Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குறுகிய கால முதலீடு... எது பெஸ்ட்?
Page 1 of 1
குறுகிய கால முதலீடு... எது பெஸ்ட்?
கையில் காசு இருந்தால், அது ஏதாவது ஒரு வழியில் செலவாகிவிடுகிறது என்பது நம் எல்லோரின் அனுபவம். உதாரணமாக, குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட இருபதாயிரம் ரூபாய் கையில் இருக்கிறது. அல்லது, வீடு வாங்க ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இந்த செலவுகள் இன்னும் சிறிது காலம் கழித்துதான் வரும் என்கிற போது, இந்தப் பணத்தை எந்த முதலீட்டுத் திட்டத்தில் போட்டுவைத் தால் பணம் பத்திரமாக இருப்பதுடன், ஓரளவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதுபோன்ற முதலீடுகள் குறித்து நிதி ஆலோசகர் முகுந்தனிடம் கேட்டோம்.
ஃபிக்ஸட் டெபாசிட்!
“எப்போது பணம் தேவைப்படும் என்று தெரிந்தவர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் 8 - 9 சதவிகித வட்டி வருமானம் கிடைக்கும். டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து முதிர்வுக்கு முன்னால் பணம் எடுத்தால் வட்டி இழப்போடு அபராதத் தொகையும் இருக்கும். மேலும், ஒரு லட்சம் ரூபாயை ஆறு மாத காலத்துக்கு டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அடுத்த இரண்டு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்த் தேவைப் படுகிறது எனில், அந்த அளவுக்கான பணத்தை மட்டும் எடுக்க முடியாது. டெபாசிட்டை மொத்தமாக திரும்ப எடுத்து, அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை இன்னொரு டெபாசிட்டாகத்தான் போட முடியும். இந்தச் சமயத்தில் வங்கியில் டெபாசிட் வைத்திருந்த நாட்களுக்கு மட்டும்தான் வட்டி கிடைக்கும். அதுவும் டெபாசிட்டை எடுக்கும் தேதியில் என்ன வட்டியோ அந்த வட்டிதான் கிடைக்கும்.
ஃப்ளெக்ஸி டெபாசிட்!
அடுத்து, சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகை குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேலே போகும்போது ஃப்ளெக்ஸி டெபாசிட்டாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதாவது, உங்களின் சேமிப்புக் கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறீர்கள் எனில், 10 ஆயிரம் ரூபாய்க்குமேல் உள்ள தொகையை ஃப்ளெக்ஸி டெபாசிட்டாக மாற்றிக்கொள்ளுங்கள் என வங்கியில் எழுதித்தந்துவிட்டால் போதும். 10 ஆயிரம் ரூபாய்க்குமேல் இருப்பு இருக்கும்போதெல்லாம் மீதமுள்ள தொகை டெபாசிட்டாக மாறிவிடும். அதாவது, இருப்பு தொகைக்குமேல் டெபாசிட்டாக எடுக்கும் தொகை குறிப்பிட்ட அளவாக இருக்க வேண்டும். உதாரணமாக, 10 ஆயிரத்துக்குமேல் சேரும் ஒவ்வொரு 5 ஆயிரம் ரூபாயும் டெபாசிட்டாக மாற்றுவார்கள். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். இந்த டெபாசிட் எவ்வளவு நாட்களுக்கு இருக்கிறதோ, அந்த நாட்களுக்கு மட்டும் வட்டி கிடைக்கும்.
குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட்!
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்தைவிட ஓரிரு சதவிகிதம் அதிக வருமானம் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை என்கிறபோது குறுகிய கால கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்ததாக இருக்கும். இதில் லிக்விட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், எப்போது பணம் தேவைப்பட்டாலும் எந்தவிதமான அபராதமும் இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். எஸ்எம்எஸ் மூலமாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.
வரிக்குப் பின் கிடைக்கும் வருமானம்!
இந்த முதலீடு மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வருடமாக இருந்த கால அளவு மூன்று வருடமாக மாற்றப்பட்டுள்ளது. வரிக்குப் பின்னும் 5.5-7.2 சதவிகித வருமானம் கிடைக் கும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டை இடையில் எடுக்கும்போது மொத்த மாகவே 4 - 5 சதவிகித வருமானம்தான் கிடைக்கும். இதில் வருமான வரி போக உங்களுக்கு சுமார் 3 சதவிகித வருமானம்தான் கிடைக்கும்.
குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் என எதுவாக இருந்தாலும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பங்குச்
சந்தையின் அடிப்படையில்தான் செயல்படும். ஆனால், இந்தக் குறுகிய கால தேவைகளுக்காக கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகையை ஃபண்ட் நிறுவனம், தரமான கம்பெனி டெபாசிட், அதிக ரேட்டிங் பெற்ற பாண்டுகள், அரசு கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யும். இந்த முதலீடுகள் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பிரதிபலிக்காது. எனவே, முதலீட்டின் மீதான வருமானம் என்பது நிச்சயம் இருக்கும்.
கையில் இருக்கும் பணம் பத்திரமாகவும் இருக்க வேண்டும்; தேவைப்படும் நேரத்தில் எடுக்கவும் முடிய வேண்டும். ஓரளவு வருமானமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்சொன்ன முதலீடுகளைத் தாராளமாக பரிசீலிக்கலாம்!
ந. விகடன் ஃபிக்ஸட் டெபாசிட்!

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்?
» நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு... பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்
» பெஸ்ட் பாலிசிகள்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் பெஸ்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum