வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!

Go down

 நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்! Empty நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!

Post by தருண் Thu Mar 09, 2017 11:53 am

 நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்! 23p1

இது பட்ஜெட் வாரம். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டார். கடந்த ஆண்டில் நீங்கள் வரித் திட்டமிடல் செய்யாமல் இருந்திருக்கலாம். இனியும் நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. காரணம், வரித் திட்டமிடல் என்பது நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. வரித் திட்டமிடல் என்பது, நம் வாழ்க்கையின் பல்வேறு தேவைகளை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் முதலீட்டுக் கலவையை (போர்ட்ஃபோலியோ) உருவாக்கிக் கொள்ள உதவுவதுடன், வரிச் சேமிப்புக்கும் உதவுகிறது.

மத்திய அரசும் பல்வேறு வருமான வரிச் சட்டப் பிரிவின் மூலம், பல வரி விலக்குகளை வழங்கி, வருமானம் ஈட்டுபவர் களுக்கு உதவி வருகிறது. இதன் மூலம் வருமான வரி செலுத்துவதைக் குறைத்து உங்களுடைய முதலீட்டை அதிகப்படுத்தலாம். வரிச் சேமிப்புக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றின் விதிமுறைகளைத் தெரிந்துகொண்டால் நல்லது.

பிரிவு 80சி

வருமான வரிச் சட்டத்தில் 80சி பிரிவு, வருமான வரிச் சேமிப்புக்கு பல முதலீட்டு வகைகளைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் விரிந்த பல தரப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, அதிக வரி விலக்கினைப் பெறலாம்.
இ.பி.எஃப் (பணியாளர் வைப்பு நிதி), பி.பி.எஃப் (பொது வருங்கால வைப்பு நிதி), பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் (ELSS), ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியம், சுகன்யா சம்ருதி கணக்கு, என்எஸ்சி (NSC), வருமான வரி சேமிப்புக்கான ஐந்து வருட டெபாசிட்டுகள், வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் போன்றவற்றில் வரிச் சலுகைகளைப் பெறலாம். இந்தத் திட்டங்களில் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்குப் பெறலாம்.

80சி-யின் துணைப் பிரிவுகளில் கீழ், அனுமதிக்கப் பட்ட அளவுக்குள் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்ய முடியுமோ, அந்த அளவுக்குச் செய்து வரி விலக்குப் பெறலாம்.

பிரிவு 80 சிசிடி

இந்தப் பிரிவில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, தனிநபர் ரூ.1.5 லட்சம் வரை பங்களிப்பு செய்யலாம். இரண்டாவது, நிறுவனம் அதன் பணியாளர் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு மிகாமல் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தலாம். இந்த இரண்டு முதலீட்டுக்கும் வரி விலக்கு உண்டு. இது தவிர, 80சிசிடி (1பி) பிரிவில் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் அல்லது தேசிய பென்ஷன் திட்டத்தில் (என்பிஎஸ்) ரூ.50,000 முதலீடு செய்து வருமான வரி விலக்கு பெறலாம்.

 நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்! 23p2

பிரிவு 80 சிசிசி

இந்தப் பிரிவின் கீழ் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் திட்டத்துக்கு செலுத்தும் பிரிமீயத்தில், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.

பிரிவு 80 சிசிஜி

இந்தப் பிரிவின் கீழ், ராஜீவ்காந்தி பங்குச் சார்ந்த திட்டத்தின் கீழ் பங்குகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.25,000 வரை வருமான வரி விலக்குப் பெறலாம்.

பிரிவு 80 டி

பிரிவு 80 டி - ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம். இந்த பிரீமியம் தொகைக்கான வரி விலக்கு, வயதைப் பொறுத்து இருக்கிறது. தனிநபர் மற்றும் குடும்பத்துக்கு ரூ.25,000 வரையிலும், பெற்றோர்களையும் உள்ளடக்கிய வகையில் இருந்தால் (பெற்றோர் + மூன்று நபர்கள் கொண்ட குடும்பம்) ரூ.50,000 வரையிலும், பெற்றோர்கள் மூத்தக் குடிமக்களாக இருந்தால் ரூ. 55,000 வரையிலும், குடும்பத்தினரும், பெற்றோர்களும் மூத்தக் குடிமக்களாக இருந்தால் ரூ.60,000 வரையிலும் பிரீமியம் தொகைக்கு வரி விலக்குப் பெறலாம்.

பிரிவு 80 டிடிஏ

இந்தப் பிரிவின் கீழ் சேமிப்புக் கணக்கில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் ரூ.10 ஆயிரம் வரை வரி விலக்குப் பெறலாம்.

பிரிவு 80 ஜிஜி

இந்தப் பிரிவின் கீழ் வாடகை வீட்டில் வசிக்கும் தனிநபர், அவர் செலுத்தும் வாடகைக்கு வரி விலக்குப் பெறலாம். ஆண்டுக்கு வரி விலக்காக ரூ.60,000 வரை பெறலாம். இவ்வாறு வாடகையாகச் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறுபவர்களுக்குச் சொந்தமாகவோ அல்லது அவரது பெற்றோர்களுக்கு சொந்தமாகவோ வீடு இருக்கக்கூடாது. இது தவிர, அலுவலகத்தில் வீட்டு வாடகைப்படி (ஹெச்ஆர்ஏ) பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

பிரிவு 80 இ

இந்தப் பிரிவின் கீழ் கல்வி கடனுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்குப் பெற்றுக்கொள்ளலாம். இதனைத் தனது சொந்தப் படிப்பு, குழந்தைகள் படிப்பு, மனைவி மற்றும் சட்டபூர்வமான முறையில் பாதுகாவலராக உள்ள அனைவருக்குமான படிப்புக்கும் பொருந்தும். இந்த வட்டித் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

பிரிவு 24(பி)

வீட்டுக் கடனுக்காகச் செலுத்தப் படும் வட்டித் தொகையில் ரூ.2 லட்சம் வரை ஆண்டுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

பிரிவு 80 இஇ

முதல் முறையாக வீடு வாங்குபவர் களுக்கு வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டித் தொகைக்கு வரி விலக்குப் பெறலாம். இந்த வரிவிலக்கு பெற சில வரைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வாங்கும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டுக் கடன் ரூ.35 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டை 2016-17-ம் நிதி ஆண்டுக்குள் வாங்கி இருக்கவேண்டும். இதன் மூலம் அதிகபட்சமாக வட்டியில் ரூ.50,000 வரை வருமான விலக்கு பெறலாம். பிரிவு 24 (பி)-யின் கீழ் பெறப்படும் சலுகை தவிர, கூடுதலாக இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொகுப்பு: ஞா. சக்திவேல் முருகன்

ரூ.5,000 வரி தள்ளுபடி ..!

வருமான வரி 87 (ஏ) பிரிவின் கீழ் தனிநபரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், ரூ.5,000 வரை வருமான வரி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.



ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum