வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மகாநகர் ஐபிஓ: 65 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

Go down

மகாநகர் ஐபிஓ: 65 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன Empty மகாநகர் ஐபிஓ: 65 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

Post by தருண் Fri Jun 24, 2016 10:51 am

நேற்று முடிவடைந்த மகாநகர் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முதலீட்டா ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. ஐபிஓ தொகையை விட 65 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இதற் கான பங்கு விற்பனை தொடங்கியது. முதல் நாளிலேயே ஒரு மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இரண்டாம் நாளில் 3.92 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. மூன்றாம் நாளான நேற்று அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதியாக நிர்ணயம் செய்திருந்த தொகையை விட 65 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன.

இந்த ஐபிஓ மூலம் ரூ.1,040 கோடி திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஒரு பங்கு விலையாக ரூ.380 முதல் 421 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர் என அனைத்து பிரிவுகளிலும் இந்த ஐபிஓவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

கடந்த மே மாதம் பாரக் மில்க் பூட்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. சமீப காலங்களில் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தவிர பட்டியலிட்ட பிறகு இந்த பங்குகளில் நல்ல விலையேற்றம் இருக்கிறது.

இந்த ஐபிஓ மூலம் ஏற்கெனவே இருக்கும் கெயில் மற்றும் பிஜி ஏசியா ஆகிய முதலீட்டாளர்கள் 500 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்கின்றனர். இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் மஹாராஷ்டிர அரசு வசம் உள்ளன.

விரைவில் வோடபோன்

ஐபிஓ சந்தைக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் வோடபோன் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கும் என்று தெரிகிறது.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum