Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் பெஸ்ட்!
Page 1 of 1
டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் பெஸ்ட்!
டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் பெஸ்ட்!
மும்பை நிதி ஆலோசகர் ரவி ஜெத்தானி
''பல நிதித் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு எந்தப் பலனும் அளிக்காமல் போவதற்குக் காரணம், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் குறிக்கோள்கூடத் தெரியாமல் முதலீட்டுத் திட்டங்களை சில ஏஜென்ட்டுகள் விநியோகிப்பதால்தான்' என்கிறார், சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர் ரவி ஜெத்தானி. மும்பையைச் சேர்ந்த இவர் இந்திய அளவில் முதலீட்டாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வாங்கித் தந்திருக்கிறார்.
2002-ல் ஐ.டி துறையில் ஏற்பட்ட சரிவை அடுத்து, பங்குச் சந்தை ஷேர் புரோக்கராக இருந்த இவர், பகுதிநேர வேலையாக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்கத் தொடங்கினார். பத்து பேரை சந்தித்தால் ஒருவர் பாலிசி எடுப்பதுகூட அரிதாக இருந்த காலமது. இருந்தாலும், அதனை எல்லாம் சமாளித்து, பலரையும் பாலிசி எடுக்க வைத்தார். ஒருகட்டத்தில் முழுநேர இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகக் களமிறங்கினார். கஷ்டப்பட்டு உழைத்ததில் கமிஷனாக மட்டுமே பல கோடி ரூபாய் சம்பாதித்தார். தற்போது இவர் சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் கோர்ஸ் முடித்து, முக்கியமான நிதி ஆலோசகராக உயர்ந்திருக்கிறார். இந்தித் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்நடிகைகள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள் எனப் பிரபலங்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் இவரது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். 45 வயதான இவர் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தபோது, நாம் அவரைச் சந்தித்தோம்.
''முதலீட்டாளர் நலன் முதலில் என்கிற இலக்கோடு எங்களின் பீயாண்ட் லைஃப் (Beyond Life) நிறுவனத்தின் மூலம் முதலீட்டு ஆலோசனை களை அளித்து வருகிறோம். முதலீடு செய்யும்முன் ஒருவர் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். அதுவும் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது அவசியம்.
டேர்ம் பிளான் எடுக்கும்போது வயதுக்கு ஏற்ப கவரேஜ் தொகை இருக்க வேண்டும். ஆண்டுச் சம்பளத்தின் அடிப்படையில் இந்த கவரேஜ் இருக்க வேண்டும். 25-30 வயதானவர்கள் அவர்களின் ஆண்டுச் சம்பளத்தைப்போல் 20 மடங்கு தொகைக்கு கவரேஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். 30-40 வயதானவர்கள் 10 மடங்கும்,40 வயதுக்குமேல் 5 மடங்கும் கவரேஜ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டேர்ம் பிளான்தான் லைஃப் இன்ஷூரன்ஸுக்கு பெஸ்ட். ஒருவர் 1 கோடி ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால், அதில் 12 லட்சம் ரூபாய்க்கு மட்டும் எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்துவிட்டு, மீதியை டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸாக எடுத்துக்கொள்வது நல்லது. டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸுக்கு குறைவான பிரீமியத் தொகை செல்வதால், முதலீடு செய்ய அதிகத் தொகை கையில் இருக்கும். நான் என்னிடம் முதலீடு ஆலோசனைக் கேட்டு வருபவர்களுக்கு எல்லாம் டேர்ம் பிளானைத்தான் பரிந்துரை செய்கிறேன். நிதி ஆலோசனைக் கேட்டு என்னைத் தேடி வருகிற முதலீட்டாளர்களுக்குச் சரியான தொகைக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் எடுத்துக் கொடுத்துவிட்டுதான், மற்ற முதலீட்டுத் திட்டங் களை ஆரம்பிக்கிறோம்'' என்றவர், ஏஜென்ட்டுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு டிப்ஸ் கொடுத்தார்.
''இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் முதலீட்டாளர்களைக் குடும்ப உறுப்பினர்களாகக் கருதி செயல்பட வேண்டும். அப்போதுதான் தவறான பாலிசிகளை விற்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படாது. முதலீட்டாளர்கள், பிரீமியம் கட்டுவதாக இருந்தாலோ, முதலீடு செய்வதாக (எஸ்ஐபி) இருந்தாலோ சரியான தேதியில் கட்டுவது அவசியம். போதிய அளவுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறிப்பாக, டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியம். தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் ஒரு குடும்பத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முதலீட்டையும் அஸெட் அலோகேஷன் முறையில் முதலீடு செய்வதுடன், ஆறு மாதத்துக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோவை ஆராய்வது நல்லது' என்றார் ரவி. அட, நல்ல டிப்ஸ்தான்!
--ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்!
» A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
» எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா?
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: இது இருந்தால் போதும்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஆன்லைனில் எடுப்பது லாபமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum