Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சிறந்த புரோக்கரை கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 1
சிறந்த புரோக்கரை கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு செக் லிஸ்ட்!
ஒரு நல்ல பங்குச் சந்தை புரோக்கர், நம் வாழ்க்கைத் துணை போல. ஒருமுறை அவரை சரியாகத் தேர்வு செய்துவிட்டால், பிற்பாடு பிரிய வேண்டிய அவசியமே இருக்காது. தவறான புரோக்கரை தெரியாத்தனமாகத் தேர்வு செய்துவிட்டால், பின்பு நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியிருக்கும்.
ஆனால், நல்ல புரோக்கர்கள் யாரும் 'நான்தான் நல்ல புரோக்கர்’ என போர்டு போட்டு நிற்பதில்லை. அப்படி நிற்பவர்கள் பெரும்பாலும் நல்ல புரோக்கர்களாகவும் இருப்பதில்லை. உண்மை அப்படி இருக்கும்போது, நல்ல புரோக்கரை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கான வழிமுறை என்ன? என விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.
பதிவு பெற்ற புரோக்கர்!
''செபியின் அங்கீகாரம் பெற்ற, பங்குச் சந்தையில் பதிவு செய்துகொண்ட புரோக்கரையே நாம் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான சான்றிதழ் அந்த புரோக்கர் அலுவலகத்திலேயே இருக்கும். அல்லது குறிப்பிட்ட பங்குச் சந்தையின் இணைய தளத்தில் தரப்பட்டிருக்கும். சப்-புரோக்கர் அல்லது பிரான்சைஸி எனில் குறிப்பிட்ட மெயின் புரோக்கருக்கு சொந்தமான இணையதளத்தில் தந்திருப்பார்கள்.
பணப் பரிவர்த்தனையில் தாமதம், வாடிக்கையாளர் சேவையில் குறைபாடு போன்ற காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்ட புரோக்கர்கள் குறித்தும் பங்குச் சந்தையின் இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். உறுப்பினராக சேரும்முன் இந்த விஷயத்தைப் பார்ப்பது கட்டாயம்.
அனுபவம்!
ஒரு புரோக்கர் பங்குச் சந்தை முகவராக எத்தனை வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் வழங்கும் ஆலோசனைகள் முதலீட்டாளர் களுக்குச் சரியான வகையில் பயன்படும்.
குறைந்தபட்சம் இத்துறையில் ஐந்து வருட அனுபவம் பெற்றவ ராக இருக்க வேண்டும். மிகப் பெரிய சரிவையோ அல்லது மிகப் பெரிய ஏற்றத்தையோ கண்ட புரோக்கராக இருந்தால் தான் எந்த சமயத்தில் எப்படி செயலாற்ற வேண்டும் என்கிற தெளிவு இருக்கும். அந்த தெளிவின் அடிப்படையில் நம்மை சரியாக வழி நடத்தவும் அவரால் முடியும் என்பது முக்கியமான விஷயம்.
பணப் பரிவர்த்தனை!
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி, பணம் சார்ந்த விஷயங்களில் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை எந்த குளறுபடிகளும் இல்லாமல் முறையாக உங்களது கணக்கிற்குக் கொண்டுவர வேண்டும்.
பங்கை விற்றதும் எவ்வளவு நேரத்தில் உங்கள் கணக்கிற்குப் பணம் வரவேண்டுமோ, அதற்குள் கொண்டு வந்து விடுவார் நல்ல புரோக்கர். அதேபோல, நீங்கள் கொடுக்க வேண்டிய தொகைகளை தாமதம் செய்யாமல் உங்களிடமிருந்து வாங்கிவிடுவார். பணப் பரிவர்த்தனையில் கச்சிதமாக நடந்து கொள்கிறவர் மற்ற விஷயங்களில் பெரிதாக தவறு செய்யமாட்டார் என்று நம்பலாம். ஆனால், எந்த பண நடவடிக்கையாக இருந்தாலும் காசோலை மூலமாக மேற் கொள்வதே நல்லது.
ஸ்டேட்மென்ட்!
மாதாமாதம் உங்களது பரிவர்த்தனைக்கான ஸ்டேட்மென்ட் மற்றும் காலாண்டு அறிக்கை போன்றவற்றை தவறாமல் அனுப்புபவராக இருக்க வேண்டும். இந்த ஸ்டேட்மென்ட் களில் உங்கள் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் இருக்கும்.
தனிப்பட்ட அக்கறை!
ஒவ்வொரு முதலீட்டாளரைப் பற்றியும் தனிப்பட்ட அக்கறைச் செலுத்தும் புரோக்கராக இருக்க வேண்டும். முதலீட்டாளரின் நோக்கம் என்ன, எப்படிப்பட்டவர், வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், தினசரி வர்த்தகம் செய்பவரா, நீண்ட கால முதலீட்டாளரா என்பது போன்ற தனிப்பட்ட விவரங்களை தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்போது தான் அவரவருக்கு என்று தனிப்பட்ட முறையில் வழி காட்ட முடியும். தினசரி மார்க்கெட் ரிப்போர்ட்படி தேவையான வழிகாட்டுதல் களைக் கொடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக ஒரே ஆலோசனைகளை எல்லோருக் கும் வழங்கக் கூடாது.
சுதந்திரமான செயல்பாடு!
தாங்கள் வழங்கும் ஆலோசனைகள், வழிகாட்டுதல் களை முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தும் முகவராக இருக்கக் கூடாது. எல்லா முடிவு களும் முதலீட்டாளர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தங்களிடம்தான் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும், தங்கள் நிறுவனம் மூலம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதிப்பவராக இருக்கக் கூடாது.
பவர் ஆஃப் அட்டார்னி!
முதலீட்டாளர்கள் சார்பாக பங்குகளை வாங்கி விற்கும் தேவைக்காக மட்டுமே பவர் ஆஃப் அட்டார்னி கொடுக்கப் படுகிறது. இந்த உரிமையை தவறாக பயன்படுத்துபவராக புரோக்கர் இருக்கக் கூடாது. பவர் ஆஃப் அட்டார்னியை பயன்படுத்தி முதலீட்டாளரின் கணக்கிலிருந்து புரோக்கரின் கணக்கிற்கு எந்த பரிவர்த்தனை களும் செய்யக் கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தில் 'பாஸ்வேர்டு’களுக்கும் இது பொருந்தும்.
வழிகாட்டுதல்!
ஆலோசனைகளை மட்டும் வழங்குபவர் சிறந்த புரோக்கராக இருக்க முடியாது. அந்தந்த சமயத்திலும் சரியான வழிகாட்டுதல் (நிuவீபீணீஸீநீமீ) கொடுக்க வேண்டும். எந்த பங்கை எப்போது வாங்க வேண்டும், வாங்கக் கூடாது, எவர் வாங்கலாம், எவர் வாங்கக் கூடாது என்பதைச் சரியாக முதலீட்டாளர்களுக்குச் சொல்ல வேண்டும். சிறிய முதலீட்டாளர், பெரிய முதலீட்டாளர் என்கிற பாகுபாடு இல்லாமல் வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும்.
கட்டணங்கள்!
ஒப்பந்தப்படி புரோக்கரேஜ் கட்டணம் வாங்க வேண்டும். குறைவான கமிஷன் அல்லது அதிகமான கமிஷன் என்றில் லாமல், எவ்வளவு கமிஷன் பெறுகிறார், என்ன சேவை தருவார் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.
நீண்ட கால முதலீட்டிற்கு வாங்குகிற அதே கட்டணத்தை தினசரி வர்த்தகத்திற்கு வாங்கக் கூடாது. ஆன்லைன் சேவை, டேட்டா அப்டேட் சேவைகளை தருகிறோம் என்பதற்காக எந்த பணத்தையும் தர வேண்டாம்.
உள்ளூர் புரோக்கர்!
உள்ளூரில் நாம் அறிந்த புரோக்கராக இருக்க வேண்டும். எளிதாக, எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். பெரிய நிறுவனம், நெட்வொர்க் உள்ளது, அதிக விளம்பரம் என்பதை நம்பி புரோக்கர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. நமது தேவைகளை அறிவது அல்லது சேவைக் குறைபாடுகளை உடனடியாக சரி செய்வது போன்றவற்றில் உள்ளூர் புரோக்கர் என்றால் வேலை உடனடியாக முடிந்துவிடும்.''
இந்த செக் லிஸ்ட்டை வைத்துக் கொண்டு நல்ல புரோக்கர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாமே! சிக்கல் இல்லாத முதலீட்டு வாழ்த்துக்கள்!
ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சிறந்த உழைப்பைப் பெறுவது எப்படி?
» எது சிறந்த முதலீடு?
» தங்கம் ஒரு சிறந்த முதலீடா?
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» வருமான வரி விலக்கு பத்திரம் - சிறந்த முதலீடா?
» எது சிறந்த முதலீடு?
» தங்கம் ஒரு சிறந்த முதலீடா?
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» வருமான வரி விலக்கு பத்திரம் - சிறந்த முதலீடா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum