூபாயில் பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய கடன்களை, அந்தச் சொத்தினை வாடகைக்கு விட்டுப் பெறும் வாடகை மூலம் திருப்பிச் செலுத்தலாம்.

விதிமுறைகளை சொல்லிவிட்டேன். இனி அதன்படி நடந்து சிக்கலைத் தவிருங்கள்

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum