Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
என்னென்ன ரிஸ்க்... எப்படி தவிர்க்கலாம்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
Page 1 of 1

இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமான முதலீட்டு வழிமுறையாக மாறிவிட்டது மியூச்சுவல் ஃபண்ட். நகர்ப்புறங்களில் இருக்கும் பலரும் மாதத்திற்கு இவ்வளவு என பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்து வருகின்றனர். சிலர், இருபது முதல் இருபத்தைந்து ஃபண்டுகளில் பல லட்ச ரூபாயைப் போட்டு வைத்திருக்கின்றனர்.
நீண்ட கால நோக்கில் வங்கி டெபாசிட்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிக வருமானத்தைத் தரும் என்றாலும், அதிலிருக்கும் ரிஸ்க்கை உணராமல் கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் என்னென்ன ரிஸ்க் இருக்கிறது, அதனை எப்படியெல்லாம் தடுக்கலாம் என சொல்கிறார் வேல்யூ இன்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷ்.
''எந்த ஒரு முதலீட்டிலுமே ரிஸ்க் என்பது இருக்கத்தான் செய்கிறது. முதலீடு செய்த மூலதனத்தை இழப்பது முதல், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போவதுவரை பல வகையான ரிஸ்க்குகள் இருக்கவே செய்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்குச் சந்தை, பாண்ட் என பலவிதமான முதலீடுகளை கொண்டது. ஃபண்டின் அம்சங்களைப் பொறுத்து ரிஸ்க்கின் அளவும் தன்மையும் மாறும். இதில் முதலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் உள்ள ரிஸ்க்கைப் பற்றி பார்ப்போம்.
சிஸ்டமிக் ரிஸ்க் (மார்க்கெட் ரிஸ்க்)!
இதனை மார்க்கெட் ரிஸ்க் என்றும் சொல்வார்கள். பங்குச் சந்தை என்பது அனைத்து சூழ்நிலைகளையும் உடனுக்குடன் பிரதிபலிக்கக் கூடியவை. உலக நடப்புகள், பொருளாதார முக்கிய முடிவுகள், வட்டி விகிதங்கள், நிறுவனங்களின் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் அரசியல் பிரச்னைகள் என எது நடந்தாலும் அது சந்தையை உடனே பாதிக்கும். இந்த ரிஸ்க்கை சிஸ்டமிக் ரிஸ்க் என்போம்.
நான் சிஸ்டமிக் ரிஸ்க்!
பொதுவான சூழ்நிலைகள் அல்லாமல் குறிப்பிட்ட துறை, தொழில் மற்றும் பங்கை பொறுத்து இருக்கும் ரிஸ்க்கை, நான் சிஸ்டமிக் ரிஸ்க் என சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களில் அதிக ரிஸ்க் இருக்கும். இதுவே டைவர்சிஃபைட் எனும் பல துறைகளில் பிரித்து முதலீடு செய்யும் திட்டங்களில் ரிஸ்க் குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறைக்கு அரசு அளித்துவந்த வரிச் சலுகையை நிறுத்தினால், அதனால் அந்த துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறையும். இதனால் இந்த துறையில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் மதிப்பும் குறையும். ஒரு நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் கையகப்படுத்தும்போது அதன் விளைவாக அந்த நிறுவனத்திற்கு அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம். அதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் என்.ஏ.வி. குறையும்.
லிக்விடிட்டி ரிஸ்க்!
லிக்விடிட்டி ரிஸ்க் என்பது பங்குகள் எக்ஸ்சேஞ்சில் எவ்வளவு வேகமாக வர்த்தகமாகிறது என்பதைக் குறிப்பது. லார்ஜ்கேப் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அதிக வால்யூமில் வர்த்தமாகும். இதனால் இது குறைந்தளவே லிக்விடிட்டி ரிஸ்க் கொண்டது. இதுவே ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் குறைவான அளவே வர்த்தகமாகும். இதனால் அதிக லிக்விடிட்டி ரிஸ்க் இதில் இருக்கிறது.
கான்சன்ட்ரேஷன் ரிஸ்க்!
ஒரு ஃபண்டில் திரட்டப்படும் நிதியை பல துறை சார்ந்த பதினைந்து முதல் இருபது பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அந்த திட்டம் அதிகளவில் ரிஸ்க்கில் மாட்டிக்கொள்ளாது. இதுவே குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் அல்லது நிறுவனங்கள் என சிலவற்றுள் மட்டும் முதலீடு செய்து, ஏதாவது காரணத்தினால் அந்தத் துறை சரியாகச் செயல்படாதபோது அதன் என்.ஏ.வி. பாதிப்படையும். இதனைத்தான் கான்சன்ட்ரேஷன் ரிஸ்க் என்கிறோம். உதாரணமாக, இன்ஃப்ரா மற்றும் விவசாயம் சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யப்படும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்த துறையில் அரசாங்க கொள்கை மாற்றம் ஏற்பட்டால் அதன் என்.ஏ.வி.-யும் தடாலடியாக குறையும்.
பொருளாதார ரிஸ்க்!
நாட்டின் மொத்த பொருளாதாரத்தைச் சார்ந்து இருக்கும் ரிஸ்க் இது. ஒரு நாடு தனது செலவுகளுக்காக உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறது எனில் அதனால் அந்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். நாடு கடனில் இருக்கும்போது அதிகளவில் பணப்புழக்கம் இருக்காது. இதனால் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி குறையும். இது நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கும். எந்த நாடும் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தால் அதனால் முதலீடு, மக்கள் செலவு செய்வது மற்றும் வேலைவாய்ப்பு குறைவது போன்ற பாதிப்புகள் உருவாகும். இந்த ரிஸ்க் அனைத்து வகையான பங்குகளையும் பாதிக்கும்.
இதுவரை நாம் பார்த்தது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் ரிஸ்க் வகைகள். இதுவே கடன் ஃபண்டுகளில் மற்றும் நிலையான வருமானம் தரும் ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க் வேறுவிதமாக இருக்கிறது. அதையும் பார்க்கலாம்.
பங்கு சார்ந்த ஃபண்டுகளில் இருக்கிற அளவுக்கு கடன் ஃபண்டுகளில் ரிஸ்க் இருக்காது. இருந்தாலும் இவற்றில் ரிஸ்க் இல்லவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அதில் இருக்கும் சில வகையான ரிஸ்க்குகளைப் பார்ப்போம்.
வட்டி விகித ரிஸ்க்!
வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது நிலையான வருமானம் தரும் பாண்டுகளின் விலை குறையும். வட்டி விகிதங்கள் குறைந்தால் பாண்டுகளின் விலை அதிகரிக்கும். வங்கிகள் அதிக வட்டி கொடுக்கும்போது பாண்டுகளில் முதலீடு செய்வது குறையும். கடன் மற்றும் நிதிச் சந்தை பாண்டுகளின் என்.ஏ.வி. வங்கிகளின் வட்டி விகிதங்களைப் பொறுத்து மாறுபடும்.
கிரெடிட் ரிஸ்க்!
ஒரு நிறுவனம் தான் வாங்கியிருக்கும் கடனை சரியான நேரத்தில் வட்டியுடன் திரும்பச் செலுத்துவதைக் குறிப்பிடுவது. எந்த நிறுவனமாக இருந்தாலும் சரியான நேரத்தில் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போனால் அந்த நிறுவனத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை போய்விடும். இது அந்த நிறுவனத்தின் பாண்டில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் என்.ஏ.வி.-யையும் பாதிக்கும். இதனால் உங்கள் முதலீட்டின் மதிப்பும் குறையும். இதிலும் எந்தவிதமான பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே ரிஸ்க்கின் அளவு மாறும். அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் பாண்டுகளில் முதலீடு செய்வதைவிட அரசு பாண்டுகளில் முதலீடு செய்யும்போது பாதுகாப்பானதாக இருக்கும். அதிலும் கார்ப்பரேட் நிறுவனப் பாண்டுகள் கிகிகி ரேட்டிங் பெற்றிருந்தால் குறைந்தளவிலான ரிஸ்க் இருக்கும். இதுவே கிகி ரேட்டிங் கொண்ட நிறுவனப் பாண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதையெல்லாம்விட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பது ஃபண்ட் மேனேஜரின் திறமை, செயல்பாடு, ஆராய்ச்சி குழு, நிறுவனத்தின் அளவு, யூனிட்களை விற்பதில் (ரிடெம்ஷன்) இருக்கும் சிக்கல் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியவை. சில திட்டங்களில் அதிகளவில் யூனிட்கள் விற்கப்படும்போது அசெட் லையபிலிட்டி ரேஷியோ சரியாக இருக்காது. ஃபண்ட் மேனேஜர் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைக்கும்போதும், தவறாகச் செயல்படும்போதும் என்.ஏ.வி. பாதிக்கிறது. அதனால் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் மேற்கண்ட அனைத்து ரிஸ்க் அம்சங்களையும் கவனித்து உங்களது போர்ட்ஃபோலியோவை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு முதலீட்டாளர் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு என்ன காரணத்திற்காக முதலீடு செய்கிறார், எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என அனைத்து விஷயங்களையும் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். உங்களது போர்ட்ஃபோலியோ உடனடியான வளர்ச்சியைத் தராது என்றாலும் நீண்ட காலத்தில் நல்ல பலனை கொடுக்கும்.
குறைந்த முதலீடு அதிக வருமானம் என்பதுதான் முதலீட்டு விஷயத்தில் அனைவரும் பார்ப்பது. குறைந்த வருமானம் கொடுத்தால் அது குறைந்த அளவிலான ரிஸ்க்கில் இருக்கிறது என அர்த்தம். ஆனால், அதிக வருமானம் கொடுக்கும் திட்டங்கள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பது தவறான கருத்து. அதிக ரிஸ்க் அதிக வருமானத்தையும் கொடுக்கலாம்; குறைந்த வருமானத்தையும் கொடுக்கலாம். ஆனால், நமது இலக்கு என்ன? நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே முதலீடு செய்கிறோம். அதனால் ரிஸ்கை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், அதை கையாளும் திறனும் வேண்டும்.
அசெட் அலகேஷன்!
ஈக்விட்டி ஃபண்டுகள், நிலையான வருமானம் தரும் பத்திரம், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், பாண்டுகள், பங்குகள் என பலவகையான திட்டங்களில் எது உங்களுக்கு உகந்தது, எவ்வளவு முதலீடு செய்ய முடியும், எதற்காக முதலீடு செய்கிறோம் என ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றில் அதிக முதலீடு செய்வது அதிக ரிஸ்க்கை உண்டாக்கும். மார்க்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதால் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் குறைந்த வருமானத்தைக் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
நோக்கங்களுக்கு ஏற்ப முதலீடு!
முதலீடு என்பது பலவிதமான திட்டங்களில் முதலீடு செய்வது. ஏதாவது ஒரு திட்டத்தில் மட்டும் முதலீடு செய்யும்போது அது அதிகளவிலான வருமானத்தைத் தராது. பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யும்போதுதான் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். ஒரே நிறுவனத்தின் ஃபண்டில் போடுவதும் சரியான முறையல்ல. பல நிறுவனங்களின் ஃபண்டுகளில் பணத்தைப் பிரித்து போட வேண்டும்.
நமது தேவையைப் பொறுத்தே நமது முதலீடும் இருக்க வேண்டும். அதாவது, தேவையை நிறைவேற்றுவதற்கு உங்கள் முதலீடா அல்லது வருமானத்தை அதிகரிப்பதற்கு உங்கள் முதலீடா என பார்க்க வேண்டும். பங்குச் சந்தை என்பது நீண்ட கால முதலீட்டுக்கானது. குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு குறைவாக அந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படக் கூடாது. நிலையான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது, குறைந்தகால முதலீட்டிற்கு. ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தேவைப்படும் பணத்தை இதில் முதலீடு செய்யலாம். இதுபோல் உங்கள் தேவை என்ன என தெரிந்துகொண்டு அதற்கு தகுந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
இலக்கு நிர்ணயிப்பது!
முதலீட்டாளர்கள் இலக்கு நிர்ணயித்துக் கொண்டு அதற்கு தகுந்த முறையில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். மகளின் திருமணத்திற்கு பணம் வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கு தகுந்த திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்யவேண்டும்.
ரியல் வருமானம்!
உங்களின் தேவைக்கு தகுந்த இலக்கை நிர்ணயித்து கொண்டு முதலீடு செய்து வரும் போது அதற்கு தகுந்த வருமானம் கிடைக்கிறதா எனவும் பார்க்க வேண்டும். அதாவது, உங்கள் மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போதிலிருந்து பணம் போட்டு வருகிறீர்கள். பத்து வருடங்கள் கழித்து டாக்டர் ஆவதற்கு ஆகும் செலவு இருபது லட்சம் ஆகுமெனில், நீங்கள் முதலீடு செய்யும் திட்டம் இந்த தொகையைக் கொடுக்குமா என பார்க்க வேண்டும். அதாவது, பணவீக்கத்தைக் கணக்கிட்டு முதலீடு செய்யுங்கள். அதிக ரிஸ்க் உள்ள திட்டங்கள் பணவீக்கத்தைச் சரிகட்டும் விதத்தில் வருமானம் கொடுக்கும். இதை எப்படி கணக்கிடுவது எனில் உங்கள் முதலீடு எட்டு சதவிகித வருமானம் கொடுக்கிறது என வைத்துக் கொள்வோம், பணவீக்கம் பத்து சதவிகிதம் எனில் எட்டில் பத்தை கழித்தால் -2 சதவிகிதம்தான் உங்கள் வருமானம். அதாவது, உங்கள் வருமானம் மைனஸில் இருக்கிறது என அர்த்தம். இந்த வருமான கணக்கைப் புரிந்துகொண்டு தேவைகளையும் அதற்கான முதலீட்டையும் சரியான கலவையாக உருவாக்கினால் ரிஸ்க்கிலிருந்து தப்பிக்கலாம்.
வரி அறிவிப்புகள்!
வருமான வரி தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் கவனித்துக்கொள்ளுங்கள். மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் தொடர்பான வரி அறிவிப்புகள் உங்களது வருமானத்தைத் தின்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வரிக்கு பிந்தைய வருமானத்தை சரியாக கணக்கிட்டு அதற்கு தகுந்த திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை!
அடிக்கடி உங்களது போர்ட்ஃபோலியோவை கவனித்து வாருங்கள். சரியான விதத்தில்தான் உங்கள் முதலீடு செயல்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்களது முதலீடு சரியான விதத்தில் செல்லவில்லை எனில் சரியான நேரத்தில் ஃபண்டுகளை விற்று வேறு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.''
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க்கை புரிந்துகொண்டு, அதை சரியானபடிக்கு தடுக்கும் வழிமுறைகளை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், உங்கள் போர்ட்ஃபோலியோ நீண்ட காலத்தில் அள்ளிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-பானுமதி அருணாசலம்.
ந.விகடன்

ரிஸ்க்கை எப்படி தவிர்க்கலாம்?
ரிஸ்க்கும் வருமானமும்!

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் எப்படி குறைப்பது
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... தயாராவது எப்படி? இரா.ரூபாவதி.
» கடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்!
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum