வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி !

Go down

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி ! Empty உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி !

Post by தருண் Sat Dec 14, 2013 8:43 am

இன்றைய பொருளாதாரத்தில் வட்டி என்பது தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்க்கையுடன் பின்னிப்  பிணைந்திருக்கிறது. நாம் வேண்டாம் என்று சொன்னாலும், நம்முடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பு வைத்திருக்கிறது இந்த வட்டி. வட்டி இல்லாமல் நம் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்ட நிலையில், வட்டி என்றால் என்ன, அதனால் நம் வாழ்க்கையில் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை நம் எல்லோரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

வட்டி என்பது..?

வட்டி என்றால் என்ன என்று விளக்கிச் சொல்வது கடினம். ஆனால், அதை அனுபவப்பூர்வமாக உணர்வது எளிது. வட்டியை மூலதனத்தின் விலை என்று சொல்லலாம். நாம் வாங்கும் பணத்துக்கு உரிய வாடகை என்றும் கூறலாம். அடுத்தவரின் பணத்தைப் பயன்படுத்த நாம் தரும் விலை என்றுகூட சொல்லலாம். இன்னும் சிலர் வட்டியை வாய்ப்புக்கான விலை என்றுகூட சொல்கிறார்கள்.

வட்டி தரும் நன்மைகள்!

எதையும் இன்றே அனுபவிக்க வேண்டுமெனில், வட்டிகட்டத் தயங்கக் கூடாது. பணம் கிடைக்கும்போது அனுபவித்துக்கொள்கிறேன் எனில், வட்டி எதுவும் செலுத்தவேண்டாம். ஆனால், வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இருக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்றைக்கு 25 வயது இளைஞன்கூட வீடு வாங்குகிறான். கடன் இல்லாமல் (வட்டி செலுத்தாமல்) இன்றைய இளைஞர்கள் வீடு வாங்க முடியுமா? அதேபோல, கடன் இல்லாமல் இன்று பலராலும் கார் வாங்க முடியாது. கடன் இல்லாமல் பல இளைஞர்கள் கல்வி கற்று இவ்வளவு உயர்ந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. கடன் இல்லாமல் பல தொழிலதிபர்கள் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கவே முடியாது. அவ்வளவு ஏன், நம் மத்திய, மாநில அரசாங்கங்கள் பல சமுதாய நலத்திட்டங்களை அமல்படுத்துவது, மக்களிடம் இருந்து கடன் வாங்கிய பணத்தின் மூலம்தான். இப்படி (கடன் வாங்கி) வட்டிச் செலுத்துவதினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.  

தீமைகள்!

வட்டி என்பது இருபக்கமும் கூர்மையாக இருக்கும் கத்திபோல. அதை சரியாகப் பிடிக்காவிட்டால், அது நம் கையை பதம்பார்த்துவிடும். வட்டி அதிகமாக இருக்கும்போது நமது வீடு, கார் மற்றும் பிற இ.எம்.ஐ-களுக்கான தொகை  அதிகமாகிறது. அதனால், நம் கையில் மாதக் கடைசியில் இருக்கும் கையிருப்பு குறைகிறது. இது நமது வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கின்றன. விலை உயரும் அளவுக்கு, நம் சம்பாத்தியம் உயராவிட்டால் கஷ்டமே. வட்டி உயர்வினால், அரசாங்கம் பல திட்டங்களைத் தள்ளிப்போடுகிறது. கல்விச் செலவு அதிகமாகிறது. வட்டி உயர்வு ஒரு தொற்றுநோய் போன்றது. அது நமது தினசரி வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தினையும் பாதிக்கும்.  அதேசமயம், நாம் செய்திருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற முதலீடுகளுக்கு அதிக வருமானமும் கிடைக்கும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு, சேமிப்பைவிட செலவுதானே அதிகமாக உள்ளது? மொத்தத்தில் வட்டி உயர்வால், பலருக்கும் நெகட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ்தான்.

இரண்டுவகை வட்டி!

வங்கிகளில் கடன் வாங்கும்போது பொதுவாக ஆண்டு வட்டியைக் குறிப்பிடுவார்கள். ஆனால், தனி நபர்களிடம் கடன் வாங்கும்போது ஒரு வட்டி, இரண்டு வட்டி, மூன்று வட்டி என்று மாத வட்டியைக் குறிப்பிடுவார்கள். பொதுவாக, ஆண்டு வட்டியை வைத்து ஒப்பிடும்போதுதான் நாம் வட்டியை அதிகமாகத் தருகிறோமா அல்லது குறைவாகத் தருகிறோமா என்பது தெரியவரும்.

சாதாரண வட்டி!

வட்டியில் இரண்டுவகை உண்டு. ஒன்று, சாதாரண (தனி) வட்டி (Simple Interest). உதாரணத்துக்கு, ஆண்டுக்கு 12% வட்டியில், இரண்டு வருடங்களுக்கு ரூ.10,000 கடன் வாங்கினால், நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி ரூ.2,400 ஆகும். இந்தவகை வட்டியை இன்று கடைப்பிடிப்பவர்கள் மிகமிகக் குறைவு. கூட்டுவட்டிதான் (Compound Interest)இன்று பரவலாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

நாம் மேலே பார்த்த உதாரணத்தில், கூட்டுவட்டியின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருவர் செலுத்தவேண்டிய வட்டித் தொகை ரூ.2,544 ஆகும். முதல் ஆண்டில் ரூ.10,000-க்கு வட்டி ரூ.1,200. இரண்டாம் ஆண்டில் அசல் ரூ.10,000-த்துடன் இந்த வட்டியான ரூ.1,200-க்கும், 12% வட்டி சேர்த்து கணக்கிடப்படும்.

கூட்டுவட்டி!

கூட்டுவட்டியில், ஒவ்வொரு ஆண்டு/காலாண்டு/அரையாண்டு/ மாத முடிவில் வட்டிக் கணக்கு செய்யப்பட்டு, அந்த வட்டிக்கும் வட்டி கணக்கிட்டுத் தரப்படும். நம் வங்கிகள் தரும் கடனுக்கு, மாத அடிப்படையில் வட்டியைக் கணக்கிட்டு வாடிக்கையாளர் களிடமிருந்து பெறுகின்றன. ஆனால், வங்கிகள் வாங்கும் டெபாசிட்க்கு காலாண்டு அடிப்படையில்தான் வட்டியைத் தரும். இவ்வாறு செய்வதால் வங்கிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

நாம் வட்டிகளை ஒப்பிடும்போது ஆண்டு அடிப்படையில் ஒப்பிடுவது தான் சிறந்தது. உதாரணத்துக்கு, நீங்கள் போட்டிருக்கும் டெபாசிட்க்கு வங்கியில் 9% வட்டி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படுவதால், இந்த டெபாசிட்டின் ஆண்டு வட்டி 9.31 சதவிகிதத்துக்கு சமம்.

அதேபோல், நீங்கள் வாங்கியிருக்கும் வீட்டுக் கடனுக்கு உங்கள் வங்கி 10.50% சார்ஜ் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். கடனுக்கு வங்கிகள் மாதாமாதம் வட்டியைக் கணக்கிடுகின்றன. ஆகவே, நீங்கள் செலுத்தும் வட்டி, ஆண்டு அடிப்படையில் 11.02% ஆகும். ஆக மொத்தத்தில், வட்டியாக நாம் தருவது அதிகம்; கிடைப்பது குறைவு!

வட்டியைச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள்!

தனிமனிதர்கள் கடனே இல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. ஆனால், ஓரளவு கடன் வைத்துக்கொள்வதில் தவறில்லை. வீட்டுக் கடன் உங்களின் ஆண்டுச் சம்பாத்தியத்தைப்போல 5 மடங்குக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கடன் ஓரளவு வைத்திருப்பது உங்களின் திறனை அதிகரிக்கும். உங்கள் சோம்பேறித்தனத்தை விரட்டி சுறுசுறுப்பாக ஓடச் செய்யும். அதேபோல், உங்களின் முக்கியத் தேவைகளான வீடு, கார், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே உங்களின் சக்திக்குள் கடனை பெற்றுக் கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!

குறைந்த வட்டியைக் கொடுங்கள்!

நீங்கள் வீட்டு லோன் அல்லது கார் லோன் வாங்கும்போது, குறைவான வட்டியில் எங்கே கடன் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, இரண்டு, மூன்று வங்கிகளில் ஷாப்பிங் செய்வதில் தவறில்லை. அதேபோல, உரிய கடன் ஆலோசனை பெறுவதும் தப்பில்லை. உதாரணமாக, வீட்டுக் கடனாக  உங்களுக்கு ரூ.30 லட்சம் தேவை. இதை 30 ஆண்டுகளுக்கு 10.50% வட்டி என்றால் மாதாந்திர இ.எம்.ஐ ரூ.27,442 நீங்கள் கட்ட வேண்டியிருக்கும்.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி ! Nav08d

இதே காலத்துக்கு இதே கடனை 10% வட்டி எனில், நீங்கள் கட்டவேண்டிய இ.எம்.ஐ ரூ.26,327-தான். மொத்தமாக கூட்டிப்பார்த்தால் 0.5% வட்டி அதிகரிப்பதால் நீங்கள் கூடுதலாக கட்டும் தொகை ரூ.4,01,400 ஆகும். 0.50% வட்டிக்கே இவ்வளவு வித்தியாசம் எனில், வட்டி 1%, 2% அதிகரித்தால், இன்னும் அதிகமாக எவ்வளவு பணத்தைக் கட்டுவீர்கள் என்பதைக் கணக்குபோட்டுக் காட்டினால், நீங்களே வீட்டுக் கடனே வேண்டாம் சாமி என்று ஓடிவிடுவீர்கள்.

ஏமாறாதீர்கள்!

சில நிதி நிறுவனங்களும், வங்கிகளும் (பெரிய வங்கிகள் உட்பட) தங்களது விளம்பரங்களில், யீல்டை பற்றி பெரிதாக விளம்பரம் செய்கின்றன. கூட்டுவட்டியில் வருடங்கள் அதிகரிக்க, அதிகரிக்க யீல்டு அதிகமாகக் காணப்படும்.

உதாரணத்துக்கு, நீங்கள் 5 வருடத்துக்கு ஒரு வங்கியில் 9% வட்டியில் ஒரு டெபாசிட் செய்கிறீர்கள். நீங்கள் வட்டி ஏதும் பெற்றுக்கொள்ளாமல் குமுலேட்டிவ் முறையில் டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். காலாண்டில் வட்டி கணக்கிடப்படுவதால், இந்த வட்டி 9.31% ஆண்டு வட்டிக்குச் சமம். உங்களின் முதிர்வுத் தொகை ரூ.15,605-ஆக இருக்கும். இந்த முதிர்வை சாதாரண யீல்டாக 11.21% ([{(1560510000)/5}/10000] ஜ் 100) என்று விளம்பரம் செய்கின்றன. இதே தொகையை இதே வட்டியில் 6 வருடங்களுக்கு முதலீடு செய்தால் யீல்டு 11.76 சதவிகிதமாக காண்பிக்கும். எனவே, யீல்டைப் பார்த்து முதலீடு செய்யாதீர்கள். வருட வட்டியைப் பார்த்து முதலீடு செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி ! Nav08e

வட்டி குட்டி போடும்!

வட்டி குட்டி போடும் என்பது வேடிக்கை அல்ல, நிஜம். வட்டி என்பது நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கும். நீங்கள் ரூ.10,000-த்தை ஆண்டுக்கு 9% என்ற அடிப்படையில் ஒரு வங்கியில் குமுலேட்டிவ் டெபாசிட்டில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதேசமயம், மற்றுமொரு வங்கி 0.50% அதிகமான வட்டியைத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். காலகட்டத்தைப் பொறுத்து, உங்களுக்கு எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்பதை பெருகும் வட்டி என்கிற அட்டவணையில் தந்திருக்கிறேன்.

நீங்கள் போட்ட முதல் ரூ.10,000-தான். ஆனால், காலம் செல்லச்செல்ல, உங்களின் முதிர்வுத் தொகை கூடிக் கொண்டே செல்கிறது. தவிர, 0.50% வட்டி வித்தியாசம், நீண்டகாலத்தில் உங்களுக்கு எவ்வளவு பணத்தை அள்ளித் தருகிறது என்பதையும் அட்டவணையைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இது வெறும் 10,000 ரூபாய் முதலீட்டுக்கு! நீங்கள் லட்சங்களில் / கோடிகளில் முதலீடு செய்யும்போது எவ்வளவு பணம் அதிகமாகக் கிடைக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! இதுதான் வட்டியின் அதிசயம்! உங்கள் இளம் வயதில், நீங்கள் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்தால், உங்கள் முதிய பருவத்தில் வட்டி பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி ! Nav08f

சி.டி லேடரிங்!

வட்டி உயர்ந்துகொண்டே இருக்கும்போது அல்லது ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும்போது, டெபாசிட்களையே நம்பி வாழ்பவர்கள் சி.டி லேடரிங் (CD Laddering)என்கிற கான்செப்ட்டை பயன்படுத்தலாம்.

உதாரணத்துக்கு, உங்களிடம் ரூ.9 லட்சம் பணம் உள்ளது. அதை நீங்கள் சி.டி.யில் (Cumulative Deposit) போட விரும்புகிறீர்கள். அதை மூன்று பங்காகப் பிரித்துகொள்ளுங்கள். முதல் மூன்று லட்சத்தை, ஓர் ஆண்டு சி.டி-யில் முதலீடு செய்யுங்கள். இரண்டாவது மூன்று லட்சத்தை, இரண்டு ஆண்டு சி.டி-யில் முதலீடு செய்யுங்கள். மூன்றாவது மூன்று லட்சத்தை, மூன்று ஆண்டு சி.டி-யில் முதலீடு செய்யுங்கள். முதல் மூன்று லட்சம் ஓர் ஆண்டு கழித்து முதிர்வுறும்போது, அதை மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பியுங்கள். அதேபோல், ஒவ்வொரு சி.டி முதிர்வுறும்போதும், மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பியுங்கள்.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி ! Nav08k

இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் உங்களிடம் லிக்விடிட்டி இருக்கும். மேலும், மூன்று ஆண்டுகள் சி.டி-யில் போடும்போது அதிகபட்ச வட்டியும் கிடைக்கும். ஏணிபோல் தொடர்ந்துகொண்டு இருப்பதால், இந்த முறையை 'சி.டி லேடரிங்’ எனக் கூறுகிறார்கள்.

ஆக மொத்தத்தில், நல்ல, கெட்ட விஷயங்களைக்கொண்ட இந்த வட்டியை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால், நம்மால் நிச்சயமாக நிறைய பணத்தைச் சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அரசாங்கப் பத்திர முதலீடு: ரிஸ்க் மற்றும் ரிவார்டு!


நமது மத்திய அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள்தான், ரிஸ்க்கே இல்லாத முதலீடு ஆகும். இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படும்போது, என்ன வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதுதான் முதிர்வுக் காலம் வரை தரப்படும். சந்தையில் வட்டி விகிதங்கள் ஏறிஇறங்கினாலும், ஏற்கெனவே விற்கப்பட்ட பத்திரத்தின் வட்டியில் ஏதும் ஏற்றஇறக்கம் இருக்காது.
நமது வங்கி டெபாசிட்டைப்போல் அல்லாமல், இந்தப் பத்திரங்களை எளிதாக சந்தையில் வாங்க, விற்க முடியும். அவ்வாறு வாங்கி விற்கும்போது, அன்றைய வட்டி நிலைமையைப் பொறுத்து இந்தப் பத்திரங்களின் விலை நிர்ணயிக்கப்படும்.
உதாரணத்துக்கு, நீங்கள் நமது அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட 8% வட்டி கொண்ட பத்திரத்தை ரூ.1 லட்சத்துக்கு வாங்கி வைத்துள்ளீர்கள். திடீரென்று உங்களுக்குப் பணம் தேவை. அந்தப் பத்திரத்தை வேறொருவருக்கு விற்றுவிடலாம் என்று சந்தைக்கு கொண்டு வருகிறீர்கள்.

அந்தசமயம், அரசாங்கம் 9% வட்டி தரக்கூடிய பத்திரங்களை வெளியிட உள்ளது எனில், நீங்கள் வைத்திருக்கும் 8% வட்டி தரும் பத்திரத்தை யாரும் வாங்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், போடும் முதலீட்டுக்கு அந்தப் பத்திரம் அதிக வருவாயைத் தருகிறது அல்லவா? ஆகவே நீங்கள் விற்க வேண்டுமானால் உங்கள் பத்திரத்தைக் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டும்.
இதுவே, நீங்கள் வைத்திருக்கும் பத்திரங்களைவிட குறைந்த வட்டியில் அரசாங்கம் புதிய பத்திரங்களை வெளியிடும்போது உங்களின் பத்திரத்தின் விலை உயர்ந்துவிடும். இதுதான் அரசாங்கப் பத்திர முதலீட்டில் உள்ள ரிஸ்க் மற்றும் ரிவார்டு. நீங்கள் வைத்துள்ள பத்திரத்தை அதன் முதிர்வுக் காலம் வரை விற்கப்போவதில்லை என்றால், ரிஸ்க் ஏதும் இல்லை.

வட்டி: எப்படி நிர்ணயிக்கிறார்கள்?


இந்த உலகத்தில் எல்லா பொருட்களும் சப்ளை மற்றும் டிமாண்ட் என்கிற இரண்டு விஷயத்தை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிற மாதிரி, பணத்தின் சப்ளை மற்றும் டிமாண்டை வைத்து வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. பணத்துக்கான தேவை அதிகமாக இருந்தால், வட்டி விகிதம் உயர்த்தப்படும். தேவை குறைவாக இருந்தால், வட்டி விகிதம் குறைக்கப்படும்.

வட்டி விகிதத்தைப் பாதிக்கும் இன்னொரு முக்கிய காரணி, பணவீக்கம் அதிகமாகும்போது, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் குறைகிறது. அதனால் அவர்கள் வங்கிகளில் போடும் டெபாசிட்டுக்கு அதிக வட்டியை எதிர்பார்க்கிறார்கள். டெபாசிட்டுக்கு அதிக வட்டி தருவதால், வங்கிகள் தாங்கள் தரும் கடனுக்கு வட்டியை அதிகமாக்குகின்றன. இதுவே பணவீக்கம் குறையும்போது வட்டி குறைகிறது.

நமது ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெபோ ரேட், ரிவர்ஸ் ரெபோ ரேட் என சில உபகரணங்களை வைத்திருக்கிறது. இவற்றுக்கான விகிதங்களை ஏற்றி, இறக்குவதன் மூலம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியால் ஏற்றிஇறக்க முடியும்.

கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து / கடன் வாங்கும் நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங்கைப் பொறுத்து, வருமானத்தைப் பொறுத்து வட்டி விகிதம் வேறுபடும். கிரெடிட் ஸ்கோர் அல்லது கிரெடிட் ரேட்டிங் குறைவாக இருக்கும்பட்சத்தில் வட்டி அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும். சில சமயங்களில் ஸ்கோர் அல்லது ரேட்டிங் குறைவாக இருக்கும்போது கடனே கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

நன்றி -ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum