Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வருமான வரிப் படிவம் 12பிபி... புதிய மாற்றங்கள் என்ன?
Page 1 of 1
வருமான வரிப் படிவம் 12பிபி... புதிய மாற்றங்கள் என்ன?
வருமான வரித் தாக்கல் தொடர்பான விண்ணப்பங்களில் அவ்வப்போது சிற்சில மாற்றங்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில் 12பிபி (12BB) என்கிற படிவம் தற்போது அறிமுகமாகி இருக்கிறது. இது பற்றி மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பல குழப்பங்கள் இருக்கிறது. இந்தக் குழப்பங்களை நீக்கி, தெளிவை உண்டாக்கவே இந்தக் கட்டுரை.
தோராய முதலீட்டுக் கணக்கு!
ஆண்டு தொடக்கத்திலும் இறுதியிலும் ஊழியர் அவருடைய முதலீடு மற்றும் செலவுகளை நிறுவனத்துக்கு அறிவிக்க வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் சமர்பிக்கும் முதலீட்டுக் கணக்கு தோராயமானதே. ஆண்டு இறுதியில் ஊழியர் தகுந்த ஆதாரத்தோடு முதலீடுகளை சமர்பிக்க வேண்டும்.
தோராய முதலீடு மற்றும் செலவு அடிப்படையில் சம்பளத்திலிருந்து மூல வரி (டிடிஎஸ்) கழிக்கப்படும். மே 2016 வரை இந்த அறிவிப்பை ஊழியர்கள் அந்தந்த நிறுவனத்தின் படிவத்தில் சமர்பித்தனர்.
இதில் சிலவற்றுக்கு வரி விலக்கு தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்டால் போதும். ஆதாரம் சமர்பிக்கத் தேவையில்லை என இதுவரை இருந்தது.
இனி அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
புதுப் படிவம் - 12BB
ஜூன் 1, 2016-லிருந்து ஊழியர் முதலீடு மற்றும் செலவுகள் குறித்த அறிவிப்பை இந்தப் படிவத்தில் பூர்த்தி செய்து ஆவண ஆதாரங்களோடு நிறுவனத்துக்கு சமர்பிக்க வேண்டும். இந்தப் படிவம் மாதச் சம்பளம் ஈட்டுபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
12BB எதற்காக?
இந்தப் படிவம்தான் சம்பள தாரர்களுக்கு நான்கு விதமான செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்க உபயோகப்படும். அவை: 1. பயண விடுப்பு உதவித் தொகை (Leave Travel concession), 2. வீட்டு வாடகை உதவித் தொகை (House Rent Allowance), 3. வீட்டுக் கடன் மீது வட்டி (Interest on Housing loan), 4. அத்தியாயம் VI-A வரி விலக்கு (chapter VI-A Decduction). இந்தப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது என்னென்ன ஆவணங்கள் உடன் சமர்பிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்!
ஆவண ஆதாரங்கள்!
பயண விடுப்பு உதவித் தொகைக்கு: 1.டிக்கெட், போர்டிங் பாஸ், பயண முகவர் ரசீது முதலியனவற்றையும், 2.வாகனம் வாடகைக்கு எடுத்தால் கார் வாடகை ரசீதினையும் தரவேண்டும். முக்கிய குறிப்பு: சர்வதேச விமான டிக்கெட் செல்லாது. இந்தியாவுக்குள் பயணம் செய்த டிக்கெட் மட்டும் ஆதாரமாக கருதப்படும்.
வீட்டு வாடகை உதவித் தொகைக்கு: 1.பெயர் மற்றும் முகவரி - ஆண்டு வாடகை ரூ.1 லட்சம் தாண்டினால், 2.வீட்டு உரிமையாளரின் பான் நம்பர், 3. வாடகை ஒப்பந்தம், 4. ஸ்டாம்ப் ஒட்டிய வாடகை ரசீதுகளை சமர்பிக்க வேண்டும்.
வீட்டுக் கடன் வட்டி : 1.கடன் கொடுத்தவர் / நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் பான் எண், 2.வீட்டுக் கடன் வட்டி திருப்பி செலுத்தியதற்கான சான்றிதழைத் தரவேண்டும்.
அத்தியாயம் VI-A வரி விலக்கு (80சி, 80சிசிசி, 80டி, 80டிடி, 80ஈ, 80ஜி, 80டிடிஏ, 80யூ): 80சி சேமிப்பு ரூ.1,50,000 வரை - 1.ஆயுள் காப்பீடு பிரீமியம் பணம் செலுத்திய ரசீது, 2.பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டண ரசீது, 3. வங்கி 5 ஆண்டு நிரந்தர வைப்பு நிதி ரசீது.
4.வீட்டுக் கடனில் அசல் திருப்பிச் செலுத்தியதற்கான சான்றிதழ் (80சிசிசி - ஓய்வூதியம்): 1.வங்கிக் கணக்கு புத்தகம் / அறிக்கை, 2. ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்திய ரசீது.
80டி மருத்துவக் காப்பீடு: 1. மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்திய ரசீது, 2.மருத்துவ பரிசோதனை செலவு ரசீது.
80டிடி சார்ந்த நபர் பராமரிப்பு: 1.குடும்பம் சார்ந்த நபரின் மருத்துவக் காப்பீடு பிரீமியம் ரசீது மற்றும் பராமரிப்புச் செலவு, 2.மருத்துவரிடமிருந்து படிவம் 10IA சான்றிதழ், 3.மருத்துவச் செலவு ரசீது.
80ஈ - கல்விக் கடன் வட்டி: 1.வங்கியில் வட்டி கட்டியதற்கான சான்றிதழ், 2.கல்விக் கடன் திருப்பி செலுத்தும் அட்டவணை 80ஜி நன்கொடை: 1.நன்கொடை ரசீது, 2. நன்கொடை தருபவரின் / நிறுவனத்தின் பான் எண் - 80டிடிஏ (80TTA) - வங்கி சேமிப்பு வட்டி வரவு: 1.வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் அல்லது 2.வங்கி மேலாளரிடமிருந்து வங்கி சேமிப்பு வட்டி சான்றிதழ்- 80யூ - இயலாமை வரி விலக்கு: 1.சிகிச்சை செலவுகளுக்கான கட்டணம் ரசீது, 2.படிவம் 10IA -ல் மருத்துவரின் சான்றிதழ்
இந்தப் புதிய வருமான வரிப் படிவம் சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு சுகமாக இருக்குமா அல்லது சுமையாக இருக்குமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்
» வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?
» வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» புதிய அரசிடம் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்பது என்ன
» வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?
» வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
» புதிய அரசிடம் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்பது என்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum