Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பக்கா வருமானம் தரும் ஃப்ரான்சைஸ் பிசினஸ்! (Franchise-Business)
Page 1 of 1
பக்கா வருமானம் தரும் ஃப்ரான்சைஸ் பிசினஸ்! (Franchise-Business)
முன்பெல்லாம் படித்து முடித்தபிறகு நல்ல அரசாங்க வேலை கிடைத்தால் போதும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், இன்றைக்கோ சொந்தமாக தொழில் தொடங்கி நடத்துவது என்கிற எண்ணம் பல இளைஞர்களிடம் உருவாகி இருப்பது ஆரோக்கியமான போக்கு.
என்றாலும் என்ன தொழிலை செய்வது, அதை எப்படி நடத்துவது என்கிற குழப்பம் பலரிடமும் இருக்கவே செய்கிறது. தவிர, புதிதாக ஒரு தயாரிப்பை உருவாக்கி, அதை பிரபலப்படுத்தி லாபம் பார்ப்பதற்கு நிறைய காலம் ஆகுமே என்கிற கவலையும் பலரிடம் இருக்கிறது.
இது மாதிரியான குழப்பங்களும், கவலைகளும் கொண்டவர்களுக்கு ஒரு தீர்வாக உருவாகி இருப்பவைதான் ஃப்ரான்சைஸ் பிசினஸ். தொழில் தொடங்கும் ஆர்வம் நிறைய இருக்கிறது; கையில் கொஞ்சம் பணமும் இருக்கிறது. பாப்புலரான பிராண்டும், கொஞ்சம் வழிகாட்டுதலும் இருந்தால் கலக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஃப்ரான்சைஸ் பிசினஸ் மிகப் பொருத்தமாக இருக்கும்.
இன்றைக்கு மக்களிடம் நல்ல பணப்புழக்கம் இருப்பதால், பிராண்டட் பொருட்களை வாங்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே, பிராண்டை மையமாக வைத்து செய்யப்படும் தொழில்களை ஃப்ரான்சைஸ் எடுப்பதற்கான வாய்ப்புகள் நாலாப் பக்கமும் கொட்டிக் கிடக்கிறது. அதனால் வளர்ந்துவரும் தொழில்களில் முக்கிய இடம் ஃபிரான்சைஸுக்கும் இருக்கிறது.
ஃப்ரான்சைஸ் பற்றியும், இன்றைக்கு ஃப்ரான்சைஸ் பிசினஸில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது, இந்தத் தொழிலை எப்படி, எங்கு ஆரம்பிக்கலாம், இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சிஇஓ குமார் ராஜகோபாலனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘ஃப்ரான்சைஸ் என்பது மக்களின் மத்தியில் பிரபலமான பிராண்டை கொண்ட நிறுவனம் தனது தொழிலை விரிவாக்க மேற்கொண்டுள்ள ஒரு வழி என்று சொல்லலாம். ஏனென்றால் ஒரு பெரிய நிறுவனம் தனது தொழிலை எல்லா இடங்களிலும் விரிவாக்க நினைக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் அதனால் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. இதற்கு மாற்றாக தன் நிறுவனத்தின் மூலமாக இன்னொருவருக்கு சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் தனது தொழிலை தனது பிராண்டின் பெயரிலேயே செய்வதற்கான உரிமத்தை வழங்குகிறது. இந்த உரிமத்தை ஃப்ரான்சைஸ் என்று அழைக்கலாம். தனது பிராண்டிலேயே தொழில் செய்வதற்கான உரிமத்தை வழங்குபவர் ஃப்ரான்சைஸர் என்றும், அதனைப் பெற்றுக் கொள்பவர் ஃப்ரான்சைஸி என்றும் அழைக்கப்படுகிறார்கள்
ஃப்ரான்சைஸரே தொழில் தொடங்குபவருக்குத் தேவையான இயந்திரங்கள், ஆலோசனைகள், மார்க்கெட்டிங், விளம்பரங்கள், தொழில் செய்வதற்கான லைசென்ஸ் உட்பட அனைத்து உதவிகளையும் செய்து தந்துவிடுவார்கள். தேவையென்றால் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்கூட உதவி செய்வார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் முதலீடு மட்டும்தான். நாம் ஃப்ரான்சைஸ் எடுக்கப் போகிற நிறுவனத்தின் விதிமுறைகளையும், செய்யப் போகிற ஒப்பந்தங்களையும் பொறுத்து முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
நீங்கள் புதிதாக தொழிலைத் தொடங்கி, ஒரு பிராண்டை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க சில காலம் ஆகிவிடும். ஆனால், மக்களுக்கு நன்கு தெரிந்த மெக் டொனால்டு அல்லது நீல்கிரீஸ், ஆவின் போன்ற ஒரு பிராண்டை ஃப்ரான்சைஸ் எடுக்கும்போது மார்க்கெட்டிங் என்ற பிரச்னையே இல்லை.
ஃப்ரான்சைஸைப் பொறுத்துவரை, பிராண்டிங் என்பதுதான் மிக முக்கியமானது. ஃப்ரான்சைஸ் எடுப்பதால் ஏற்படுகிற முக்கியமான நன்மை எதுவென்று பார்த்தால், சுலபமாக நமக்கு மார்க்கெட்டிங் கிடைத்துவிடும். மார்க்கெட்டிங் சுலபமாக கிடைப்பதால், நம்மால் விற்பனையையும் சுலபமாக செய்துவிட முடியும். பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை.
ப்ளே ஸ்கூலில் ஆரம்பித்து ஃபுட் புராடக்ட்ஸ், அழகு நிலையம்,ஜூவல்லரி, கார்மென்ட்ஸ், பார்மா என்று அனைத்து வகையான நிறுவனங்களிலும் நல்ல ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் காலத்தில் மளிகைக் கடைகளில்கூட ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் உருவாகிவிடும்.
இந்தத் தொழிலில் இறங்கும்போது எந்த நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் எடுக்கப்போகிறோம் என்பதை நன்கு தெரிந்துகொண்டு எடுப்பது அவசியம். சிலர் இது பற்றி எல்லாம் யோசிக்காமல் ஏதோ ஒரு நிறுவனத்தை ஃப்ரான்சைஸ் எடுத்துவிடுகின்றனர். இது சரியான அணுகுமுறை அல்ல. நீங்கள் தொழில் தொடங்கப் போகிற இடத்தில் எந்தப் பொருளுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பொருளை உற்பத்தி செய்கிற நிறுவனத்தின் பிராண்டை ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் ப்ளே ஸ்கூல் நன்றாக போகும். இன்னொரு இடத்தில் ப்ளே ஸ்கூலுக்கான தேவையே இருக்காது. அதனால் நம்முடைய வாடிக்கையாளர்கள் யார், அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் எந்த பிராண்டை ஃபிரான்சைஸ் எடுக்கப் போகிறீர்களோ, அந்த பிராண்ட்டை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, வியாபாரம் செய்வதற்கான திறமை இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் பிசினஸ் செய்யப்போகிற சந்தையைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் சுமார் 1.2 கோடி கடைகள் இருக்கின்றன. இதில் பிராண்டட் கடைகள் என்று பார்த்தால் 10 சதவிகிதம்கூட இருக்காது. வருங்காலத்தில் எல்லா செக்டார்களிலும் புதிது புதிதாக பிராண்டுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஃப்ரான்சைஸ் பிசினஸுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. இப்போதெல்லாம் பெரிய நிறுவனத்தில் வேலை செய்தவர்கள்கூட அந்த நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் ஆகிவிடுகிறார்கள். இதிலிருந்தே ஃப்ரான்சைஸ் பிசினஸின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
நாம் ஃப்ரான்சைஸ் எடுக்கப் போகிற பிராண்ட் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க, நல்ல தரமான பிராண்டா என்பதையும், எந்த இடத்தில் ஃப்ரான்சைஸ் திறக்கப் போகிறோமோ அந்த இடத்தில் ஃப்ரான்சைஸ் எடுத்த பிராண்டுக்கான தேவையும், வாடிக்கையாளர்களும் இருக்கிறார்களா என்பதையும் ஆராய வேண்டும். சில சமயங்களில், ஃப்ரான்சைஸர் தனது ஃப்ரான்சைஸிக்கு சரியான தொழில் ஆதரவு தராமலே இருப்பார். அதனால் ஃப்ரான்சைஸர் நாம் செய்யப் போகும் பிசினஸூக்கு எந்த அளவில் ஆதரவாக இருப்பார் என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும்.
ஃப்ரான்சைஸ் தொழில் செய்வதற்கு சில லட்சங்கள் முதல் கோடிகள் வரை முதலீடாக தேவைப்படலாம். ஃப்ரான்சைஸ் தருவதற்காக நிறுவனங்கள் கேட்கும் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். ஃப்ரான்சைஸ் எடுப்பதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் தொகையையும் தாண்டி லாபம் பெற முடியுமா என்பதையும் கட்டாயம் பார்க்கவேண்டும். அதே நேரத்தில், ஒரு நிறுவனம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நமக்கு ஃப்ரான்சைஸ் தருகிறது. அதனால் அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை எந்த வகையிலும் நாம் சீர்குலைத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் முதற்கொண்டு காப்பி ஷாப் வரைக்கும் எல்லா துறைகளிலும் ஃப்ரான்சைஸூக்கான வாய்ப்புகள் இருக்கிறது. நாம்தான் நம் கண்களைத் திறந்து நாலாப் பக்கமும் பார்க்க வேண்டும். இன்டர்நேஷனல் பிராண்டுதான் என்று பார்க்காமல், டெல்லியில் ஒரு உணவுப் பொருள் நன்றாக போகிறதென்றால், அதற்கு ஃப்ரான்சைஸ் எடுத்து சென்னைக்கு கொண்டு வரலாம். வித்தியாசமான, புதிதான எந்தவொன்றுக்கும் மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்த பிசினஸை பொறுத்த வரை, மக்களின் தேவையை அறிந்து நாம் எவ்வளவு புதிதாக, வித்தியாசமாக செய்யப் போகிறோம் என்பதில்தான் இதன் வெற்றியும், நமக்கு கிடைக்கப் போகும் லாபமும் அடங்கியிருக்கிறது.
ஒரு பெரிய நிறுவனத்தின் பிராண்டை ஃப்ரான்சைஸ் எடுக்கப் போகிறோம் என்றில்லாமல், ஒரு பெரிய நிறுவனத்தின் கிளையைத் திறக்கப் போகிறோம் என்ற ஆர்வத்துடன் வாடிக்கை யாளரையும், சந்தையையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், இந்தத் தொழிலில் ஒரு நிலையான இடத்தை நம்மால் பிடித்துவிட முடியும்’’ என்று முடித்தார்.
முழுமனதுடன் ஆர்வத்துடன் ஈடுபட்டாலே சுலபமாக ஜெயித்துவிட முடியும் ஃப்ரான் சைஸ் பிசினஸை கொஞ்சம் கவனத்தில் கொள்ளலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்... பாதுகாப்பான முதலீடு, பக்கா வருமானம்!
» பக்கா லாபம் தரும் பாக்கு மட்டை!
» தேங்காய் எண்ணெய் பிசினஸ்
» உங்கள் பிசினஸ் உத்தியை 35 வார்த்தைகளில் கூற முடியுமா?
» பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!
» பக்கா லாபம் தரும் பாக்கு மட்டை!
» தேங்காய் எண்ணெய் பிசினஸ்
» உங்கள் பிசினஸ் உத்தியை 35 வார்த்தைகளில் கூற முடியுமா?
» பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum